ஆர்கியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆர்கியா
காட்டுச் சிலம்பன்-ஆர்கியா இசுடைரேட்டா
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
லியோத்ரிச்சிடே
பேரினம்:
மாதிரி இனம்
ஆர்கியா சுகுவாமிசெப்சு[1]
சிற்றினம்

உரையினை காண்க

ஆர்கியா (Argya) என்பது லியோத்ரிச்சிடே குடும்பத்தில் உள்ள பாசரைன் பறவைகளின் பேரினமாகும். இந்த பேரினத்தின் சிற்றினங்கள் ஆப்பிரிக்கா மற்றும் தெற்காசியா முழுவதும் காணப்படுகின்றன. பொதுவாக இவை பெரிய குழுக்களாக நீண்ட வாலுடன் காணப்படும் பறவைகள் ஆகும். இந்தப் பேரினத்தின் சிற்றினங்கள் முன்பு டர்டாய்ட்சு மற்றும் காருலாக்சு பேரினத்தின் கீழ் வகைப்படுத்தப்பட்டன.

வகைப்பாட்டியல்[தொகு]

 

துர்டோயிடசு

 
 
 
 

ஆர்கியா சுப்ருபா

ஆர்கியா லாங்கிரோசுட்ரிசு

 

ஆர்கியா அபினிசு

ஆர்கியா இசுடைரேட்டா

 
 

ஆர்கியா அய்ல்மேரி

ஆர்கியா ரூபிகினோசா

 

ஆர்கியா காடேடா

 
 

ஆர்கியா ஏர்லி

ஆர்கியா குலாரிசு

 

ஆர்கியா புல்வா

ஆர்கியா இசுகுவாமிசெப்சு

 

ஆர்கியா சினிரிப்ரான்சு

ஆர்கியா மல்கோல்மி

2018ஆம் ஆண்டு நடைபெற்ற தொகுதி பிறப்பு ஆய்வின் முடிவாக சிற்றினங்களுக்கிடையேயான தொடர்பு[2]

ஆர்கியா பேரினத்தில் இப்போது வைக்கப்பட்டுள்ள பெரும்பாலான சிற்றினங்கள் முன்பு துர்டோயிட்சு பேரினத்தின் கீழ் வகைப்படுத்தப்பட்டன. 2018-ல் மூலக்கூறு தொகுதிபிறப்பு ஆய்வு முடிவு வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, துர்டோயிட்சு பிரிக்கப்பட்டு, 1831-ல் பிரெஞ்சு இயற்கை ஆர்வலர் ரெனே லெசனால் ஏற்படுத்தப்பட்ட ஆர்கியா என்ற பேரினத்தின் கீழ் மாற்றப்பட்டன.[2][3][4] இலத்தீன் சொல்லான argutus என்பதிலிருந்து இதன் பெயர் வந்தது அர்கடசு என்பதன் பொருள் "சத்தம்" என்பதாகும்.[5] இப்பேரினத்தின் மாதிரி சிற்றினம் குறிப்பிடவில்லை. ஆனால் இது 1855ஆம் ஆண்டில் இங்கிலாந்து விலங்கியல் நிபுணர் ஜார்ஜ் ராபர்ட் கிரே மூலம் அரேபியச் சிலம்பன் (ஆர்க்யா இசுகாமிசெப்சு) எனக் குறிப்பிடப்பட்டது.[6][7]

சிற்றினங்கள்[தொகு]

இந்த பேரினத்தில் 16 சிற்றினங்கள் உள்ளன. அவை:[3][8]

