உள்ளடக்கத்துக்குச் செல்

ஆஷாபுர மாதா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆஷாபுர மாதா (Ashapura Mata) என்பது இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் கட்சு மாவட்டப் பகுதியில் வணங்கப்படும் ஒரு இந்துப் பெண் தெய்வமாகும். மேலும் அங்கு தேவி அம்சமாக வழிபடப்படும் முதன்மை தெய்வங்களில் ஒன்றாகும். இவளது பெயருக்கு ஏற்றார்ப்போல அவளை நம்பி வழிபடுகின்ற அனைவரின் ஆசைகளையும் விருப்பங்களையும் நிறைவேற்றும் தெய்வமவள். ஆஷாபுர மாதாவின் சிலையில் 7 ஜோடி கண்கள் உள்ளன. என்பது அச்சிலை பற்றிய தனித்துவமான விஷயம் ஆகும்.

அவரது கோயில்கள் முக்கியமாக குஜராத்தில் பலவிடங்களில் காணப்படுகின்றன. ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் உள்ள சிலர், ஆஷாபுர தேவியானவள் அன்னபூரணியின் அவதாரம் என்று கருதுகின்றனர்.

குலதேவி[தொகு]

குஜராத்தில் கட்சின் பல சமூகங்களில் அவர் குலதேவியாக வணங்கப்படுகிறார். அதில் பில்லோர் பகுதி மக்கள் சவுகான்கள், ஜடேஜா ராஜபுத்திரர்கள் ஆகிய வம்சத்தினர் கட்ச் இராச்சியம், நவநகர் மாநிலம், ராஜ்கோட், மோர்வி, கோண்டல் மாநிலம் அம்பிலாரா மாநிலம் மற்றும் த்ரோல் (பாரியா ஸ்டேட்) ஆகிய மக்கள் மற்றும் அவர்களின் வம்சத்தின் முதன்மைக் குல தெய்வம் ஆஷாபுர மாதா ஆவார். இவருக்கான பிரதான கோயில் கச்சில் உள்ள மாதா நோ மத்தில் அமைந்துள்ளது, அங்கு அவர் கட்சின் ஜடேஜா ஆட்சியாளர்களின் குலதேவி மற்றும் பிராந்தியத்தின் முக்கிய பாதுகாவல் தெய்வமாக வணங்கப்படுகிறார். [1] கச்சின் கோசர் & பொலாடியா சமூகம் அவளை தங்கள் குலதேவி என்று கருதுகிறது.


கிந்தா குழுவைப் போலவே சிந்தி சமூகமும் ஆஷாபுரா மாதாவை தங்கள் குலதேவியாக வணங்குகிறது. குஜராத் ஜுனகாத்தில், தேவ்சந்தனி பரிவார் குழுக்கள் அவளை குல்தேவி என்று வணங்குகிறார்கள், அங்கு அவரது கோயில் [உபர்கோட்] அருகில் அமைந்துள்ளது.


குஜராத்தில், பல சௌகான், புராபியா சௌஹான்கள் போன்ற பாரியா ராஜபுத்திரர்களும் அவரை குலதேவி என்று வணங்குகிறார்கள். தேவதா ராஜபுத்திரர்களும் அவளை குலதேவி என்று வணங்குகிறார்கள். பிராமண சமூகங்களான பில்லூர், கௌர் [லதா] தங்கி, பண்டிட் மற்றும் தேவ் புஷ்கர்ணா, சோம்புரா சலாத் ஆகியோரும் அவளை குலதேவி என்று வணங்குகிறார்கள். விஜயவர்கியா போன்ற வைஷ்ய சமூகம் கூட அவளை வணங்குகிறது. பிரம்மா சத்ரிய சாதியும் அவளை தங்கள் குலதேவியாக வணங்குகிறது.

சோதா, தரஃபா, சூரத், ராஜ்கோட் தார்பா ஆகிய பகுதிகளிலிருந்து வரும் ரகுவான்ஷி லோஹனா சமூகத்திலும் தங்கள் குலதேவியாக ஆஷாபுர மாதாவை அழிபாடு செய்கிறார்கள்.

