உள்ளடக்கத்துக்குச் செல்

இராசா (யானை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாளிகை இராசா
இலங்கையின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஜே. ஆர். ஜெயவர்தனா , இலங்கை, கண்டி, தலதா மாளிகையின் தியவதான நிலமே நிசாங்கே ஜெயரத்னா, ஆகியோருடன் இராசா யானை, 1983
இனம்இலங்கை யானை
பால்ஆண்
பிறப்பு1913
ஏறாவூர், இலங்கை
இறப்பு16 சூலை 1988 (வயது 75)
[கண்டி]], இலங்கை
Resting placeஇராசா யானை அருங்காட்சியகம்
செயற்பட்ட ஆண்டுகள்1937 - 1987
Notable roleஎசல ஊர்வலத்தின் போது புனித கலசத்தைத் தாங்கிச் செல்லுதல்
Predecessorதந்தலூதா
Successorஅயந்துதுவா இராசா
உரிமையாளர்தலதா மாளிகை

இராசா (Raja) ( சிங்களம்: රාජා ඇතා) (மேலும் மாளிகை ராஜா என்றும் அறியப்படுகிறது) (1913 - 16 சூலை 1988) இது கண்டி, தலதா மாளிகையில் இருந்த ஒரு இலங்கை யானை ஆகும். சுமார் 50 ஆண்டுகளாக கண்டியில் நடைபெற்ற வருடாந்திர எசல ஊர்வலத்தில் பங்கேற்ற இந்த யானை, 37 ஆண்டுகளாக இறுதி இரந்தோலி ஊர்வலத்தில் புனித கலசத்தைத் தாங்கிச் சென்றது. இது, தனது வாழ்நாளில் ஆசியாவில் மிகவும் பிரபலமான யானைகளில் ஒன்றாக இருந்தது. மேலும் தனது நடத்தைக்காக உலகப் புகழ் பெற்றது. இலங்கையின் கலாச்சாரத்திற்கான இதன் மதிப்புமிக்க சேவையை அங்கீகரிக்கும் விதமாக, ஆகஸ்ட் 20, 1986 அன்று, இலங்கையின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஜே. ஆர். ஜெயவர்தனா இராசாவை ஒரு தேசிய புதையலாக அறிவித்தார். [1]

ஆரம்ப ஆண்டுகளில்

[தொகு]

இராசா 1913ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர் காடுகளில் பிறந்ததென நம்பப்படுகிறது.[1] நவம்பர் 1925 இல் உமரு இலப்பை பணிக்கர் தலைமையிலான ஒரு குழுவினரால் இது பிடிக்கப்பட்டது. நாட்டின் கிழக்குப் பகுதிகளில் யானைகளைப் பிடிப்பதில் தேர்ச்சி பெற்ற ஆண்களுக்கு வழங்கப்பட்ட பெயர் பணிக்கர் எண்பதாகும். இளம் யானை ராஜாவை கந்தன் என்ற மற்றொரு இளம் யானையுடன், கண்டியில் உள்ள கிரகாமா வாலாவாவைச் சேர்ந்த திக்கிரிபாண்டா மாம்பிட்டியா திசவே என்பவர் 3300 ரூபாய்க்கு வாங்கியிருந்தார். அந்த நேரத்தில் இது ஒரு பெரிய தொகையாகும்.[2]

பிரிட்டிசு அரசாங்கம் வழங்கிய அனுமதியுடன், யானைகள் இரண்டும் தொடர்வண்டியில் கடுகண்ணவா தொடர் வண்டி நிலையத்திற்கும் பின்னர் சிரகாமா வாலவாவுக்கும் 1925 டிசம்பர் 11 அன்று கொண்டு வரப்பட்டன. இரண்டு யானைகளும் சுமார் 24 வயதை அடைந்தபோது, அவை சடங்கு முறையில் தலதா மாளிகைக்கு பரிசாக வழங்கப்பட்டன. [3]

உன்னத யானை

[தொகு]
கண்டி, தலதா மாளிகையின் தியவதான நிலமே நிரஞ்சன் செயரத்னாவுடன், இராசா, ஜெயராசா மற்றும் சில யானைகள்

இராசா அரிய கச லட்சண பண்புகளைக் கொண்டிருந்தது. அது இலங்கை யானைகளின் பிரபுத்துவ சாதியினரான சதாந்தாவில் சேர்த்தது . யானையின் சிறந்த உடல் சிறப்பியல்புகளையும் அதன் கீழ்ப்படிதலையும் கவனித்தபின், 1950 ல் எசல ஊர்வலத்தில் புனித கலசத்தை எடுத்துச் செல்லும் பொறுப்பு இதற்கு வழங்கப்பட்டது. இராசா அதற்குள், முழுமையாகப் பயிற்றுவிக்கப்பட்டு, அதன் திறன்களைப் நன்கு வலுபடுத்தியது. இது பல ஆண்டுகளாக ஊர்வலத்தின் பிரதான யானையாக தனது இடத்தை உறுதிப்படுத்தியது. இராஜா ஒருபோதும் தனது மாவுத்தன்களிடம் எந்த பிரச்சனையும் செய்ததில்லை. அவர்களுக்கு மிகவும் கீழ்ப்படிந்தது. இது, எப்போதும் பௌத்த பிக்குகளை மதித்தது. மேலும் தலதா மாளிகையில் இருப்பதையே விரும்பியது.

இறப்பு

[தொகு]

சுமார் 50 ஆண்டுகள் பௌத்த ஊர்வலங்களில் பணியாற்றிய பின்னர், இராஜா 1988 ஜூலை மாதம் ஒரு நோய் காரணமாக இறந்தது. இதன் மரணம் இலங்கையில் ஒரு நாள் தேசிய துக்கமாக அனுசரிக்கப்பட்டது . திசம்பர் 12, 1989 அன்று அதன் நினைவாக ஒரு அஞ்சல் தலையும் வெளியிடப்பட்டது, மேலும், மட்டகிளப்பு, உமரு இலப்பை பணிக்கருடன் 1,000 ரூபாயிலும் இடம் பெற்றது.[1] இராஜாவின் எச்சங்கள் தற்போது பல் ஆலயத்தின் மைதானத்திற்குள் ஒரு சிறப்பு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.[4]

புகைப்படங்கள்

[தொகு]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 "Raja at Kandy Sri Dalada Maligawa Temple of the Tooth". Elephant Database. பார்க்கப்பட்ட நாள் 15 September 2012.
  2. Schokman, Derrick (17 July 2002). "Remembering Raja: The famous Maligawa Tusker". Daily News online இம் மூலத்தில் இருந்து 30 December 2004 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20041230193610/http://www.dailynews.lk/2002/07/17/fea07.html. பார்த்த நாள்: 15 September 2012. 
  3. Nizam, Ifham (2009-06-23). "Remembering Raja". Upali Newspapers Limited.. Sri Lanka இம் மூலத்தில் இருந்து 2013-10-05 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131005043917/http://www.island.lk/2009/06/23/features5.html. பார்த்த நாள்: 2 October 2013. 
  4. "Sri Dalada Maligawa (Temple of the Tooth Relic)". Living Heritage Trust. பார்க்கப்பட்ட நாள் 2 October 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராசா_(யானை)&oldid=3364134" இலிருந்து மீள்விக்கப்பட்டது