ஆக்சல் டபிள்யூ. பெர்சன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆக்சல் வால்டெமர் பெர்சன். 1938

ஆக்சல் வால்டெமர் பெர்சன் (Axel Waldemar Persson) சுவீடன் நாட்டின் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஆவார். இவர் 1888 ஆம் ஆண்டு சூன் மாதம் 01 ஆம் தேதியன்று பிறந்தார். 1951 ஆம் ஆண்டு மே மாதம் 7 ஆம் தேதியன்று இறந்தார். உப்சாலா பல்கலைக்கழகத்தில் கிளாசிக்கல் தொல்லியல் மற்றும் பண்டைய வரலாற்றின் பேராசிரியராக பணியாற்றினார். கிரேக்க நாடு மற்றும் அனத்தோலியாவில் உள்ள தளங்களின் அகழ்வாராய்ச்சிகளை நடத்தினார். [1]

சுயசரிதை[தொகு]

பெர்சன் சுவீடன் நாட்டில் உள்ள சுகேன் கவுண்டி என்னும் இடத்தில் உள்ள கிவிடிங்கில் பிறந்தார். இவர் லுண்ட் பல்கலைக்கழகத்திலும், கோட்டிங்கன் மற்றும் பெர்லின் பல்கலைக்கழகங்களிலும் படித்தார். 1920-21 ஆம் ஆண்டு காலகட்டத்தில் பிரான்சு, இத்தாலி, கிரீசு மற்றும் அனத்தோலியா போன்ற இடத்தில் ஆய்வுப் பயணம் மேற்கொண்டார். [2]

இவர் கிரேக்க நாட்டில் உள்ள ஆர்கோலிடில், அசின், டெண்ட்ரா மற்றும் மிடியா உள்ளிட்ட இடங்களையும், அனத்தோலியாவில் உள்ள மிலாசு மற்றும் லாப்ராண்டா உள்ளிட்ட பிற தளங்களையும் தோண்டி, லீனியர் பி எழுத்து முறையின் தோற்றத்தைத் தேடினார். 1926 ஆம் ஆண்டு கோடையில், இவர் ஆர்கோலிசில் உள்ள டெண்ட்ராவில் ஒரு செப்பனிடப்படாத தாலோசு கல்லறையை தோண்டினார். இவரது கண்டுபிடிப்புகள் ஏதென்சில் உள்ள தேசிய தொல்பொருள் அருங்காட்சியகத்தில் சேர்க்கப்பட்டன. 1935 ஆம் ஆண்டில், இவர் துருக்கியின் தென்கிழக்கு அனடோலியா பகுதியில் உள்ள சென்சிக் டெப் என்ற இடத்தில் ஒரு வரலாற்றுக்கு முந்தைய மலையையும் மிலாசில் உள்ள கெலனிசுடிக் அறை கல்லறைகளையும் தோண்டினார். 1937 ஆம் ஆண்டில், இவர் டென்ட்ராவுக்குத் திரும்பினார். அங்கு இவர் ஒரு அறை கல்லறையை தோண்டினார். [1]

பெர்சன் 1915 ஆம் ஆண்டு லுண்ட் பல்கலைக்கழகத்தில் இணைப் பேராசிரியராகவும், 1924 முதல் உப்சாலா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் ஆனார். இவர் 1951 ஆம் ஆண்டு ஓய்வு பெறும் வரை உப்சாலா பல்கலைக்கழகத்தில் கிளாசிக்கல் தொல்லியல் மற்றும் பண்டைய வரலாற்றின் பேராசிரியராக இருந்தார். இவர் ஒரு ஊக்கமளிக்கும் ஆசிரியராக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவர் ஆவார். இவரது பட்டதாரிகள், அகே அகெசுட்ரோம் மற்றும் ஈனார் செர்சுட்டு உட்பட, தொல்லியல் துறையில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கினர்.[3][4][2]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

இவர் 1913 ஆம் ஆண்டு விக்டோரியா மிரியாவை (1887-1958) திருமணம் செய்து கொண்டார். இவர் 1951 ஆம் ஆண்டு இறந்ததால் உப்சாலா கம்லா கிர்கோகார்டில் அடக்கம் செய்யப்பட்டார். [2]

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 "Axel W Persson". Svenskt biografiskt lexikon. பார்க்கப்பட்ட நாள் September 1, 2020.
 2. 2.0 2.1 2.2 "Axel W Persson". Gamla Kyrkogården I Uppsala. பார்க்கப்பட்ட நாள் September 1, 2020.
 3. "Åke Åkerström in memoriam". scribd.com. பார்க்கப்பட்ட நாள் September 1, 2020.
 4. "Gjerstad, Einar". Brill. பார்க்கப்பட்ட நாள் September 1, 2020.

பிற ஆதாரங்கள்[தொகு]

 • Chadwick, John (1990), The Decipherment of Linear B, Cambridge University Press, pp. 30–31.
 • Furumark, Arne (1951), "Axel W. Persson", Minos. Revista de Filología Egea: 112.
 • Gjersted, Einar (1980), Ages and Days in Cyprus, Studies in Mediterranean Archaeology, Pocket Books, pp. 9–10, archived from the original on 2011-07-07.
 • Green, Erik (1953), "Bibliography of the writings of Axel W. Persson", Opuscula Atheniensia, 1: 224–236.
 • Koşay, Hâmit Zübeir (1951), Axel Waldemar Persson 1888-1951 (in Turkish){{citation}}: CS1 maint: unrecognized language (link).
 • Medwid, Linda M. (2000), "Axel W(aldemar) Persson", The makers of classical archaeology: a reference work, Humanity Books, pp. 237–239.
 • The archaeological excavations at Milas and Gencik Tepe, 1938, Swedish Research Institute in Istanbul. Retrieved 2009-08-13.
 • Labraunda: The Excavations, Swedish Excavations at Labraunda. Retrieved 2009-08-13.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆக்சல்_டபிள்யூ._பெர்சன்&oldid=3869211" இலிருந்து மீள்விக்கப்பட்டது