ஆரஞ்சு அலகு சிலம்பன்
ஆரஞ்சு அலகு சிலம்பன் | |
---|---|
at Kelani Forest Reserve, Sri Lanka | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
தொகுதி: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | A. rufescens
|
இருசொற் பெயரீடு | |
Argya rufescens (பிளைத், 1847) | |
வேறு பெயர்கள் | |
Turdoides rufescens |
ஆரஞ்சு அலகு சிலம்பன் (ஆர்கியா ரூபெசுசென்சு) என்பது இலங்கை பழுப்பு சிலம்பன் என்றும் அறியப்படுகிறது. இது சிரிப்பான் பறவைக் குடும்பத்தில் உள்ள ஆர்கியா பேரினத்தின் கீழ் உள்ள ஒரு சிற்றினமாகும்.
ஆரஞ்சு அலகு சிலம்பன் என்பது இலங்கையில் வசிக்கும் பறவை சிற்றினம் ஆகும். இது கடந்த காலத்தில், காட்டுச் சிலம்பன் சிற்றினமாகக் கருதப்பட்டது.
வாழ்விடம்
[தொகு]ஆரஞ்சு அலகு சிலம்பன் வாழ்விடம் மழைக்காடு ஆகும். மேலும் இது காட்டில் உட்பகுதியில் வெகு அரிதாகவே காணப்படுகிறது. இந்த சிற்றினம், பெரும்பாலான சிலம்பன்களைப் போலவே, புலம்பெயர்ந்து செல்லக்கூடியது அல்ல. மேலும் குறுகிய வட்டமான இறக்கைகள் மற்றும் பலவீனமான பறக்கும் தன்மையினைக் கொண்டுள்ளது.
இது அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருந்தாலும், ஈர மண்டலத்தின் அனைத்து காடுகளிலும் காணப்படுகிறது. கித்துள்கலை மற்றும் சிங்கராஜக் காடு போன்ற பிரதான இடங்களில் இது மிகவும் பொதுவானது. இது மரத்தில் தனது கூட்டை கட்டுகிறது. அடர்த்தியான பசுமைச் சூழலில் இக்கூடுகள் மறைந்து காணப்படும். சாதாரணமாக ஒரு வேளையில் இரண்டு அல்லது மூன்று பசுமை கலந்த நீல முட்டைகளை இடும்.
விளக்கம்
[தொகு]இந்தப் பறவைகளின் கீழ்ப்பகுதி ஆரஞ்சு பழுப்பு நிறத்திலும் மேற்பகுதி சற்று இருண்ட வண்ணத்தில் காணப்படும். தலைப்பகுதி மற்றும் கழுத்து சாம்பல் நிறத்திலும், அலகு ஆரஞ்சு நிறத்திலும் இருக்கும்.
ஆரஞ்சு அலகு சிலம்பன் ஏழு முதல் பத்து அல்லது அதற்கு மேற்பட்ட எண்ணிக்கையில் மந்தைகளில் வாழ்கிறது. இது ஒரு சத்தமில்லாத பறவை ஆகும். ஒரு மந்தையின் இருப்பு பொதுவாக அதன் உறுப்பினர்களால் ஏற்படும் தொடர்ச்சியான அரட்டை, சத்தம் மற்றும் கிண்டல் மூலம் சிறிது தூரத்தில் அறியப்படலாம். ஆசிய ஈரமான காடுகளின் வளமான பகுதிகளில் பிற சிற்றினங்களுடன் இரை தேடும் மந்தைகளாகக் காணப்படும். இது முக்கியமாகப் பூச்சிகளை உண்ணுகிறது. ஆனால் காட்டு பெரிகளையும் சாப்பிடுகிறது.
வகைப்பாட்டியல்
[தொகு]ஆரஞ்சு அலகு சிலம்பன் முன்பு துர்டோய்ட்சு பேரினத்தில் வைக்கப்பட்டது. ஆனால் 2018-ல் ஒரு விரிவான மூலக்கூறு தொகுதி வரலாற்று ஆய்வினைத் தொடர்ந்து இது ஆர்கியா பேரினத்திற்கு மாற்றப்பட்டது.[2][3]
கலாச்சாரத்தில்
[தொகு]இலங்கையில், இந்த பறவை சிங்கள மொழியில் ரது டெமலிச்சா ('சிவப்பு சிலம்பன்' என மொழிபெயர்க்கப்பட்டுள்ளது) என்று அழைக்கப்படுகிறது.[4] இந்த பறவையின் படம் 10 ரூபாய் இலங்கை தபால் தலையில் அச்சிடப்பட்டது.[5] மேலும் இந்த பறவையின் படம் 100 இலங்கை ரூபாயில் (2010 தொடர்) வெளியிடப்பட்டது.[6]
மேற்கோள்கள்
[தொகு]- கிரிம்மெட், இன்ஸ்கிப் மற்றும் இன்ஸ்கிப் மூலம் இந்தியாவின் பறவைகள் ,பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-691-04910-6
- காஸ்மியர்சாக் மற்றும் வான் பெர்லோவின் இந்திய துணைக்கண்டத்தின் பறவைகளுக்கான கள வழிகாட்டி ,பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-873403-79-2
- ↑ BirdLife International (2022). "Turdoides rufescens". IUCN Red List of Threatened Species 2022. https://www.iucnredlist.org/species/22716406/209749372. பார்த்த நாள்: 22 July 2022.
- ↑ Cibois, A.; Gelang, M.; Alström, P.; Pasquet, E.; Fjeldså, J.; Ericson, P.G.P.; Olsson, U. (2018). "Comprehensive phylogeny of the laughingthrushes and allies (Aves, Leiothrichidae) and a proposal for a revised taxonomy". Zoologica Scripta 47 (4): 428–440. doi:10.1111/zsc.12296.
- ↑ Gill, Frank; Donsker, David, eds. (2019). "Laughingthrushes and allies". World Bird List Version 9.1. International Ornithologists' Union. பார்க்கப்பட்ட நாள் 20 January 2019.
- ↑ Anonymous (1998). "Vernacular Names of the Birds of the Indian Subcontinent" (PDF). Buceros 3 (1): 53–109. https://archive.org/details/IndianBirdNames.
- ↑ "Birds on stamps: Sri Lanka".
- ↑ "Central Bank of Sri Lanka". Archived from the original on 2017-08-03. பார்க்கப்பட்ட நாள் 2017-07-23.