ஆசிய இயற்பியல் ஒலிம்பியாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆசிய இயற்பியல் ஒலிம்பியாடு (Asian Physics Olympiad) என்பது ஆசியா மற்றும் ஓசியானியா பகுதிகளைச் சேர்ந்த உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான வருடாந்திர இயற்பியல் போட்டியாகும். பன்னாட்டு அறிவியல் ஒலிம்பியாடுகளில் இதுவும் ஒன்றாகும். முதல் ஆசிய இயற்பியல் ஒலிம்பியாடு 2000 ஆம் ஆண்டில் இந்தோனேசியாவால் நடத்தப்பட்டது.

பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் துறையில் ஆர்வத்தை அதிகரிப்பதற்காக உலகம் முழுவதும் ஒவ்வோர் ஆண்டும் பன்னாட்டு அறிவியல் ஒலிம்பியாடு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆசிய இயற்பியல் ஒலிம்பியாடு பன்னாட்டு இயற்பியல் ஒலிம்பியாடில் இருந்து தோற்றம் பெற்றது. இதே போன்ற விதிமுறைகளின்படியும் நடத்தப்படுகிறது. ஒரு ஐந்து மணி நேர தத்துவார்த்த தேர்வையும் ஒன்று அல்லது இரண்டு ஆய்வக தேர்வுகளையும் நடைமுறையாகக் கொண்டுள்ளது. வழக்கமாக பன்னாட்டு இயற்பியல் ஒலிம்பியாடு நடப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு ஆசிய இயற்பியல் ஒலிம்பியாடு நடைபெறும். பன்னாட்டு இயற்பியல் ஒலிம்பியாடு போட்டிகளில் கலந்துகொள்ளும் அணிகளுக்கான கூடுதல் பயிற்சியாகவும் கருதப்படுகிறது.[1]

ஒவ்வொரு தேசிய பிரதிநிதிகளும் எட்டு போட்டியாளர்களையும் இரண்டு தலைவர்களையும் கொண்டிருப்பர். பன்னாட்டு ஒலிம்பியாடில் ஐந்து பேர் இருப்பர். பார்வையாளர்களும் ஒரு தேசிய அணியுடன் வரலாம். தேர்வுப் பணிகளைத் தேர்வு செய்தல், தயாரித்தல் மற்றும் மொழிபெயர்த்தல், தேர்வுத் தாள்களின் மொழிபெயர்ப்பு மற்றும் குறியிடுதல் ஆகியவற்றில் தலைவர்கள் ஈடுபடுகின்றனர். மாணவர்கள் தனித்தனியாகவே போட்டியிடுகின்றனர். தீவிரமான கோட்பாட்டு மற்றும் ஆய்வக தேர்வுகளில் இவர்கள் பங்கேற்க வேண்டும். அவர்களின் முயற்சிகளுக்காக மாணவர்களுக்கு தங்கம், வெள்ளி அல்லது வெண்கலப் பதக்கம் அல்லது ஒரு கெளரவ விருது வழங்கப்படுகிறது.

வரலாறு[தொகு]

1999 ஆம் ஆண்டில் இந்தோனேசியாவின் குழுத் தலைவர், பேராசிரியர். இயோகானசு சூர்யா, ஆசிய இயற்பியல் ஒலிம்பியாடின் தலைவர் பேராசிரியர். வால்டெமர் கோர்சுகோவ்சுகி உடன் இணைந்து 2000 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 மற்றும் மே 2, நாட்களுக்கு இடையில் இந்தோனேசியாவில் நடைபெற்ற முதல் ஆசிய இயற்பியல் ஒலிம்பியாடை உருவாக்கி ஒழுங்கமைத்தார். இந்த நேரத்தில், பேராசிரியர். கோர்சுகோவ்சுகியும் இந்தோனேசியாவில் பன்னாட்டு இயற்பியல் ஒலிம்பியாடு குழுவிற்கு உதவுவதற்காக பணிபுரிந்தார். இந்த நிகழ்வில் 12 ஆசிய நாடுகளில் இருந்து பங்கேற்பாளர்கள் பங்கேற்றனர். தற்போது 27 நாடுகள் வரை கலந்து கொள்கின்றன.[2]

ஆத்திரேலியா, அசர்பைசான், வங்காளதேசம், கம்போடியா, சீனா, ஆங்காங், இந்தியா, இந்தோனேசியா, இசுரேல், கசகசுதான், கிர்கிசுத்தான், மக்காவு, மலேசியா, மங்கோலியா, நேபாளம், சவூதி அரேபியா, சிங்கப்பூர், இலங்கை, தாய்லாந்து, ஆகிய நாடுகள் தீவிரமாக பங்கேற்கின்றன. வியட்நாம் . உருசியா உருமேனியா கடந்த ஆண்டுகளில் விருந்தினர் அணிகளாக [2] பங்கேற்றுள்ளன.

ஆஇஒ மற்றும் பஇஒ இடையிலான வேறுபாடுகள்[தொகு]

ஒவ்வொரு பிரதிநிதி குழுவிலும் ஆசிய இயற்பியல் ஒலிம்பியாடு 8 மாணவர்களைக் கொண்டுள்ளது. அதே நேரத்தில் பன்னாட்டு இயற்பியல் ஒலிம்பியாடு 5 மாணவர்களைக் கொண்டுள்ளது.

