இசானுல்லா
இசானுல்லா (Ihsanullah பிறப்பு: டிசம்பர் 28, 1997) ஒரு ஆப்கானிஸ்தான் துடுப்பாட்ட வீரர், இவர் வலது கை துவக்க மட்டையாளர் ஆவார்.[1] இவர் ஜூலை 29, 2016 அன்று 2015–17 ஐ.சி.சி இன்டர் கான்டினென்டல் கோப்பையில் நெதர்லாந்துக்கு எதிராக ஆப்கானிஸ்தான் துடுப்பாட்ட அணி சார்பாக முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் இவர் அறிமுகமானார்.[2] தனது முதல் தர அறிமுகத்திற்கு முன்பு, இவர் 2016 ஆம் ஆண்டில் 19 வயதுக்குட்பட்ட துடுப்பாட்ட உலகக் கோப்பையில் விளையாடினார் .[3][4] இவர் மார்ச் 2019 ஆம் ஆண்டில் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார்.[5] 2018 ஜூன் மாதம் இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஆப்கானிஸ்தானின் முதல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் தேர்வாகிய துடுப்பாட்ட வீரர்களில் இவரும் ஒருவர். இவர் ஆப்கன் துடுப்பாட்ட அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 ஆகிய போட்டிகளில் விளையாடி வருகிறார், மேலும் இவர் பட்டியல் அ துடுப்பாட்ட ம், முதல் தரத் துடுப்பாட்ட ம் மற்றும் இருபது20 ஆகிய உள்ளூர்ப் போட்டிகளிலும் விளையாடி வருகிறார்.
டிசம்பர் 2018 ஆம் ஆண்டில் , 2018 ஏ.சி.சி வளர்ந்து வரும் அணிகள் ஆசிய கோப்பைக்கான ஆப்கானிஸ்தானின் 23 வயதுக்குட்பட்ட அணியில் இடம் பெற்றார்.[6]
துடுப்பாட்ட வாழ்க்கை
[தொகு]உள்ளூர் போட்டிகள்
[தொகு]டிசம்பர் 2018 ஆம் ஆண்டில் , 2018 ஏ.சி.சி வளர்ந்து வரும் அணிகள் ஆசிய கோப்பைக்கான ஆப்கானிஸ்தானின் 23 வயதுக்குட்பட்ட அணியில் இடம் பெற்றார்.
சர்வதேச போட்டிகள்
[தொகு]2017 ஆம் ஆண்டில் ஆப்கானித்தான் துடுப்பாட்ட அணி சிம்பாப்வேயில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. பெப்ரவரி 24, அராரே துடுப்பாட்ட மைதானத்தில் சிம்பாப்வே துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். அந்தப் போட்டியில் இவர் பந்துவீச வாய்ப்பு கிடைக்கவில்லை. பின் மட்டையாட்டத்தில் 20 பந்துகளில் ஓட்டம் எதுவும் எடுக்காமல் சதாரா பந்துவீச்சில் இவர் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் சிம்பாப்வே துடுப்பாட்ட அணி 7 இலக்குகளில் வெற்றி பெற்றது.[7]
2018 ஜூன் மாதம் இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஆப்கானிஸ்தானின் முதல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடிய பதினொரு துடுப்பாட்ட வீரர்களில் இவரும் ஒருவர். ஆனால் விளையாடும் அணியில் இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.[8][9] பிப்ரவரி 2019 ஆம் ஆண்டில் , இந்தியாவில் அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தானின் தேர்வுத் துடுப்பாட்ட அணியில் இடம் பெற்றார்.[10][11] இவர் மார்ச் 15, 2019 அன்று அயர்லாந்திற்கு எதிராக ஆப்கானிஸ்தானுக்காக தனது முதல் தெர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார்.[12]
2019 ஆம் ஆண்டில் அயர்லாந்துத் துடுப்பாட்ட அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. மார்ச் 15, டெஹ்ரடம் துடுப்பாட்ட மைதானத்தில் அயர்லாந்துத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். அந்தப் போட்டியில் இவர் பந்துவீச வாய்ப்பு கிடைக்கவில்லை. முதல் ஆட்டப் பகுதியில் 34 பந்துகளில் 7 ஓட்டங்கள் எடுத்து கேமரான் பந்துவீச்சில் இவர் ஆட்டமிழந்தார்.இரண்டாவது ஆட்டப் பகுதியில் 125 பந்துகளில் இருதிவரை ஆட்டமிழக்காமல் 69 *ஓட்டங்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினார். இந்தப் போட்டியில் ஆப்கானித்தான் துடுப்பாட்ட அணி 7 இலக்குகளில் வெற்றி பெற்றது.[13]
குறிப்புகள்
[தொகு]- ↑ "Ihsanullah". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 29 July 2016.
- ↑ "ICC Intercontinental Cup, Netherlands v Afghanistan at The Hague, Jul 29 – Aug 1, 2016". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 29 July 2016.
- ↑ "Afghanistan U-19s Squad". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 8 January 2016.
- ↑ "Uncapped Ihsanullah in Afghanistan's Intercontinental Cup squad". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 29 July 2016.
- ↑ "Rahmat Shah, Ihsanullah see Afghanistan through to historic maiden Test win". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 30 March 2019.
- ↑ "Afghanistan Under-23s Squad". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 3 December 2018.
- ↑ "Full Scorecard of Zimbabwe vs Afghanistan 4th ODI 2017 - Score Report | ESPNcricinfo.com". ESPNcricinfo (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-11-17.
- ↑ "Afghanistan Squads for T20I Bangladesh Series and on-eoff India Test Announced". Afghanistan Cricket Board. Archived from the original on 29 மே 2018. பார்க்கப்பட்ட நாள் 29 May 2018.
- ↑ "Afghanistan pick four spinners for inaugural Test". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 29 May 2018.
- ↑ "Mujeeb left out for Ireland Test, Shahzad out of T20Is". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 7 February 2019.
- ↑ "No Mujeeb in Tests as Afghanistan announce squads for Ireland series". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 7 February 2019.
- ↑ "Only Test, Ireland tour of India at Dehra Dun, Mar 15-19 2019". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 15 March 2019.
- ↑ "Full Scorecard of Afghanistan vs Ireland Only Test 2019 - Score Report | ESPNcricinfo.com". ESPNcricinfo (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-11-17.