உள்ளடக்கத்துக்குச் செல்

இவாங்கா டிரம்ப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இவான்கா ட்ரம்ப்
ஜனாதிபதியின் முதல் குழந்தை[1]
பதவியில் உள்ளார்
பதவியில்
மார்ச் 29, 2017
குடியரசுத் தலைவர்டோனால்ட் டிரம்ப்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
இவானா மேரி ட்ரம்ப்

அக்டோபர் 30, 1981 (1981-10-30) (அகவை 42)
நியூயார்க் அமெரிக்கா
தேசியம்அமெரிக்கன்
அரசியல் கட்சிசுயேச்சை (அரசியல்)
துணைவர்
ஜெரார்டு குசார் (தி. 2009)
பிள்ளைகள்3
பெற்றோர்
உறவினர்கள்பார்க்க : ட்ரம்ப் குடும்பம்
முன்னாள் கல்லூரி
இணையத்தளம்www.ivankatrump.com

இவாங்கா டிரம்ப் (Ivanka Marie Trump, 30 அக்டோபர் 1981) என்பவர் அமெரிக்கக் குடியரசுத் தலைவர் டோனல்ட் டிரம்ப்பின் மகள் ஆவார். இவருடைய தாயார் டோனல்ட் டிரம்ப்பின் முதல் மனைவி இவானா டிரம்ப் ஆவார்.

மாதிரி அழகியாகவும் வணிகம் புரிபவராகவும் இவாங்கா டிரம்ப் இருந்தார். தற்சமயம் தம் தந்தையான டோனல்ட் டிரம்புக்கு அரசு அலுவல்களில் ஆலோசகராக இருந்து வருகிறார்.

அமெரிக்கத் தலைமையகமான வெள்ளை மாளிகையில் சம்பளம் பெறாத அலுவலர் எனக் கருதும் வகையில் அலுவலக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். இது அமெரிக்க அரசியலில் பெரும் விவாதத்தை எழுப்பியுள்ளது.[2]

ஆரம்பகால வாழ்க்கை

[தொகு]

இவானா மேரி டிரம்ப் [3]மன்ஹாட்டன், நியூயார்க் நகரத்தில் இவானா மேரி மற்றும் டோனால்ட் டிரம்ப் (அமெரிக்காவின் 45 ஆவது ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுத் தலைவர் [4] ஆவார்) தம்பதியின் மகளாகப் பிறந்தார்.

இவர் தன்னுடைய தாயின் சுருக்கப்பெயரான ''இவானா'' என்றே அழைக்கப்பட்டார்[5]. டிரம்பினுடைய பெற்றோர் 1992 ஆம் ஆண்டு திருமண முறிவு பெற்றனர், அப்போது இவானாவிற்கு பத்து வயது இருந்தது.[4][6]

டிரம்ப் தன்னுடைய 15 ஆவது வயது வரை மன்ஹாட்டன் நகரில் உள்ள சாபின் பள்ளியில் பயின்றார். பின்பு அவர், வாலிங்ஃபோர்ட், கன்னெக்டிகட்டிலுள்ள சோயட் ஹாலில் பயின்றார். அங்கு பயின்ற பள்ளி வாழ்க்கையானது சிறைச்சாலை போன்று இருந்ததாககவும் அப்போது அவருடைய நண்பர்கள் நியூயார்க்கில் மகிழ்ச்சியாக இருந்ததாகவும் கூறியுள்ளார்.[7] சோயாட்டில் பள்ளிப்படிப்பை முடித்தபிறகு [8] ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில் இரண்டு ஆண்டுகள் பயின்றார். பின்பு பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் 2004 ஆம் ஆண்டில் பொருளாதாரத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.[9][10]

வாழ்க்கை

[தொகு]

வணிகம்

[தொகு]

