உள்ளடக்கத்துக்குச் செல்

இந்திய தொலை தூர விண்வெளி வலைப் பின்னல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்திய தொலை தூர விண்வெளி வலைப் பின்னல்
நிறுவியது17 அக்டோபர் 2008

இந்திய ஆழ்வெளி வலைப்பிணையம் (Indian Deep Space Network (IDSN)) என்பது மிகப்பெரிய அலைவாங்கி மூலம் கோள்களுக்கு இடையே செலுத்தும் விண்வெளி ஓடங்களின் இருப்பிடத்தை அறியவும் அவற்றைக் கண்காணித்து கட்டுப்படுத்தவும் இவை பயன்படுகின்றன. உதாரணமாக இந்தியாவின் மங்கள்யான் செயற்கைக் கோள் செவ்வாய் கிரகத்தை நோக்கிச் செல்லும் போது அதைக் கண்காணிக்கவும் கட்டுப் படுத்தவும் இவை பயன்படுகின்றன. இந்தியாவிற்கான தொலை தூர விண்வெளி வலைப் பின்னல் பெங்களூருக்கு அருகில் 'பயலாலு' பகுதியில் 17 அக்டோபர் 2008 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இதை நிறுவுவதற்கான மதிப்பு 62 கோடிகள் இந்திய ரூபாய் ஆகும்.[1] மேலும் அமெரிக்கா, ஐரோப்பிய விண்வெளி நிறுவனம், ரஷ்யா மற்றும் சீனா போன்ற நாடுகளும் தொலை தூர விண்வெளி வலைப் பின்னல் அமைப்பை அமைத்துள்ளன. உதாரணமாக இந்தியாவின் சந்திரயான் விண்கலத்தைக் கண்காணிக்க இது பயன்பட்டது. மேலும் மங்கள்யான் செயற்கைக் கோள் செவ்வாய் கிரகத்தை நோக்கிச் செல்லும் போது அதைக் கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் இவை பயன்படுகின்றன. இதன் அமைவிடம் 12°54′5.87″N 77°22′7.03″E / 12.9016306°N 77.3686194°E / 12.9016306; 77.3686194 ஆகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Bureau Report (2008-10-17). "32 metre antenna to track Chandrayaan". Zee News. Zee News Limited. பார்க்கப்பட்ட நாள் 2008-11-11.