இசுகைப்
Screenshot விண்டோசு எக்ஸ்பி இயங்குதளத்தில் இயங்கும் .சுகைப் 3.8 | |
உருவாக்குனர் | இசுகைப் நிறுவனம் |
---|---|
தொடக்க வெளியீடு | ஆகத்து 2003 |
மொழி | போர்லாண்ட் டெல்பி, ஒப்செக்டிவ் சி (iOS, Mac OS X), சி++ with Qt4 (லினக்சு) |
இயக்கு முறைமை | பல் இயங்குதளம் |
கிடைக்கும் மொழி | பன்மொழி |
மென்பொருள் வகைமை | இணையமூடான ஒலி / நிகழ்நிலைத் தூதுவன்/ வீடியோ அழைப்பு |
உரிமம் | இலவச மென்பொருள் (கட்டண செலுத்துவதன் ஊடாக மேலதிக சேவைகள்) |
இணையத்தளம் | http://www.skype.com/ |
ஸ்கைப் (Skype) என்பது இணையமூடாக ஒலி ஒளி அழைப்புக்களையும் அரட்டை அடிக்க வசதியையும் ஏற்படுத்த உதவும் ஓர் கணினி மென்பொருள் ஆகும். இதில் இதே வலையமைப்பில் உள்ளவர்களுக்கு இலவசமாக ஒலியழைப்பினை வழங்குதோடு தொலைபேசி மற்றும் நகர்பேசிகளுக்கு ஏற்கனவே பணம் கட்டியிருந்தால் அதிருந்து அழைப்புக்களுக்கான கட்டணத்தை அறவிட்டு அழைப்பினை ஏற்படுத்த இயலும். இதை விட மேலதிக வசதிகளாக நிகழ்நிலை உரையாடல், கோப்புப் பரிமாற்றம், ஒளித்தோற்ற (வீடியோ) உரையாடல்களையும் நிகழ்த்த இயலும். 2010ஆம் ஆண்டளவில் 663 பதிவுசெய்யப்பட்ட பயனர்களைக் கொண்டுள்ளது.[1]
ஏனைய இணையமூடான ஒலியழைப்புக்களை ஏற்படுத்தும் மென்பொருள் போல் அல்லாமல் ஸ்கைப் சகா-சகா முறையிலேயே இணைப்புக்களை ஏற்படுத்துகின்றது.
ஸ்கைப் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்தே வாடிக்கயாளர்களைக் கவர்வதில் வெற்றிகண்டு அபரிமிதமாக வளர்ந்து வருகின்றது. ஈபே என்கின்ற இணைய வணிக நிறுவனத்தினால் செப்டமபர் 2005 ஆம் ஆண்டு உள்வாங்கப்பட்டது.
வசதிகள்
[தொகு]ஸ்கைப் இன்
[தொகு]ஸ்கைப் இன் பொதுவான தொலைபேசிகளில் இருந்து கணினிக்கு ஒலி அழைப்புக்களை ஏற்படுத்தப் பயனபடும். உள்ளூர்த் தொலைபேசி இலக்கங்கள் ஆஸ்திரேலியா, பிரேசில், சிலி, டென்மார்க், டொமினிக்கன் குடியரசு, எஸ்தோனியா, பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஹாங்காங் ஹங்கேரி, அயர்லாந்து, இத்தாலி, ஜப்பான், மெக்சிக்கோ, நியூசிலாந்து, போலந்து, ருமேனியா, தென்கொரியா, சுவீடன், சுவிட்சர்லாந்து, ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகளின் உள்ளூர்த் தொலைபேசி இலக்கத்தினைப் பெற்றுக் கொள்ளலாம். ஸ்கைப் பயனர் ஒருவர் இந்த நாடுகளில் ஏதாவது ஒன்றில் உள்ளூர் தொலைபேசி இலக்கத்தினைப் பெற்றுக்கொள்ளலாம். எனவே கணினிக்கு அழைப்பு எடுப்பதற்கு ஆகும் செலவு உள்ளூர் தொலைபேசிக்கு ஏற்படுத்தும் அழைப்புக்கான கட்டணமே ஆகும். எடுத்துக்காட்டாக, ஐரோப்பாவில் உள்ளூர்த் தொலைபேசி இலக்கங்களுக்கு கட்டணம் ஏதுமின்றி இணைப்பை ஏற்படுத்த இயலும் எனில் ஸ்கைப் பயனருக்கும் அவ்வாறே கட்டணம் ஏதும் இன்றி அழைப்பை ஏற்படுத்தலாம். பிரான்ஸ் ஜெர்மனி ஆகிய நாடுகளில் வசிக்காமல் உள்ளூர்த் தொலைபேசி இலக்கத்தைனைப் பாவிப்பதானது சட்டபூர்வமற்ற ஓர் செயலாகும்.
