அயந்துதுவா இராசா (யானை)
அயந்துதுவா இராசா | |
---|---|
வரலாற்று யானை | |
இனம் | இலங்கை யானை |
பால் | ஆண் |
பிறப்பு | 1924 அம்பாந்தோட்டை மாவட்டம் இலங்கை |
இறப்பு | 6 நவம்பர் 2002 (வயது சுமார் 78) கண்டி மாவட்டம் இலங்கை |
Resting place | கொழும்பு தேசிய அருங்காட்சியகம் |
செயற்பட்ட ஆண்டுகள் | 1945 – 2002 |
Notable role | எசல ஊர்வலத்தில் புனித கலசத்தை சுமந்து சென்றது |
உரிமையாளர் | வில்லியம் குணசேகரா ஹென்றி குணசேகரா |
அயந்துதுவா இராசா (Heiyantuduwa Raja ) ( சிங்களம் : හෙයියන්තුඩුවේ රාජා) (1924- நவம்பர் 6 2002) என்பது ஓர் இலங்கை யானையாகும். இது மாளிகை இராசா எனப்படும் மாளிகை இராசாவின் மறைவுக்குப் பிறகு 11 ஆண்டுகளாக எசல ஊர்வலத்தில் புத்தரின் புனிதப்பல் அடங்கிய புனித கலசத்தை சுமந்து சென்றது. இந்த யானையின் தந்தங்கள் ஒவ்வொன்றும் 7 அடி 6 அங்குலம் (2.3 மீ) நீளம் கொண்டது. இது வாழ்ந்தபோது நாட்டின் மிக நீளமான தந்தங்கள் கொண்ட யானைகளில் ஒன்றாக கருதப்பட்டது.[1]
உரிமையாளர்
[தொகு]அம்பாந்தோட்டை மாவட்டத்தில் உள்ள கட்டகடுவனை காட்டிலிருந்து இந்த யானை பிடிக்கப்பட்டது. 1945 மார்ச் 8 அன்று, அம்பாந்தோட்டை மாவட்டத் தலைமையகத்தில் அன்றைய பிரித்தானிய இலங்கை அரசாங்கத்தால் இந்த யானை பகிரங்கமாக ஏலம் விடப்பட்டது. வில்லியம் குணசேகரா என்பவர் இதை 10,500 இலங்கை ரூபாய்க்கு வாங்கியிருந்தார். ஒரு செல்வாக்கு மிக்க நில உரிமையாளரான குணசேகரா அந்த நேரத்தில் பதினான்கு யானைகளை வைத்திருந்தார். பின்னர் இந்த யானை கண்டியிலிருந்த அவரது இளைய மகன் ஹென்றி குணசேகராவுக்குச் சொந்தமானது. .
வரலாற்று யானை
[தொகு]இந்த யானை கண்டியில் உள்ள எசல ஊர்வலத்தில் பல ஆண்டுகளாக பங்கேற்றது. மாளிகை இராசாவின் மறைவுக்குப் பிறகு, 1989 முதல் 2000 வரை 11 ஆண்டுகளாக புத்தரின் புனிதப்பல் இருக்கும் புனித கலசத்தை சுமந்து சென்றது. புனிதப்பல் கலசத்தை எடுத்துச் செல்வது இலங்கையில் ஒரு சில யானைகளுக்கு மட்டுமே வழங்கப்பட்ட ஒரு வாய்ப்பாகும். தலதா மாளிகையின் கலசத்தைத் தவிர கெளனியா துருது ஊர்வலம், பெல்லன்வில்லை ஊர்வலம், கங்காராமய நவம் ஊர்வலம் ஆகியவற்றிலும் புத்தரின் புனித கலசத்தையும் இந்த யானையே சுமந்து சென்றது.
தேசியப் பாரம்பரியம்
[தொகு]அயந்துதுவா இராசா 6 நவம்பர் 2002 அன்று இறந்த போனது. இறக்கும் போது சப்பானிய நிறுவனத்தால் 120,000 அமெரிக்க டாலருக்கு கேட்கப்பட்ட போதிலும் வழங்க மறுத்த அதன் உரிமையாளர் ஹென்றி குணசேகர யானையின் எலும்புக்கூட்டை இலங்கை அரசாங்கத்திற்கு நாட்டின் பாரம்பரியத்தில் யானையின் பங்கை அங்கீகரிப்பதற்காக வழங்கினார். இந்த யானையின் எலும்புக்கூடு 29 ஜனவரி 2013 முதல் கொழும்பு, தேசிய அருங்காட்சியகத்தில் [2] பொது மக்களின் பார்வைக்கு திறந்து விடப்பட்டது.