தன்னுடைய குடும்ப வணிக நிறுவனமான தெ டிரம்ப் நிறுவனங்களில் உதவி தலைமை அதிகாரியாக சேர்வதற்கு முன்பாக ஃபாரஸ்ட் சிட்டி என்டெர்பிரைசஸ் எனும் நிறுவனத்தில் சிறிதுகாலம் பணிபுரிந்தார்.[11] பின்பு 2007 ஆம் ஆண்டில் வைர நிறுவனம் ( டைமண்ட் கார்ப்) ஒன்றில் பங்குதாரராக இருந்தார், பின்பு மன்ஹாட்டன் நகரில் இவாங்கா ஃபைன் நகைக்கடை ஒன்றினை தொடங்கினார்.[12][13] நவம்பர் 2011 அன்று தன்னுடைய விற்பனை நிலையத்தை மடிசன் அவென்யூவிலிருந்து அதிக இட வசதி கொண்ட சோஹோ மாவட்டத்தில் 109 மெர்சர் தெருவிற்கு மாற்றினார்.[14][15]

விளம்பரத் தோற்றம் காட்டல்

[தொகு]

இவாங்கா தன்னுடைய பருவ வயதில் வார இறுதியிலும் , விடுமுறையிலும் மாதிரி அழகியாக இருந்தார் , ஆனால் பள்ளி நாட்களில் அவர் இதுபோன்ற செயல்களில் அவர் ஈடுபட்டதில்லை என் அவரின் தாயார் இவானா டிரம்ப் கூறியுள்ளார்.[16] பின்னாளில் அவர் டிரம்ப் நிறுவனத்தின் அதிகாரியாக ஆனார், மேலும் தான் தொடங்கிய நகைக் கடை , ஆடைகள், காலணிகள் நிறுவனம் போன்ற பல நிறுவனங்களுக்கு தானே மாதிரி அழகியாகவும் தோன்றினார். மேக்சிம் ஹாட் 100 (2007) என்பதின் கருத்துக்கணிப்பில் 83 ஆவது இடம் பிடித்தார். 2007 ஆம் ஆண்டின் சிறந்த 99 பெண்களில் இவருக்கு 99 ஆவது இடம் கிடைத்தது. ஆஸ்க் மென்.காம் 2008 கருத்துக்கணிப்பில் இவருக்கு 84 ஆவது இடம் கிடைத்தது.

தொலைக்காட்சி

[தொகு]

பயிற்சி பெறுபவர்( தி அப்பிரன்டீஸ்) ( The apprentice)

[தொகு]

2006 ஆம் ஆண்டு தன்னுடைய தந்தையின் தொலைக்காட்சி நிறுவனம் நடத்திய தி அப்பிரன்டீஸ் ( The apprentice) எனும் நிகழ்ச்சியில் கரோலின் கெப்செர் என்பவருக்கு ஜில்லெட் டாஸ்க்[17] எனும் பகுதியில் தீர்ப்பளிப்பதற்கு உதவிபுரிந்தார். இதுதான் தொலைக்காட்சியில் அவரின் முதல் நிகழ்ச்சி. நிகழ்ச்சிகளின் போது அந்த அணி வீரர்களிடம் அவ்வப்போது டிரம்ப் கலந்துரையாடல்களிலும் ஈடுபடுவார்.[18]

பிற தொலைக்காட்சிப் பங்களிப்புகள்

[தொகு]

1997 ஆம் ஆண்டில் மிஸ் டீன் அமெரிக்கா என்ற அழகுப் போட்டியினை தொகுத்து வழங்கினார். இதில் அவருடைய தந்தையும் நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தகுந்தது.[16]

2003 ஆம் ஆண்டில் செல்வந்தர்களின் குடும்பத்தில் பிறந்தவர்களின் அனுபவத்தினை வைத்து எடுத்த ஒரு குறும்படத்தில் (பார்ன் ரிச்) சிறப்பு தோற்றத்தில் நடித்தார்.

2006 ஆம் ஆண்டில் புராஜக்ட் ரன்வே எனும் நிகழ்ச்சியில் சிறப்பு நடுவராக பங்காற்றினார்.

2010 ஆம் ஆண்டில் டிரம்பும் தனது கணவரும் புரளி பேசும் பெண் (காசிப் கேர்ள் ) எனும் தொடரின் 6 ஆவது பகுதியில் தங்களையே சித்தரித்துக் கொண்டனர்.[19]

2015 ஆம் ஆண்டு சனிக்கிழமை இரவு நேரலை(saturday night live) எனும் நிகழ்ச்சியில் இவான்காவாகவே தோன்றினார்.

