இசுரோ தொலையளவியல், கண்காணிப்பு, கட்டளை வலைப்பிணையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சந்திரயான் - 2 திட்டத்து- க்கான வட்டணை உயர்த்தும் நடவடிக்கைத் தொடங்குவதற்கு முன்பான திட்ட இயக்குதல் வளாகம் - 1 (மோக்ஸ் - 1) இன் காட்சி.

செயற்கைக்கோள் மற்றும் ஏவூர்திப் பயணங்களுக்கு தொலையளவியல், கண்காணிப்பு, கட்டளை (டி. டி. சி.) பணியை வழங்குவதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் அமைப்பு (இசுரோ) பல ஆண்டுகளாக தரை நிலையங்களின் விரிவான உலகளாவிய வலையமைப்பை நிறுவியுள்ளது. இந்த வலையமைப்பு இசுரோ தொலையளவியல், கண்காணிப்பு, கட்டளை வலைப்பிணையம் ( இசுட்டிராக்) கீழ் இயங்குகிறது. இதன் தலைமையகம் பெங்களூருவில் உள்ளது.

ஏந்துகள்[தொகு]

நவம்பர் 2013 நிலவரப்படி, ISTRAC பல பின்வரும் ஏந்துகளைக் கொண்டுள்ளது.

  • பெங்களூரில் உள்ள இசுட்டிராக் ஏந்துகளாவன: விண்கலச் செயல்பாடுகளை மேற்கொள்வதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் வலைப்பிணைய நிலையங்களுடன் ஒருங்கிணைப்பதற்கும் முழுமையாக ஒதுக்கப்பட்ட பல திட்ட விண்கல கட்டுப்பாட்டு மையத் தொலையளவியல், கண்காணிப்பு, கட்டளைத் (TTC )தரை நிலையம் (BLR), . பகிர்தல் கட்டமைப்புடன் கூடிய கணினி வலை, தனிப்பட்ட விண்கலப் பயணங்களுக்கான நிகழ்நேர காட்சிகளை வழங்கும் சிறப்புச் செயலிகள், விண்கலத் தரவு காப்பகப் பகிர்வு, பகுப்பாய்வு, வட்டணைத் தீர்மானிப்பு ஆகியவற்றைக் கையாள்வதற்கான தன்னியக்கச் செயலிகள்.
  • SCC , இசுட்டிராக் வலைப்பிணைய நிலையங்கள், பங்கேற்கும் பிற அயலக விண்வெளி முகமைகளின் கட்டுப்பாட்டு மையங்கள், இடையேயான இணைப்புகளை இணைக்கும் தனித்த குரல், தரவு, TTY இணைப்புகள் வழியிலான தகவல் தொடர்பு கட்டுப்பாட்டுத் தரவு பெறும் நிலையங்கள் .

திட்டப்பணி[தொகு]

இசுட்டிராக்கின் திட்டப்பணி பின்வருவனவற்றை உள்ளடக்கியுள்ளது.

  • இசுரோவின் அனைத்து தாழ்வட்டணை செய்ற்கைக்கோள் திட்டங்களுக்கான திட்டக்கால முழுவதற்குமான, கண்காணிப்பு, கட்டளை,வீட்டுப் பேணுதல் தரவு கையகப்படுத்தலோடு, நல்லியக்கப் பகுப்பாய்வு, கட்டுப்பாடு, வட்டணை, திசைவைப்புப் பாங்கு தீர்மானித்தலும் வலைப்பிணைய ஒருங்கிணைப்பு ஒத்துழைப்பும்.
  • இசுரோ ஏவூர்திப் பயணங்களுக்கான தொலை அளவீட்டுத் தரவு கையகப்படுத்தல் ஒத்துழைப்பு, ஏவுதல் முதல் செயற்கைக்கோள் கையகப்படுத்துதல் வரையிலான செயற்கைக்கோள் நுழைவு அளவுருக்களைக் கண்காணிக்கவும் தீர்மானிக்கவுமான அனைத்துப் பயண நெடுக்கக் கண்காணிப்பு ஒத்துழைப்பு.
  • உள்நாடு, பன்னாட்டுச் செயற்கைக்கோள் பயணங்களுக்கான பணி முடியும் வரை, திட்டமிடல் முதல் தரை நிலையங்களுக்கான ஒத்துழைப்பும் விண்கலங்கள், ஏவூர்திக் குழுக்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பும்.
  • பன்னாட்டுச் செயற்கைக்கோள்வழி ஏவும் திட்டங்களுக்கான தொலையளவியல், கண்காணிப்பு, கட்டளை சார்ந்த ஒத்துழைப்பு.

தரை நிலையங்கள்[தொகு]

இசுட்டிராக் பின்வரும் தொலையளவியல், கண்காணிப்பு, கட்டளை சார்ந்த (TTC) தரை நிலையங்களைக் கொண்டுள்ளதுஃ[1]

இந்தியா[தொகு]

உலகளாவிய நிலையங்கள்[தொகு]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Indian Deep Space Network (IDSN)". ISRO. Archived from the original on 22 October 2013. பார்க்கப்பட்ட நாள் 17 January 2013.
  2. 2.0 2.1 10 eyes in the sky give India space edge
  3. "Brunei, India sign MoU for cooperation in space research field | Borneo Bulletin Online". borneobulletin.com.bn. Archived from the original on 23 July 2018. பார்க்கப்பட்ட நாள் 14 January 2022.
  4. "ISRO Developing Station in Vietnam". pib.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2021-03-29.
  5. "India to build satellite tracking station in Vietnam that offers eye on China". https://www.reuters.com/article/india-vietnam-satellite-china-idINKCN0V309W. 
  6. "And another ground station for Isro seems to be in works. This time around probably in Panama. : ISRO".
  7. "Expression Of Interest" (PDF). www.isro.gov.in. Archived from the original (PDF) on 2016-10-27. பார்க்கப்பட்ட நாள் 2021-04-01.
  8. Sheldon, John (2018-09-12). "São Tomé And Príncipe Signs Space Agreement With India". SpaceWatch.Global (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-03-29.
  9. Africa, Space in (2018-09-09). "India and Republic of Sao Tome and Principe sign MoU to set up Space centre". Space in Africa (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-03-29.

வெளி இணைப்புகள்[தொகு]