யொகானசு சூர்யா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
யொகானசு சூர்யா
Yohanes Surya
Yohanes Surya (2010).jpg
பிறப்பு6 நவம்பர் 1963 (1963-11-06) (அகவை 56)
ஜகார்த்தா,இந்தோனேசியா
தேசியம்இந்தோனேசியா
துறைஇயற்பியல்
அணுக்கரு இயற்பியல்
பணியிடங்கள்சூர்யா நிறுவனம், சூர்யா ஆராய்ச்சிக் கல்வி மையம்
கல்வி கற்ற இடங்கள்இந்தோனேசியப் பல்கலைக் கழகம்
வில்லியம் மேரிக் கல்லூரி,அமெரிக்கா
துணைவர்கிறிசுடினா சூர்யா

யொகானசு சூர்யா (Yohanes Surya) இந்தோனேசியாவைச் சேர்ந்த ஒர் இயற்பியல் வல்லுநர் ஆவார். 1963 ஆம் ஆண்டு நவம்பர் ஆறாம் தேதி யகார்த்தாவில் பிறந்தார். 1993 ஆம் ஆண்டு முதல்[1] ஒலிம்பியாடு போட்டிகளில் பங்கு கொள்ளும் இந்தோனேசிய இயற்பியல் அணிக்கு பயிற்சியாளராக இருந்து வருகிறார். இவருடைய வழிகாட்டுதலின் கீழ் பல்வேறு நாடுகளில் நடைபெற்ற அனைத்துலக அறிவியல் மற்றும் இயற்பியல் ஒலிம்பியாடு போட்டிகளில் இந்தோனேசிய அணி 54 தங்கப் பதக்கங்கள், 33 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 42 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது. `வேடிக்கை மற்றும் ஏற்புடைய இயற்பியல்’ என்ற இவருடைய பயிற்சித் திட்டத்தினால், நாடறிந்த இயற்பியல் வல்லுநராக மிளிர்ந்தார். 68 நூல்களை[2] எழுதியுள்ள இவர் ஆர்ச்சி$மெய்டி என்ற நகைச்சுவை நூலையும் எழுதியுள்ளார்.

வாழ்க்கை வரலாறு[தொகு]

யொகானசு சூர்யாவின் தந்தையார் ஒரு ஓய்வுபெற்ற இராணுவ வீரர். தாயார் ஒரு பாரம்பரிய இனிப்புணவு விற்பனையாளர். இவர்களுக்குப் பிறந்த ஒன்பது குழந்தைகளில் யொகானசு ஏழாவது குழந்தையாகப் பிறந்தார். ஐந்து சகோதரிகளும் மூன்று சகோதரர்களும் யோகனேசுக்கு இருந்தனர். கிழக்கு யகார்த்தாவில்[3] உள்ள எசு.டி புலோகாதுங் பெடாங் II தொடக்கப் பள்ளியில் இவர் கல்வி கற்றார்[3]. தொடர்ந்து இவர் யாகார்த்தாவில் உள்ள எசு.எம்.பி.என் 90 மற்றும் எசு,எம்.ஏ.என் 12 இல் தன்னுடைய பள்ளிப்படிப்பை தொடர்ந்தார். யோகனேசின் பெற்றொரால் இவரை பல்கலைக்கழகக் கல்வி பெறும் வாய்ப்பை அளிக்க இயலவில்லை. இருப்பினும், அவருடைய மூத்த சகோதரர்களின் உதவியால் இந்தோனேசியப் பல்கலைக்கழகத்தில் இவர் கணக்கு மற்றும் இயற்கை அறிவியல் பள்ளியில் இயற்பியல் துறையில் சேர்ந்தார்[2]. 1986 இல் யோகனேசு தன்னுடைய பட்டப்படிப்பை முடித்தார். அமெரிக்காவில் உள்ள வர்கீனியாவில் வில்லியம் மற்றும் மேரி கல்லூரியில் சேர்ந்து முது அறிவியல் மற்றும் முனைவர் பட்டங்களைப் பெற்றார்[2].