நூல்கள்

[தொகு]

2009 ஆம் ஆண்டில் முதல் புத்தகமான வேலை மற்றும் வாழ்க்கையில் வெற்றிபெறுவதற்கான துருப்புச் சீட்டு எனும் நூல் (எழுத்துப் படைப்பு)வெளிவந்தது[20]

2017 ஆம் ஆண்டில் பெண்களின் வெற்றிக்கான விதிகளை மாற்றி எழுதுதல் எனும் இரண்டாவது நூல் (எழுத்துப் படைப்பு) வெளிவந்தது.[21]

சமூக செயல்பாடுகள்

[தொகு]

2007 ஆம் ஆண்டில், இலரி கிளின்டனின் ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுத் தலைவர் பரப்புரைக்கு டிரம்ப் $ 1,000 நன்கொடை அளித்தார்.[22] டிரம்ப் தான் பெண்களுக்கான வழக்கறிஞர் என்று கூறினார்.[23] தெலுங்­கானா மாநி­லம், ஐத­ரா­பா­த்தில், சர்­வ­தேச தொழில் முனை­வோர் மாநாட்­டில் கலந்து கொண்டார். அதில் ‘பணி­யா­ளர் மேம்­பாடு மற்­றும் திறன் பயிற்­சி­களில், புதிய கண்­டு­பி­டிப்­பு­களை உரு­வாக்க நம்­மால் முடி­யும்’ என்ற தலைப்­பில், கருத்­த­ரங்­கம் நடை­பெற்­றது. ‘ஸ்டெம்’ கல்­வித் திட்­டத்­தில், அறி­வி­யல், தொழில்­நுட்­பம், பொறி­யி­யல் மற்­றும் கணித துறை­களில், பெண்­களின் பங்­க­ளிப்பை அதி­க­ரிக்­கும் முயற்­சி­யில் ஈடு­பட்­டுள்­ளது. இதன் மூலம், இத்­து­றை­களில், ஆண்­க­ளுக்கு நிக­ரான பெண்­களின் பங்கு உய­ரும் என்றார்.[1]

