போர்லாண்ட் டெல்பி
Delphi XE2 IDE with cross-platform Firemonkey framework project loaded | |
வடிவமைப்பு | போர்லாண்ட் (1995–2008) |
---|---|
உருவாக்குனர் | Embarcadero Technologies (2009–present) |
அண்மை வெளியீடு | Delphi XE4 (v18.0) / ஏப்ரல் 22 2013 |
இயக்கு முறைமை | மைக்ரோசாப்ட் விண்டோசு |
கிடைக்கும் மொழி | English, French, German and Japanese |
உருவாக்க நிலை | Active |
மென்பொருள் வகைமை | ஒருங்கிணை விருத்திச் சூழல் |
உரிமம் | Commercial |
இணையத்தளம் | www |
போர்லாண்ட் டெல்பி போர்லாண்ட் மென்பொருள் நிறுவனத்தின் மென்பொருட்களை விருத்தி செய்வதற்கான மென்பொருளாகும். இதன் பத்தாவது பதிப்பான டெல்பி 2006 ஆனது டெல்பி நிரலாக்கல் மொழி மற்றும் சி++ ஆகியவற்றை 32 பிட் விண்டோஸ் இயங்குதளத்தில் ஆதரிக்கின்றது அத்துடன் இது C# மற்றும் மைக்ரோசாப்ட்.நெட்டையும் ஆதரிக்கின்றது.
டெல்பியின் முக்கிய பயன்பாடானது தகவற் தளங்களைக் கையாளவதிலேயே தங்கியுள்ளதெனினும் பொதுவாக அநேகமான மென்பொருள் விருத்தி திட்டங்களிலும் இம் மென்பொருள் பயன்படுத்தப் படுகின்றது. தமிழைக் கணினிகளில் உட்புகுத்துவதில் முன்னோடியான நளினம் மென்பொருளும் டெல்பியிலேயே உருவாக்கப் பட்டுள்ளது.
சரித்திரம்
[தொகு]டெல்பி ஆரம்பத்திலிருந்தே துரித விருதிச் சூழல் மென்பொருளாக வெளிவந்தது. 1995ஆம் ஆண்டு 16 பிட் விண்டோஸ் 3.1 இயங்குதளத்திற்கு வெளிவந்தது. பின்னர் ஒருவருட்டத்தில் 32 பிட் இயங்குதளக் கணினிகளுக்கான டெல்பி 2 வெளிவந்தது. சிலவருடங்களில் இதே பாணியில் C++ பில்டர் மென்பொருளும் வெளிவந்தது.
டெல்பியை ரேபோ பாஸ்கல் ஒருங்கிணைக்கப் பட்ட விருத்திச் சூழலை (IDE) உருவாக்கிய் அண்டர் ஹிஜல்பேக்கே முன்னின்று உருவாக்கினார். 1996 ஆம் ஆண்டு மைக்ரோசாப்ட் இவரை உள்வாங்கும் வரை இவரே போர்லாண்டில் டெல்பி விருத்தித் திட்டங்களிற்கு முன்னின்றார்.
2001 ஆம் ஆண்டு லினக்ஸ் இயங்குதளங்களிற்கான கைலிக்ஸ் என்ற டெல்பிக்கான லினக்ஸ் பதிப்பு உருவாக்கப் பட்டதெனினும் பயனர்களின் ஆர்வக்குறைவால் 3ஆவது பதிப்பிலிருந்து இடைநிறுத்தப் பட்டது.
டெல்பி 6 உடன் விண்டோஸ் மற்றும் லினக்ஸ் இயங்குதளங்களை ஆதரிக்கும் பொதுவான பகுதிகள் சேர்த்துக் கொள்ளப்பட்டன.
டெல்பி 8 ஆனது டிசெம்பர் 2003 வெளிவந்து மைக்ரோசாப்ட்.நெட் ஐ ஆதரிக்கும் வகையில் வெளிவந்தது. இதில் முதற்தடவையாக விஷ்வல் ஸ்ரூடியோ போன்று ஒருங்கிணைக்கப் பட்ட விருத்திச் சூழலானது மாற்றப் பட்டது.
அநுகூலங்களும் பிரதிகூலங்களும்
[தொகு]அநுகூலம்
[தொகு]- துரித விருத்தி செய்யும் சூழல்
- நன்றாக விருத்தி செய்யப் பட்ட பாஸ்கல் மொழியிலமைந்த நிரலாக்கம்.
- தானாகவே இயங்கும் கோப்புக்களாக மாற்றும் வசதி. இங்கு dll பிரச்சினைகள் ஏதும் கிடையாது.
- துரிதாமாக கம்பைல் பண்ணும் வசதி
- ஒரே நிரலாக்கலில் இருந்து பல இயங்கு தளங்களிற்கான விருத்தி செய்யும் வசதி
- பதிப்புகளிடையே ஒத்தியங்கும் மூல நிரல்கள்
பிரதிகூலங்கள்
[தொகு]- பல் இயங்குதளங்களில் இயங்குவதற்கு ஓரளவே வசதியுண்டு
- இயங்கு தளங்களை அணுகிப் பாவிப்பதற்கும் வேறு மென்பொருள் விருத்தியாளரைகளின் மென்பொருட்களைப் பாவிப்பதற்கும் ஹெடர் கோப்புக்கள் அவசியம்.
- C++ மற்றும் C# உடன் ஒப்பிடுகையில் மிகக் குறைவான புத்தகங்களே பிரசுரிக்கப் பட்டுள்ளன.
பெயர்க் காரணம்
[தொகு]ஆரம்பதில் தகவற் தளங்களை அணுகுவதற்கு ஓர் மென்பொருளை உருவாகி வந்தனர் அக்காலத்தில் பிரபலமான ஆரக்கிள் தகவற் தளத்தை இணைப்பதற்கு டெல்பி என்ற இரகசியப் பெயருடன் திட்டமானது ஆரம்பிக்கப்பட்டது. இப்பெயரயே பலரும் விரும்பியதால் இது இன்றளவும் டெல்பி என்றே அழைக்கப் படுகின்றது.