இந்தியாவில் புலிகளை வேட்டையாடுதல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாரம்பரிய சீன மருத்துவத்தில் பயன்படுத்துவதற்காக ஒரு சீன சந்தையில் சட்டவிரோத பொருட்களை விற்கும் விற்பனையாளர். படத்தில் காட்டப்பட்டுள்ள சில துண்டுகளில் புலியின் பாதம் போன்ற விலங்குகளின் பாகங்களும் அடங்கும்.

இந்தியாவில் புலிகளை வேட்டையாடுதல் (Tiger poaching in India) என்பது புலிகள் உயிர்வாழும் நிகழ்தகவை கடுமையாக பாதித்துள்ளது.[1] 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்த 100,000 காட்டுப் புலிகளுடன் ஒப்பிடுகையில் இப்போது சுமார் 3,000 காட்டுப் புலிகள் உயிர் பிழைத்துள்ளன. புலிகளின் எண்ணிக்கையின் இந்த திடீர் அழிவு, பிரித்தானிய இராச்சிய காலத்திலும், மற்றும் இந்தியாவின் சுதந்திரத்திற்குப் பின், காலனித்துவ மற்றும் இந்திய உயரடுக்கு மக்களால் புலிகள் படுகொலை செய்யப்பட்டதன் காரணமாக இருந்தது.[2] இவற்றில் பெரும்பாலானவை, சுமார் 1,700 வங்காளப் புலிகள்.[3] புலிகளின் ஆரம்ப எண்ணிக்கை மிகவும் தவறாக இருந்தது. இந்தியாவில் புலிகள் பாதுகாப்புத் திட்டமானது புலிகளின் ஆரம்ப எண்ணிக்கையில் கடுமையான குறைபாடுகள் உள்ளதைக் கண்டறியும் வரை, அது பெரும் வெற்றியாகப் பாராட்டப்பட்டது.[4]

வேட்டையாடப்பட்டு கொல்லப்பட்ட புலியின் உறுப்புகளில் பெரும்பாலானவை சீனாவை அடைகின்றன. அங்கு ஒரு தோலை 6.5 மில்லியனுக்கு விற்கலாம்.[5] அங்கு புலியின் ஒரு தோல் ரூ. 6.5 மில்லியனுக்கு விற்க முடியும்.[6] இவ்வாறு புலிகளை வேட்டையாடுபவர்களுக்கு தண்டனை விகிதம் சுமார் நான்கு சதவீதமாகவே உள்ளது.[7]

சன்சார் சந்த்[தொகு]

வட இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அல்வர் மாவட்டத்தின் தனகாசி பகுதியைச் சேர்ந்த சன்சார் சந்த், "நாட்டின் மிகப்பெரிய வனவிலங்கு வர்த்தக வலையமைப்பை நடத்தும் முக்கிய நபர்" என்று அழைக்கப்பட்டார்.[8] அவர் 40 ஆண்டுகளாக கைது செய்யப்படாமல் இத் தொழிலில் ஈடுப்ட்டிருந்தார். தில்லியின் சதார் சந்தைப் பகுதியில் தனது வணிகத்தை நடத்தி வந்தார். மேலும், அவர் "வடக்கின் வீரப்பன்" என்று அழைக்கப்பட்டார்.[9]

2005 ஆம் ஆண்டில் சரிஸ்கா தேசியப் பூங்காவின் முழு புலிகளையும் அழித்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.[10] புலி வேட்டையாடும் சன்சார் சந்த் நேபாளம் மற்றும் திபெத்தைச் சேர்ந்த நான்கு வாடிக்கையாளர்களுக்கு 470 புலி தோல்களையும் 2,130 சிறுத்தை தோல்களையும் விற்றதாக ஒப்புக் கொண்டார்.[11]

1991 ஆம் ஆண்டில், இராஜஸ்தானின் சவாய் மாதோபூரில் கைது செய்யப்பட்ட ஒரு குழு, அவருக்காக இரண்டு ஆண்டுகளில் 15 முதல் 18 புலிகளை வேட்டையாடியதாக ஒப்புக்கொண்டது. 2005 ஜனவரியில், படேல் நகரில் உள்ள ஒரு கிடங்கில் நடத்தப்பட்ட சோதனையில் இரண்டு புலிகளின் தோல்கள், 28 சிறுத்தைகளின் தோல்கள், 14 புலியின் கோரைப் பற்கள், மூன்று கிலோ புலி நகங்கள், 10 புலியின் தாடைகள் மற்றும் 60 கிலோ சிறுத்தை மற்றும் புலியின் பாதங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. 1988 ஆம் ஆண்டில், அவரிடமிருந்து 25,800 பாம்புத் தோல்களை காவலர்கள் பறிமுதல் செய்தனர்.சன்சார் சந்தின் மனைவி ராணி மற்றும் மகன் ஆகாஷ் ஆகியோரும் வனவிலங்கு கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.[12][13]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Tiger poaching and trafficking in India: Estimating rates of occurrence and detection over four decades, Koustubh Sharma,Belinda Wright,Tito Joseph,Nitin Desai, Biological Conservation, Elsevier, Volume 179, November 2014, Pages 33–39
  2. "National Geographic Society Newsroom". Archived from the original on 2015-04-02. பார்க்கப்பட்ட நாள் 2022-10-22. {{cite web}}: Unknown parameter |deadurl= ignored (help)
  3. Poaching for Chinese Markets Pushes Tigers to the Brink, 12/05/2014
  4. Faulty Counts May Have Hurt India Tigers, Experts Say, Pallava Bagla, National Geographic News, August 7, 2003
  5. INDIA'S HIDDEN TIGER POACHERS, Roads and Kingdoms, Jun 20, 2014
  6. Sansar’s Successors, RAMAN KIRPAL, October 16, 2010
  7. Illegal Tiger Trade: Why Tigers Are Walking Gold, Sharon Guynup in Cat Watch on February 12, 2014
  8. Wriggling Out Of The Skin, Jay Mazoomdaar, Tehelka, 2013-07-27
  9. Sansar Chand Is India’s Deadliest Poacher. Here Is How He Has Escaped Legal Traps For 40 Years, RAMAN KIRPAL, Tehelka, August 7, 2010,
  10. Sansar Chand, who wiped out Sariska tigers, dies of cancer, Indian Express, March 18, 2014
  11. Sansar Chand, notorious tiger poacher, dead TNN | Mar 19, 2014
  12. Poacher Sansar Chand arrested in Delhi, Outlook, JUN 30, 2005
  13. Haider, Tanseem (12 July 2016). "Notorious poacher Sansar Chand's son arrested in Delhi for wildlife trade". India Today. http://indiatoday.intoday.in/story/notorious-poacher-sansar-chands-son-arrested-in-delhi-for-wildlife-trade/1/713274.html. பார்த்த நாள்: 19 October 2017.