படம் பொதுப்பெயர் விலங்கியல் பெயர் பரவல்
பெரிய வெள்ளை சிலம்பன் ஆர்கியா மல்கோல்மி இந்தியா
சாம்பல்-தலை சிலம்பன் ஆர்கியா சினிரிப்ரான்சு முன்பு கர்ருலாக்சில் இலங்கை
அரேபியச் சிலம்பன் ஆர்கியா ஸ்குவாமிசெப்சு' ஐக்கிய அமீரகம், ஓமன், யெமன் & மேற்கு சவுதி அரேபியா
பழுப்புச் சிலம்பன் ஆர்கியா புல்வா அல்ஜீரியா, சாட், எகிப்து, எரித்தியா, எத்தியோப்பியா, லிபியா, மலாய், மூரித்தானியா, மொராக்க, நைஜர், நைஜீரியா, சென்கல், சூடான், துனிசியா
வெண் தொண்டை சிலம்பன் ஆர்கியா குலாரிசு மியான்மர்.
வரிச்சிலம்பன் ஆர்கியா ஏர்லி பாக்கித்தான் முதல் மியான்மர் வரை
ஈராக் சிலம்பன் ஆர்கியா அல்டிரோஸ்ட்ரிசு ஈராக் & தென்மேற்கு ஈரான்
தவிட்டிச் சிலம்பன் ஆர்கியா கௌடாடா இந்தியா.
ஆப்கான் சிலம்பன் ஆர்கியா ஹட்டோனி தென்கிழக்கு ஈராக் முதல் தென்மேற்கு பாக்கித்தான் வரை
செஞ்சிலம்பன் ஆர்கியா ரூபிகினோசா எத்தியோபியா, கென்யா, சோமாலியா, சூடான், தான்சானிய, உகண்டா
செதில் சிலம்பன் ஆர்கியா அய்ல்மேரி எத்தியோப்பியா, கென்யா, சோமாலியா, தான்சானியா
பன்றிக்குருவி ஆர்கியா அபினிசு தென்னிந்தியா, இலங்கை
காட்டுச் சிலம்பன் ஆர்கியா ஸ்ட்ரைடா இந்தியா
ஆரஞ்சு அலகு சிலம்பன் ஆர்கியா ரூபெசென்சு இலங்கை
மெலிந்த அலகு சிலம்பன் ஆர்கியா லாங்கிரோசுட்ரிசு) வங்காளதேசம், நேபாளம், தென்னிந்தியா, மியான்மார்
உளறுவாய் குருவி ஆர்கியா சுப்ருபா இந்தியா

மேற்கோள்கள்[தொகு]

  1. "Leiothrichidae". aviansystematics.org. The Trust for Avian Systematics. பார்க்கப்பட்ட நாள் 2023-07-15.
  2. 2.0 2.1 Cibois, A.; Gelang, M.; Alström, P.; Pasquet, E.; Fjeldså, J.; Ericson, P.G.P.; Olsson, U. (2018). "Comprehensive phylogeny of the laughingthrushes and allies (Aves, Leiothrichidae) and a proposal for a revised taxonomy". Zoologica Scripta 47 (4): 428–440. doi:10.1111/zsc.12296. 
  3. 3.0 3.1 Gill, Frank; Donsker, David, eds. (2019). "Laughingthrushes and allies". World Bird List Version 9.1. International Ornithologists' Union. பார்க்கப்பட்ட நாள் 16 January 2019.
  4. René Lesson (1831) (in French). Traité d'Ornithologie, ou Tableau Méthodique. Paris: F.G. Levrault. பக். 402. https://biodiversitylibrary.org/page/35997386. 
  5. Jobling, James A. (2010). The Helm Dictionary of Scientific Bird Names. London: Christopher Helm. பக். 55. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4081-2501-4. 
  6. George Robert Gray (1855). Catalogue of the Genera and Subgenera of Birds Contained in the British Museum. London: British Museum. பக். 43, No. 723. https://biodiversitylibrary.org/page/17136683. 
  7. Ernst Mayr; Paynter, Raymond A. Jr, தொகுப்பாசிரியர்கள் (1964). Check-List of Birds of the World. 10. Cambridge, Massachusetts: Museum of Comparative Zoology. பக். 331. https://biodiversitylibrary.org/page/14486520. 
  8. Collar, N. J. & Robson, C. 2007. Family Timaliidae (Babblers) pp. 70 – 291 in; del Hoyo, J., Elliott, A. & Christie, D.A. eds. Handbook of the Birds of the World, Vol. 12. Picathartes to Tits and Chickadees. Lynx Edicions, Barcelona.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்கியா&oldid=3813533" இலிருந்து மீள்விக்கப்பட்டது