வாழ்க்கைத் தொழில்[தொகு]

முனைவர் பட்டம் பெற்ற யோகனேசு சூர்யா வர்சினியாவிலேயே ஒரு இயற்பியல் ஆலோசகராகப் பணிபுரிந்தார். அமெரிக்கக் குடியுரிமை பெற்றவராக விளங்கினாலும் தனதுநாட்டில் இயற்பியலை வளர்க்கும் எண்ணம் மிகுந்தவராய் இந்தோனேசியாவிற்கு திரும்ப முடிவு செய்தார். இவரது பணியில் ஒரு பகுதியாக அனைத்துலக ஒலிம்பியாடு போட்டிகளில் பங்குகொள்ளும் இந்தோனேசிய இயற்பியல் அணிக்கு பயிற்சியளிக்கும் தலைவராக 1993 இல் ஒரு பயிற்சி மையத்தை தொடங்கினார். போட்டியில் கலந்து கொள்ளும் ஆர்வலர்களுக்கு இங்கிருந்து பயிற்சியளித்தார். இந்தோனேசியப் பல்கலைக்கழகத்தில் பட்டமேற்படிப்புப் பிரிவில் அணுக்கரு இயற்பியல் துறையில் பேராசிரியர் மற்றும் ஆய்வாளராகவும் கூடுதலாகப் பணிபுரிந்தார்.

இந்தோனேசியாவில் அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறையில் 30000 முனைவர்களை உருவாக்க வேண்டுமென்ற தொலைநோக்குப் பார்வையுடன் யோகனேசு 2006 ஆல் ஆண்டில் சூர்யா நிறுவனத்தைத் தொடங்கினார். இந்நிறுவனத்தின் மூலமாக அறிவியைல் மற்றும் கணிதக் கல்வியில் சீர்திருத்தங்களை உருவாக்க எண்ணம் கொண்டு செயலாற்றினார். சமகாலத்திலேயே பேராசியர் சூர்யாவும் அவரது நிறுவனப் பயிற்சியாளர்களும் இந்தோனேசிய சமூகத்தில் அறிவியலை பிரபலப்படுத்தும் செயல்களில் ஈடுபட்டனர். பயிற்சி மையத்தின் மூலம், கணிதம் மற்றும் அறிவியல் ஒலிம்பியாடு போட்டிகளில் கலந்து கொள்பவர்களுக்குப் பயிற்சியளித்தனர். சூரியா கல்வியியல் கல்லூரியும் கிராமப்புற மாணவர்களும், வசதியற்ற எளிய குடும்பத்து மாணவர்களும் இத்தகைய போட்டிகளில் வெற்றிபெற பயிற்சியளித்தது.

மேலும், யோகனேசு சூர்யா 2013 ஆண்டில் சூர்யா பல்கலைக்கழகம் ஒன்றையும் தொடங்கினார். இந்தோனேசியாவில் ஆய்வு அடிப்படையில் அமைக்கப்பட்ட முதலாவது தனியார் பல்கலைக்கழகம் என்ற பெருமை இதற்கு உண்டு. 2030 ஆம் ஆண்டில் ஒரு வளமான இந்தோனேசியாவை உருவாக்குவது என்ற தொலைநோக்குப் பார்வையுடன் இப்பல்கலைக்கழகம் இயங்கிவருகிறது. நூற்றுக்கணக்கான முனைவர்களும் ஆய்வாளர்களும் உள்ள நாடாக இந்தோனேசியா மறுமலர்ச்சி அடைய வேண்டும் என்ற சிந்தனை இவருடையது. இதனால் சூரியா பல்கலைக்கழகத்தில் நூற்றுக்கணக்கான பல்துறை ஆய்வு மையங்கள் மாணவர்களுக்காக திறக்கப்பட்டுள்ளன.

சூர்யா ஆராய்ச்சிக் கல்வி மையம்

மேற்கோள்கள்[தொகு]

  1. Dawis, Aimee (August 7, 2009). "Yohanes Surya: Boosting brilliant minds". Jakarta Post. http://www.thejakartapost.com/news/2009/08/07/yohanes-surya-boosting-brilliant-minds.html. பார்த்த நாள்: 14 October 2011. 
  2. 2.0 2.1 2.2 Gunawan, T Sima. "Yohanes Surya: A physicist with many dreams". Jakarta Post. பார்த்த நாள் 14 October 2011.
  3. 3.0 3.1 Yohanes Surya: Birokrasi Kadang Tidak Mengerti Anak Muda (in இந்தோனேஷியன்), Kompas, May 27, 2010, p. 56

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=யொகானசு_சூர்யா&oldid=2720812" இருந்து மீள்விக்கப்பட்டது