ஆந்தைக் கிளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆந்தைக் கிளி
ஒரு ஆண்பறவை
உயிரியல் வகைப்பாடு e
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வரிசை: சிட்டாசிபார்மிசு
குடும்பம்: Strigopidae
பேரினம்: ஆந்தைக் கிளி
G.R. Gray, 1845
இனம்: S. habroptilus
இருசொற் பெயரீடு
Strigops habroptilus
G.R. Gray, 1845

ஆந்தைக் கிளி அல்லது காக்காப்போ ( kakapo (மாவோரி மொழி: kākāpō அல்லது இரவுக் கிளி ), Strigops habroptilus (Gray, 1845), என்பது, ஒரு வகைக் கிளி ஆகும். இது ஒரு பறக்காத பறவையாகத் தரையில் வாழக்கூடிய ஒரு இரவாடி இவை நியூசிலாந்தில் காணப்படக்கூடிய அகணிய உயிரினமாகும்.[2]

இவை மஞ்சள், பச்சை கலந்த நிறத்துடன், பூனை மீசை போன்று வாயைச் சுற்றி முளைத்துள்ள மயிர் போன்ற இறகுகள், பெரிய சாம்பல் நிற அலகு, குறுகிய கால்கள், பெரிய கால் அடிகளை உடையவை. இவற்றின் இறக்கைகள் மற்றும் வால் ஒப்பீட்டளவில் குறுகிய நீளமுடையவை. இது உலகின் ஒரே பறக்கமுடியாத கிளியாக இருக்கிறது, இவை உடல் பருமன் கொண்டவை; இரவு நேரங்களில் மட்டும் திரியக்கூடிய தாவர உண்ணிகளாகும். மேலும் இவ்வினப் பறவைகள் உடல் தோற்றத்தில் பால் ஈருருமை தோற்றம் உடையவை, இவை உலகில் நீண்டநாள் வாழும் பறவைகளில் ஒன்றாகும்.[3] சில கிளிகள் 120 ஆண்டுகள்வரைகூட உயிர் வாழும். [4] நியூசிலாந்தின் பல பறவை இனங்களைப் போலவே, ஆந்தைக் கிளியும் மாவோரி மக்களின் பழங்குடி வாழ்வில் வரலாற்று சிறப்புமிக்கதாக, பாரம்பரியப் புனைவுகள் மற்றும் நாட்டுப்பறவியல் முக்கியத்தவம் மிக்கதாக இருந்தது. இவை இந்தப் பழங்குடி இனத்தவரால் வேட்டையாடப்பட்டு பல வகையில் பயன்படுத்தப்பட்டன. இவற்றின் இறைச்சி உணவுத் தேவைக்கும், இவற்றின் சிறகுகள் ஆடைகளை மதிப்பு மிக்கதாக மாற்றுவதற்கும் இம்மக்களுக்குப் பயனுள்ள பொருள்களாக இருந்தன.


மேற்கோள்கள்[தொகு]

  1. "Strigops habroptila". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2013. Retrieved 26 November 2013. {{cite web}}: Invalid |ref=harv (help)
  2. Best, H. A. (1984). "The foods of kakapo on Stewart Island as determined from their feeding sign" (PDF). New Zealand Journal of Ecology 7: 71–83. http://newzealandecology.org/nzje/1599.pdf. பார்த்த நாள்: 15 January 2016. 
  3. Powlesland, Ralph G.; Don Merton; Cockrem, John F. (2006). "A parrot apart: the natural history of the kakapo (Strigops habroptilus), and the context of its conservation management". Notornis 53 (1): 3–26. http://notornis.osnz.org.nz/system/files/Notornis_53_1_3.pdf. பார்த்த நாள்: 2017-03-17. 
  4. "இந்த உயிரினங்களைத் தெரியுமா?". கட்டுரை. தி இந்து. 15 மார்ச் 2017. Retrieved 17 மார்ச் 2017. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆந்தைக்_கிளி&oldid=3576529" இலிருந்து மீள்விக்கப்பட்டது