இந்தியாவில் ஒருபால் உரிமையியல் இணைவின் அங்கீகாரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தியா ஒரே பாலின திருமணம் மற்றும் உரிமையியல் இணைவை அங்கீகரிக்கவில்லை. இந்தியா முழுமைக்கும் ஒரே திருமணச் சட்டம் நடைமுறையில் இல்லை. ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் தங்களது சமூகம் அல்லது மதத்தின் அடிப்படையில் பொருந்தும் சட்டத்தினைத் தேர்வு செய்ய உரிமை உண்டு. திருமணச் சட்டங்கள் ஒன்றிய அளவில் இயற்றப்பட்டாலும், பல திருமண சட்டங்கள் இருப்பது இதனை சிக்கலாக்குகிறது. இந்த திருமணச் சட்டங்கள் எதுவும் திருமணம் என்பதை ஆணுக்கும் பெண்ணுக்கும் நடப்பது மட்டுமே என வரையருக்கவில்லை. மேலும், ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்வதை இச்சட்டங்கள் வெளிப்படையாகத் தடை செய்யவுமில்லை. [1] இருப்பினும், இச்சட்டங்களின் மொழிநடை இருபாலீர்ப்பையே இயல்பாகக் கொண்டு ஒருபால் திருமணத்தை ஏற்றுக்கொள்ளாத வகையிலேயே அமைந்துள்ளது.

பின்னணி[தொகு]

1987 ஆம் ஆண்டு முதல், மத்திய இந்தியாவில் இந்து முறைப்படி ஒருவரை ஒருவர் திருமணம் செய்துகொண்ட இரண்டு காவல் துறை பெண்களைப் பற்றி தேசிய பத்திரிக்கைகள் அறிவித்தபோது, [2] [3] நாடு முழுவதும், பரவலாக, ஒரே பாலின திருமணங்கள் நடைபெற்றுள்ளதாக பத்திரிகைகள் அறிவித்தன.இவர்களில் பெரும்பாலானோர் சிறு நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள நடுத்தர வர்க்க இளம் பெண்களாக இருந்தனர். மேலும், அவர்கள் எந்த ஓரின சேர்க்கை இயக்கத்துடனும் தொடர்பு இல்லாதவர்களாக இருந்தனர். இதில் குடும்பத்தினரின் எதிர்ப்பானது மறுப்பு முதல் வன்முறை, துன்புறுத்தல் வரை இருந்தது. ஓரினச் சேர்க்கை தம்பதியினரை காவல்துறை பொதுவாக துன்புறுத்தும் நடவடிகைகளில் ஈடுபடுகின்றனர். அதே வேளையில், இந்திய நீதிமன்றங்கள் அவர்கள் பெரியவர்களாக இருப்பதால், அவர்கள் விரும்பும் யாருடனும் வாழ்வதற்கான உரிமையைப் பெற்றுள்ளனர் என்று ஒரே மாதிரியாக கருத்துக்களைத் தெரிவித்துள்ளன. சமீபத்திய ஆண்டுகளில், இந்த தம்பதிகளில் சிலர் தொலைக்காட்சிகளிலும் தோன்றினர். ஒரே பாலின தம்பதிகளால் பல கூட்டு தற்கொலைகளும் நடந்துள்ளன.

"இந்தியாவில் ஒரே பாலின காதல்: இலக்கியம் மற்றும் வரலாற்றிலிருந்து வாசிப்புகள்" (2000) என்பதில், எழுத்தாளர் ரூத் வனிதா கடந்த மூன்று தசாப்தங்களாக நடந்த இதுபோன்ற பல திருமணங்கள் மற்றும் தற்கொலையை பகுப்பாய்வு செய்து, அவர்களின் சட்ட, மத மற்றும் வரலாற்று அம்சங்களை ஆராய்ந்துள்ளார். இந்து திருமணச் சட்டம், 1955 ன் கீழ், தம்பதியர்களில் இருவரில் ஒருவரின் சமூகத்தில் நிலவும் பழக்கவழக்கங்களின்படி இரண்டு இந்துக்களுக்கு இடையே நடக்கும் எந்த திருமணமும் சட்டப்படி செல்லுபடியாகும் என்பதால் பல திருமணங்கள் சட்டப்பூர்வமாக செல்லுபடியாகும் என்று அவர் வாதிடுகிறார். திருமணம் செய்ய எந்த உரிமமும் தேவையில்லை, இன்று இந்தியாவில் பெரும்பாலான பாலின இந்து திருமணங்கள் மத சடங்குகளால் மட்டுமே நடத்தப்படுகின்றன. மாநிலத்தின் சலுகைகளை பெரும்பாலான தம்பதிகள் கேட்டுப் பெறுவதில்லை. தம்பதிகள் சரிபார்ப்பில் ஈடுபடுவதால் பல நன்மைகளைப் பெற முடிகிறது. பெரும்பாலான தம்பதிகள் குடும்பம் மற்றும் சமூகத்தின் சரிபார்ப்பை நாடுகிறார்கள், மேலும் கிராமப்புறங்கள் மற்றும் சிறிய நகரங்களில் உள்ள பல பெண் தம்பதிகள் இந்த சரிபார்ப்பைப் பெற்றுள்ளனர்.[4][5]

வடிவமைப்பாளர் வெண்டெல் ரோட்ரிக்சு, ஜெரோம் மரேல் எனும் பிரஞ்சுக் காரரை திருமணம் செய்துகொண்டார். இவர்கள் உட்பட பல பிரபலங்கள் ஓரினச் சேர்க்கை தம்பதிகளாக இருந்துள்ளனர்.

டிசம்பர் 2017 இல், இந்திய-வியட்நாமிய ஒரே பாலினத்தை சேர்ந்த தம்பதி, மகாராஷ்டிரா மாநிலத்தின் யவத்மாளில், குடும்பம், நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகளுடன் திருமண விழாவை நடத்தியது. [6] ஏப்ரல் 2018 இல், ஒரு அகனள் தம்பதியினர் ஆக்ரா நகரில் திருமணம் செய்து கொண்டது

சான்றுகள்[தொகு]

  1. "Same-Sex Marriage and other Queer relationships in India". Issuu.
  2. "Homosexuality And The Indian". Archived from the original on 2008-05-09.
  3. Homosexuality in India: Past and Present
  4. "Lesbians forced to live in anonymity in India". Archived from the original on 2008-12-11.
  5. Homosexuality in India: Past and Present
  6. US-based IIT grad marries gay partner in Maharashtra The Times of India, 13 January 2018