உள்ளடக்கத்துக்குச் செல்

எசல பெரகரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எசல திருவிழாவில் அலங்கரிக்கப்பட்ட யானைகள்

எசல பெரகரா (Esala Perahera, சிங்களம்: ඇසල පෙරහැර, எசல பெரகெர, festival of the tooth) அல்லது எசலா பேரணி இலங்கையின் கண்டி நகரத்தில் சூலை/ஆகத்து மாதங்களில் நிகழும் ஓர் பௌத்த திருவிழாவாகும். கண்கவரும் ஆடைகளுடன் நடைபெறும் இத்திருவிழா இலங்கையின் முதன்மையான சின்னங்களில் ஒன்றாக உள்ளது. அலங்கரிக்கப்பட்ட யானைகளுடன், தீநடனம், சவுக்கடி நடனம், கண்டி நகர பாரம்பரிய நடனம் போன்ற பல்வேறு நடனமாடிவரும் ஊர்வலமாகும். "தியா கெப்பீம"வுடன் திருவிழா முடிவடையும்.

வரலாறு[தொகு]

எசல பெரகரா மூன்றாம் நூற்றாண்டிலிருந்தே மழை வேண்டி இருந்து வந்திருப்பதாகவும் தலதா பெரகர நான்காம் நூற்றாண்டில் இந்தியாவிலிருந்து புத்தரின் புனிதப்பல் கொண்டுவரப்பட்டபோது துவங்கியதாகவும் நம்பப்படுகிறது. கண்டியின் எசல திருவிழா இந்த இரு பெரகர(ஊர்வலங்கள்)க்களின் இணைப்பாக கருதப்படுகிறது. புனிதப்பல்லை இந்தியாவிருந்து இளவரசர் ஹேமந்தவும் இளவரசி தந்தாவும் கொணர்ந்ததாக குறிப்பிடப்படுகிறது.

மேலும் பார்க்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எசல_பெரகரா&oldid=3268583" இலிருந்து மீள்விக்கப்பட்டது