விருது அமைப்பு[தொகு]

2001 ஆம் ஆண்டில் பன்னாட்டு இயற்பியல் ஒலிம்பியாடு வாரியம் பரிசுகளை வழங்கும் புதிய முறையை ஏற்றுக்கொண்டது.[3] சிரில் ஐசென்பெர்க் மற்றும் டாக்டர் குண்டர் லிண்ட் ஆகியோரால் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டது. புதிய அமைப்பின்படி சிறந்த போட்டியாளரின் மதிப்பெண் சதவீத எல்லைகளுக்குப் பதிலாக, ஒவ்வொரு வகை விருதுக்கும் போட்டியாளர்களின் எண்ணிக்கை அடிப்படையாக எடுத்துக் கொள்ளப்பட்டது.

போட்டியாளர்களின் சராசரி நிலை வெவ்வேறாக இருப்பதால், ஆசிய இயற்பியல் ஒலிம்பியாடு இதை ஏற்றுக்கொள்ளவில்லை. மங்கோலியாவில் நடைபெற்ற 9 ஆவது ஆசிய இயற்பியல் ஒலிம்பியாடு வரை பழைய முறையே ஆசிய இயற்பியல் ஒலிம்பியாடுக்கு பயன்பாட்டில் இருந்தது. இந்த ஒலிம்பியாடில் இசுரேலிய பிரதிநிதிகள் குழுவில் இருந்து டாக்டர் எலி ராசு பரிந்துரைத்த புதிய விருது முறைக்கு மாறுவதற்கு தலைவர்கள் வாக்களித்தனர். புதிய அமைப்பு, சில நேரங்களில் அதிகாரப்பூர்வமற்ற முறையில் இசுரேலிய விருது அமைப்பு என குறிப்பிடப்படுகிறது, இது மதிப்பெண்ணை அடிப்படையாகக் கொண்டது. முதல் 3 பங்கேற்பாளர்களின் சராசரி மதிப்பெண் மற்றும் இடைநிலையின் இரண்டு மடங்கு இவற்றில் எது குறைவோ அப்புள்ளியை எடுத்துக் கொள்ளும் முறை பின்பற்றப்படுகிறது.[4] முதலில் தாய்லாந்தில் நடைபெற்ற 10ஆவது ஆசிய இயற்பியல் ஒலிம்பியாடு போட்டியில் பரணிடப்பட்டது 2009-09-03 at the வந்தவழி இயந்திரம் பயன்படுத்தப்பட்டது.

சுருக்கம்[தொகு]

ஆசிய இயற்பியல் ஒலிம்பியாடு தேதிகள் மற்றும் இடங்கள் [5] :

வரிசை எண்

ஆண்டு

நகரம்

நாடு

நாள்

நாடுகள்

1 2000 காரவாசி  இந்தோனேசியா ஏப்ரல் 23 - மே 2, 2000 10
2 2001 தாய்பெய்  சீன தைப்பே ஏப்ரல் 22 - மே 1, 2001 12
3 2002 சிங்கப்பூர்  சிங்கப்பூர் மே 6–14, 2002 15
4 2003 பேங்காக்  தாய்லாந்து ஏப்ரல் 20–29, 2003 10
5 2004 அனோய்  வியட்நாம் ஏப்ரல் 26 - மே 4, 2004 13
6 2005 பெக்கான்பாரு  இந்தோனேசியா ஏப்ரல் 24 - மே 2, 2005 17
7 2006 அல்மாத்தி  கசக்கஸ்தான் ஏப்ரல் 22–30, 2006 18
8 2007 சாங்காய்  சீனா ஏப்ரல் 21–29, 2007 22
9 2008 உலான் பத்தூர்  மங்கோலியா ஏப்ரல் 20–28, 2008 18
10 2009 பேங்காக்  தாய்லாந்து ஏப்ரல் 24 - மே 2, 2009 15
11 2010 தாய்பெய்  சீன தைப்பே ஏப்ரல் 23 - மே 1, 2010 16
12 2011 டெல் அவீவ்  இசுரேல் மே 1–9, 2011 16
13 2012 புது தில்லி  இந்தியா ஏப்ரல் 30 - மே 7, 2012 21
14 2013 பொகோர்  இந்தோனேசியா மே 5–13, 2013 20
15 2014 சிங்கப்பூர்  சிங்கப்பூர் மே 11–19, 2014 27
16 2015 காங்சூ  சீனா மே 3–11, 2015 25
17 2016 ஆங்காங்கு  ஆங்காங் மே 1–9, 2016 27
18 2017 இயாகுட்சுக்கு  உருசியா மே 1–9, 2017 24
19 2018 அனோய்  வியட்நாம் மே 5–15, 2018 25
20 2019 அடிலெய்டு  ஆத்திரேலியா May 5–13, 2019 23
2020 நடைபெறவில்லை கோவிட்-19 பெருந்தொற்று[6]
21 2021 தாய்பெய்  சீன தைப்பே மே 17–24, 2021 26
22 2022 தேராதூன்  இந்தியா மே 21 -31,2022 TBC

மேற்கோள்கள்[தொகு]

  1. APhO history
  2. 2.0 2.1 "Statistics of Participant Countries of APhO" (PDF). Archived from the original (PDF) on 29 July 2018. பார்க்கப்பட்ட நாள் 29 July 2018.
  3. "Minutes of the Meetings of the International Board during the XXXII International Physics Olympiad in Antalya (Turkey) June 28 – July 6, 2001". Archived from the original on மார்ச் 4, 2016. பார்க்கப்பட்ட நாள் மே 5, 2022. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. "Statutes of the Asian Physics Olympiad". Archived from the original on 26 July 2018. பார்க்கப்பட்ட நாள் 29 July 2018.
  5. "APhO - Past and Future Organizers". Archived from the original on 20 December 2016. பார்க்கப்பட்ட நாள் 14 December 2016.
  6. "APHO 2020". பார்க்கப்பட்ட நாள் 2020-03-31.[தொடர்பிழந்த இணைப்பு]

புற இணைப்புகள்[தொகு]