கோயில்கள்[தொகு]

முன்பு கூறியது போல், ஆஷாபுரா மாதாவின்முதன்மையான மற்றும் மூலக் கோயில், கச்சில் உள்ள மாதா நோ மத் என்ற இடத்தில் அமைந்துள்ளது, அங்கு அவர் கட்சின் ஜடேஜா ஆட்சியாளர்களின் குலதேவி மற்றும் பிராந்தியத்தின் முக்கிய பாதுகாவல் தெய்வமாக வணங்கப்படுகிறார். [1] [2] அசல் கோயில் பூஜ் பகுதியிலிருந்து 90 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பழையமையான இக்கோயில் கி.பி. 1300 ஆம் ஆண்டு.கட்சின் ஆட்சியாளரான லாகோ ஃபுலானியின் நீதிமன்றத்தில் அமைச்சர்களாக இருந்தவர்களான கராட் பணியா சமூகத்தின் அஜோ, அனகோர் என்ற இருவரால் மறு நிர்மாணம் செய்யப்பட்டது..பின்னர் ஆட்சி செய்த ஜடேஜா ஆட்சியாளர்களால், தேவியின் ஆசீர்வாதங்களுடன் அவர்கள் போர்களில் வென்றபோது அவர்களின் குலதேவியாகத் தழுவப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் மாதா நோ மத்தில் நவராத்திரி ஆண்டு கண்காட்சியில், லட்சக்கணக்கான பக்தர்கள் குஜராத் மற்றும் மும்பை முழுவதிலும் இருந்து இந்த தெய்வ வடிவத்திற்கு மரியாதை செலுத்துகிறார்கள். [3] மற்றொரு கோயில் பூஜில் உள்ளது, இது கோட்டை நகரத்திற்குள் அமைந்துள்ளது, இது முதலில் கட்ச் இராச்சியத்தின் தலைநகராக இருந்தது

அவரது கோயில்கள் ராஜ்கோட், ஜஸ்டான், [4] மோர்பி, கோண்டல், ஜாம்நகர், [5] கும்லி, ஆகிய மற்ற ஜடேஜா களங்களிலும் காணப்படுகின்றன, அங்கு கட்சிலிருந்து குடிபெயர்ந்த ஜடேஜாக்கள், அவரது கோயில்களைக் கட்டி, அவளை குல தெய்வமாக நிறுவினர். [2] [6] [7]

பார்தா மலைகளில் உள்ள கும்லியில், ஒரு சதியின் வேண்டுகோளின் பேரில் மா சக்தி ஒரு அரக்கனைக் கொள்கிறார். பின்னர்,சதி ஆஷாபுர மாடாவை மலைகளில் வசிக்கும்படி அவள் கேட்டுக்கொள்கிறாள், அவளுக்கு மா ஆஷாபுர என்று பெயரிட்டாள். இது இத்தேவியின் முதல் கோயில்..

ஆஷாபுரா மாதா கோயில் அம்ரேலி மாவட்டத்தில் உள்ள கட்கடா கிராமத்தில் உள்ளது. நவராத்திரியின் ஒவ்வொரு 1 வது நாளிலும், மாதாவின் யாகத்திற்காக நிறைய பேர் அங்கு வருகிறார்கள்.

அம்ரேலி மாவட்டத்தில் உள்ள கடக்தா கிராமத்தில் ஆஷாபுரா மாதா

ராஜஸ்தானில், அவரது கோயில்கள் போக்ரான், மோட்ரான் மற்றும் நாடோலில் உள்ளன . மும்பையிலும் ஆஷாபுரா மாதாவின் புகழ்பெற்ற கோயில் உள்ளது.

பெங்களூரில், பன்னேர்கட்டா தேசிய பூங்காவிற்கு அருகில் அமைந்துள்ள "எஸ். ஆஷபுரா மாதாஜி மந்திர்" என்ற பெயரில் ஒரு கோயில் உள்ளது.

புனேவில், கோந்த்வா அருகே கோயில் உள்ளது.

மேலும் காண்க[தொகு]

  • மாதா நோ மத்

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 [1] Kutch in festival and custom By K. S. Dilipsinh.
  2. 2.0 2.1 From Bhuj, the capital of erstwhile state of Kutch, about 80 km to the north is the temple of Ma Ashapura at Mata no Madh. It has become a live symbol of faith of people of Kutch in the last 600 years.
  3. People turn up in lakhs at Mata no Madh in Kutch பரணிடப்பட்டது 16 மே 2008 at the வந்தவழி இயந்திரம்
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-02-04. பார்க்கப்பட்ட நாள் 2020-03-27.
  5. Jamnagar
  6. Bhuj
  7. "The Goddess 'Ashapura' is not only the family holy being of the rulers of Kutch, but also the family deity of all the branches of Jadeja in Saurashtra. The temple of Ashapura is open for all irrespective of caste, belief or religion". Archived from the original on 2011-07-05. பார்க்கப்பட்ட நாள் 2020-03-27.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆஷாபுர_மாதா&oldid=4014273" இலிருந்து மீள்விக்கப்பட்டது