ஆசிய இலை ஆமை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆசிய இலை ஆமை
CITES Appendix II (CITES)[2]
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
ஜியோஎமைடிடே
பேரினம்:
சைக்கிள்மிசு
இனம்:
சை. டென்டாட்டா
இருசொற் பெயரீடு
சைக்கிள்மிசு டென்டாட்டா
கிரே, 1831
சைக்கிள்மிசு டென்டாட்டா பரம்பல்


ஆசிய இலை ஆமை (Asian leaf turtle)(Cyclemys dentata) என்பது தென்கிழக்கு ஆசியாவில் காணப்படும் ஒரு வகை ஆமை ஆகும். இது செல்லப்பிராணி வர்த்தகத்தில் மிகவும் பொதுவானவை. இவற்றின் தலையோடு குயோரா அம்போயினென்சிசு கலப்பின ஆமையினை ஒத்திருக்கும்.

உணவு[தொகு]

ஆசிய இலை ஆமை அனைத்துண்ணி வகையினது. இது தாவரங்கள் மற்றும் பழங்களுடன், மெல்லுடலிகள், ஓட்டுடலிகள் மற்றும் மீன்களை உணவாக உண்ணுகிறது. இது தோட்டி என்றும் அறியப்படுகிறது.

நடத்தை[தொகு]

ஆசிய இலை ஆமையினை காண்பது மிகவும் அசாதாரணமானது.[3] சுதந்திரமாக நீந்துவதை விட நீரின் அடிப்பகுதியில் இருக்க அதிகம் விரும்புகிறது. தாசின் கூற்றுப்படி, முதிர்வடைந்த ஆமை தனது இரவுப் பொழுதினை நிலத்தில் கழிக்கிறது. பகலில் தண்ணீரில் இருக்கும்.[4] இது அச்சுறுத்தலை உணரும்போது இதன் செரிமான மண்டலத்தில் உள்ள உள்ளடக்கங்களை வெளியே உமிழ்ந்து விடும்.[5]

அளவு[தொகு]

ஆசிய இலை ஆமைகள் 6 முதல் 9.5 அங்குலம் நீளம் வரை வளரும். இதனுடைய அலகம் 4.5 முதல் 6.5 அங்குலம் வரை இருக்கும்.

விநியோகம்[தொகு]

ஆசிய இலை ஆமை வட இந்தியா, வடகிழக்கு இந்தியா (மணிப்பூர்), வங்காளதேசம், மியான்மர் (பர்மா), தாய்லாந்து, கம்போடியா, வியட்நாம், மேற்கு மலேசியா, இந்தோனேசியா (சுமாத்திரா, சாவகம் தீவு, போர்னியோ, பாலி), பிலிப்பீன்சு (பலவான்: கலாமியன் தீவுகள்) மற்றும் சீனாவில் காணப்படுகிறது.[6]

இந்த சிற்றினம் 1,200 மீ உயரம் வரை உள்ளப் பகுதிகளில் காணப்படுகிறது; ஆனால் ஆழம் குறித்த வரம்பு தெரியவில்லை.[7]

மேற்கோள்கள்[தொகு]

  1. As-singkily, M.; Guntoro, J.; Kusrini, M.D.; Schoppe, S. (2021). "Cyclemys dentata". IUCN Red List of Threatened Species 2021: e.T195849722A2929066. doi:10.2305/IUCN.UK.2021-1.RLTS.T195849722A2929066.en. https://www.iucnredlist.org/species/195849722/2929066. 
  2. "Appendices | CITES". cites.org. பார்க்கப்பட்ட நாள் 2022-01-14.
  3. "Asian Leaf Terrapin – Cyclemys dentata". பார்க்கப்பட்ட நாள் 2022-01-14.
  4. "Cyclemys Care – The Leaf Turtles – Chris Tabaka and Darrell Senneke". பார்க்கப்பட்ட நாள் 2022-01-14.
  5. "Philippine Authorities Arrest 3 For Possessing Threatened Turtles". பார்க்கப்பட்ட நாள் 2022-01-14.
  6. "Cyclemys dentata". பார்க்கப்பட்ட நாள் 2022-01-14.
  7. "Cyclemys dentata" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-01-14.
  • Farkas B.; Gyurján I. (1998). "Geographic Distribution. Cyclemys dentata". Herpetological Review 29 (1): 50. 
  • Fritz U.; Gaulke M.; Lehr E. (1997). "Revision der südostasiatischen Dornschildkröten-Gattung Cyclemys Bell 1834, mit Beschreibung einer neuen Art". Salamandra 33 (3): 183–212. 
  • Gaulke Maren (1995). "On the distribution of Emydid turtles and the Anuran genus Microhyla in the Philippines Asiatic". Herpetological Research 6: 49–52. doi:10.5962/bhl.part.7986. 
  • Gaulke Maren; Fritz Uwe (1998). "Distribution patterns of batagurid turtles in the Philippines (Testudines: BataguridaCuora, Cyclemys, Heosemys)". Herpetozoa 11 (1/2): 3–12. 
  • Gray, J.E. 1857 Notice of some Indian tortoises (including the description of a new species presented to the British Museum by Professor Oldham). Ann. Mag. Nat. Hist. (2) 19: 342-344
  • Gray, J.E. 1864 Observations on the box tortoises, with the description of three new Asiatic species. Ann. Mag. Nat. Hist. (3) 13: 105-111
  • Gray, J.E. 1873 On the original form, development, and cohesion of the bones of the sternum of chelonians; with notes on the skeleton of Sphargis. Ann. Mag. nat. Hist. (4) 11: 161-172

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆசிய_இலை_ஆமை&oldid=3821316" இலிருந்து மீள்விக்கப்பட்டது