உள்ளடக்கத்துக்குச் செல்

ஆர்சனிக்கு மோனோபாசுபைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆர்சனிக்கு மோனோபாசுபைடு
Arsenic monophosphide
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
ஆர்சனைலிடைல்பாசுபேன்
வேறு பெயர்கள்
ஆர்சனிக்கு பாசுபைடு
இனங்காட்டிகள்
12255-33-3
InChI
  • InChI=1S/AsP/c1-2
    Key: CFLINJYOEUVYMI-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 15845941
  • P#[As]
பண்புகள்
AsP
வாய்ப்பாட்டு எடை 105.89536 கி/மோல்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

ஆர்சனிக்கு மோனோபாசுபைடு (Arsenic monophosphide) என்பது AsP என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். ஆர்சனிக்கு பாசுபைடு என்ற பெயராலும் இச்சேர்மம் அழைக்கப்படுகிறது.[1] ஆர்சனிக்கும் பாசுபரசும் சேர்ந்து இந்த இருமச் சேர்மம் உருவாகிறது. இரும பாசுபைடு என்றும் நெடுங்குழு 15 தனிமங்களிடை சேர்மம் அல்லது நைட்ரசன் குழுவிடை சேர்மம் என்றும் இது வகைப்படுத்தப்படுகிறது. ஆர்சனிக்கு மோனோபாசுபைடு சேர்மத்தில் ஆர்சனிக்கு மற்றும் பாசுபரசு தனிமங்களுக்கிடையில் உள்ள விகிதங்கள் நிலையானவை அல்ல. இவை மேலும் மாறுபடலாம். அமையும் விகிதத்தைப் பொறுத்து ஆற்றல் இடைவெளி மாறுகிறது.[2]

தயாரிப்பு[தொகு]

ஆர்சனிக் மோனோபாசுபைடு, ஆர்சனிக் மற்றும் பாசுபரசு ஆகிய நிக்டோசன்கள் எனப்படும் இரண்டு நைட்ரசன் குழு தனிமங்களின் வினையின் மூலம் உருவாகிறது. முத்திரை செய்யப்பட்ட சிலிக்கா கலன்களில் ஈயம் உருகலில் இவ்வினை நிகழ்கிறது. ஐதரசன் பெராக்சைடு மற்றும் உறைநிலை அசிட்டிக் அமிலம் ஆகியவற்றின் கலவையைப் பயன்படுத்தி பின்னர் ஈயம் அகற்றப்படுகிறது.[3]

கட்டமைப்பு[தொகு]

ஆர்சனிக்கு பாசுபைடின் கட்டமைப்பு இரு பரிமாண மோனோ அடுக்குகளால் ஆனதாகும். இவை பாசுபரசு மற்றும் ஆர்சனிக்கு ஆகியவற்றின் சமநிலை கலவையால் ஆக்கப்படுகிறது.[4]

பயன்கள்[தொகு]

மருந்துகள், பாதுகாப்பு பொருட்கள், இரசாயனங்கள், வெள்ளையணுப் புற்றுநோய் சிகிச்சை, தடிப்புத் தோல் அழற்சி, நாள்பட்ட மூச்சுக்குழாய் ஆத்துமா மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பிகளில் ஆர்சனிக்கு மோனோபாசுபைடு பயன்படுத்தப்படுகிறது.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. PubChem. "Arsenic phosphide (AsP)". pubchem.ncbi.nlm.nih.gov (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-08-06.
  2. Long, Mingsheng; Gao, Anyuan; Wang, Peng; Xia, Hui; Ott, Claudia; Pan, Chen; Fu, Yajun; Liu, Erfu et al. (2 June 2017). "Room temperature high-detectivity mid-infrared photodetectors based on black arsenic phosphorus". Science Advances 3 (6): e1700589. doi:10.1126/sciadv.1700589. பப்மெட்:28695200. Bibcode: 2017SciA....3E0589L. 
  3. Schäfer, Konrad; Köhler, Korbinian; Baumer, Franziska; Pöttgen, Rainer; Nilges, Tom (2016-05-01). "Synthesis and structure determinantion of the first lead arsenide phosphide Pb2AsxP14–x (x ~ 3.7)" (in en). Zeitschrift für Naturforschung B 71 (5): 603–609. doi:10.1515/znb-2016-0048. பன்னாட்டுத் தர தொடர் எண்:1865-7117. https://www.degruyter.com/document/doi/10.1515/znb-2016-0048/html?lang=en. 
  4. Shojaei, Fazel; Kang, Hong Seok (2015-08-27). "Electronic Structure and Carrier Mobility of Two-Dimensional α Arsenic Phosphide" (in en). The Journal of Physical Chemistry C 119 (34): 20210–20216. doi:10.1021/acs.jpcc.5b07323. பன்னாட்டுத் தர தொடர் எண்:1932-7447. https://pubs.acs.org/doi/10.1021/acs.jpcc.5b07323. 
  5. Humans, IARC Working Group on the Evaluation of Carcinogenic Risks to (2012), "ARSENIC AND ARSENIC COMPOUNDS", Arsenic, Metals, Fibres and Dusts (in ஆங்கிலம்), International Agency for Research on Cancer, பார்க்கப்பட்ட நாள் 2023-11-28