மேற்கோள்

[தொகு]
 1. "Executive Office Of The President Annual Report To Congress On White House Office Personnel White House Office As Of: Friday, June 30, 2017" (PDF). White House (in English). p. 15. Archived from the original (PDF) on சூன் 30, 2017. பார்க்கப்பட்ட நாள் சூன் 30, 2017.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
 2. CNN, Dan Merica, Gloria Borger, Jim Acosta and Betsy Klein. "Ivanka Trump is making her White House job official". CNN. {{cite web}}: |last= has generic name (help)CS1 maint: multiple names: authors list (link)
 3. Ivanka Trump [IvankaTrump] (December 28, 2010). "My actual name is Ivana. In Czech, Ivanka is the baby name for Ivana, like Bobby is to Robert. RT @Saluxious Ivanka, how'd you get u r name?" (Tweet) (in English). Archived from the original on October 9, 2017. பார்க்கப்பட்ட நாள் October 9, 2017. {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)CS1 maint: unrecognized language (link)
 4. 4.0 4.1 Friedman, Megan (திசம்பர் 9, 2016). "8 Things You Should Know About Ivanka Trump". Cosmopolitan. Archived from the original on சனவரி 26, 2017. பார்க்கப்பட்ட நாள் பெப்பிரவரி 5, 2017.
 5. "Ivanka Trump: Model, Businesswoman, Daughter to Republican Nominee". Voice of America News (in ஆங்கிலம்). சூலை 21, 2016. Archived from the original on பெப்பிரவரி 6, 2017. பார்க்கப்பட்ட நாள் பெப்பிரவரி 5, 2017.
 6. "Ivana Trump to write memoir about raising US president's children" (in en). The Guardian. Associated Press. 16 March 2017. https://www.theguardian.com/us-news/2017/mar/16/ivana-trump-write-memoir-about-raising-us-presidents-donald-children. 
 7. Gurley, George (சனவரி 29, 2007). "Trump Power". Marie Claire. Archived from the original on திசம்பர் 16, 2014. பார்க்கப்பட்ட நாள் பெப்பிரவரி 19, 2010.
 8. Van Meter, Jonathan (திசம்பர் 13, 2004). "Did Their Father Really Know Best?". New York. Archived from the original on நவம்பர் 7, 2014. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 7, 2014.
 9. Seligson, Hannah (செப்டெம்பர் 7, 2016). "Is Ivanka for real?". The Huffington Post. Archived from the original on மே 31, 2017. பார்க்கப்பட்ட நாள் மே 18, 2017.
 10. "About Ivanka". Ivanka Trump. நவம்பர் 14, 2012. Archived from the original on நவம்பர் 14, 2012. பார்க்கப்பட்ட நாள் சூன் 12, 2017.{{cite web}}: CS1 maint: bot: original URL status unknown (link) For level of honor see last paragraph of website bio.
 11. Fitch, Stephane (2006). "The Forbes 400 Richest Americans 2006: The Real Apprentices". Forbes. Archived from the original on சனவரி 13, 2008.
 12. Trump, Ivanka (சனவரி 29, 2010). "If I Owned a jewelry store". InStoreMag.com. Archived from the original on செப்டெம்பர் 18, 2015. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 27, 2016.
 13. "About". IvankaTrump.com. செப்டெம்பர் 23, 2014. Archived from the original on சூன் 9, 2016.
 14. DeMarco, Anthony (சூலை 12, 2011). "Luxury Jewelry Brands Ivanka Trump and Aaron Basha Relocate N.Y. Boutiques". Forbes. Archived from the original on அக்டோபர் 22, 2016. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 21, 2016.
 15. Murrow, Lauren (நவம்பர் 29, 2011). "Now Open: Inside Ivanka Trump's New Diamond-Packed Boutique". New York. Archived from the original on அக்டோபர் 22, 2016. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 21, 2016.
 16. 16.0 16.1 Steinhauer, Jennifer (ஆகத்து 17, 1997). "Her Cheekbones (High) Or Her Name (Trump)?". த நியூயார்க் டைம்ஸ். Archived from the original on சூன் 13, 2017. பார்க்கப்பட்ட நாள் சூன் 28, 2017.
 17. "Ivanka Trump to appear on 'Apprentice'". MSNBC. Associated Press. மார்ச்சு 2, 2006. Archived from the original on ஏப்பிரல் 15, 2006.
 18. Keith, Bill (September 2006). "Ivanka on Top". Stuff Magazine. Archived from the original on August 20, 2006. பார்க்கப்பட்ட நாள் August 17, 2006.
 19. Elizabeth, De. "You Totally Forgot Ivanka Trump and Jared Kushner's Cameo on 'Gossip Girl'". Teen Vogue (in ஆங்கிலம்). Archived from the original on மே 4, 2017. பார்க்கப்பட்ட நாள் சூலை 15, 2017.
 20. Paisner, Daniel. "Here's a run-down of some of Daniel Paisner's Hits and Misses". Archived from the original on டிசம்பர் 14, 2017. பார்க்கப்பட்ட நாள் December 13, 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
 21. Fahrenthold, David A. (மே 12, 2017). "Ivanka Trump donates half the advance from her new book". The Washington Post. Archived from the original on மே 17, 2017. பார்க்கப்பட்ட நாள் சூன் 28, 2017.
 22. Yoon, Robert (ஏப்பிரல் 23, 2007). "Celebrities ante up for Democratic campaigns". CNN. Archived from the original on சூன் 24, 2015. பார்க்கப்பட்ட நாள் சூலை 10, 2015.
 23. Breen-Portnoy, Barney (அக்டோபர் 28, 2016). "Ivanka Trump at Florida Synagogue: My Father Called Before Jewish High Holidays and Said 'You Better Pray Hard for Me'". Algemeiner Journal. Archived from the original on அக்டோபர் 29, 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இவாங்கா_டிரம்ப்&oldid=3924084" இலிருந்து மீள்விக்கப்பட்டது