ஒளிக் குழு விவாதங்கள்
[தொகு]ஒலி அழைப்புக்களுக்கு மேலதிகமாகப் முகத்தைப் பார்த்தவண்ணமே உரையாடலை நிகழ்த்தக் கூடிய வசதி ஜனவரி 2006ல் விண்டோஸ் மற்றும் மேக் ஓ. எஸ். இயங்குதளங்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டது. 13 மார்ச் 2008ல் லினக்ஸ் இயங்குதளத்திற்கான ஸ்கைப் 2.0 இந்த வசதியினைக் அறிமுகப்படுத்தியது. விண்டோசு இயங்குதளத்தில் இயங்கும் ஸ்கைப் 3.6.0.216 பதிப்பில் இருந்து சிறந்த காணொளித் தரத்துடன் பல்வேறு கூடுதல் வசதிகளையும் அறிமுகப்படுத்தப்பட்டது.
ஸ்கைப் அவுட்
[தொகு]ஸ்கைப் அவுட் (Skypeout) ஸ்கைப்பின் ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட சேவையாகும். இதன் மூலம் உலகின் எப்பாகத்திலுள்ளவர்களிற்கும் தொலைபேசி அழைப்புக்களை ஏற்படுத்த முடியும். இது மூடிய சகா-சகா (Peer-to-Peer - சமவுரிமைப் பகிர்வு பிணையம்) முறையில் இயங்கும் இணையத் தொலைபேசி, தொலையெழுது வலையமைப்பு ஆகும். இந்த மென்பொருளானது பல்வேறு பாதுகாப்புத் தடுப்புகள் (சுவர்கள்) கொண்டதும் மற்றும் பிணைய முகவரி மொழிபெயர்ப்பு ஊடாக ஒலியழைப்புக்கள் சிறு பொதிகளாக்கப்பட்டு வேறு கணினி மென்பொருட்களுடன் சேர்த்து அனுப்பப்படும் அமைப்பு கொண்டது. ஒரு 'ஸ்கைப் பயனர் பிறிதோர் ஸ்கைப் பயனருடன் அல்லது ஸ்கைப்பில் குழு உரையாடலிலும் (ஒலி சார்ந்த உரையாடல்களுக்கு 5 பேருக்கு மிகையாகமல்) முற்றிலும் இலவசமாக உரையாட முடியும். இது தவிர விண்டோஸ் எக்ஸ்பி பயனர்கள் இணைய ஒளிப்படக்கருவி இருப்பின் அழைக்கபட்டவர்களைப் பார்த்துக் கொண்டே உரையாடமுடியும். ஸ்கைப் பயனர்கள் கட்டணம் செலுத்தி பன்னாட்டு மற்றும் உள்ளூர் அழைப்புகளை மேற்கொள்ளமுடியும். இது மாத்திரமன்றி நிலம்வழி கம்பிவடம் வழியாக இயங்கும் தொலைபேசியில் இருந்து ஸ்கைப்பிற்கும் தொலைபேசி அழைப்புக்களை ஏற்படுத்த முடியும் இது ஸ்கைப் இன் (SkypeIn) என்றழைக்கப் படுகின்றது.
2005ல் சுமார் 225 நாடுகள் மற்றும் தன்னாட்சிப் பகுதிகளில் வாழும் 54 பயனர்களைக் கொண்டுள்ளது. நாளொன்றுக்கு 150,000 புதுப்பயனர்களை ஈர்த்துக்கொண்டு வருகின்றது என அறியப்படுகின்றது.
மைக்ரோசாப்ட் கையகப்படுத்தல்
[தொகு]பிரபல மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாப்ட் மே 10, 2011 அன்று ஸ்கைப் நிறுவனத்தைத் தாம் 8.5 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்குக் கையகப்படுத்தியதாக அறிவித்துள்ளது. எதிர்காலத்தில் ஸ்கைப் நிறுவனம் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஒரு பகுதியாக இருப்பதுடன், ஸ்கைப் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி அதே நிறுவனத்தின் அதிபராக நியமனம் பெற்றுள்ளதுடன் மைக்ரோசாப்ட் தலைமைச் செயல் அதிகாரி ஸ்டீவ் பால்மருக்கு கீழ் பணியாற்றுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.