அல்ஜீரிய தேசிய காற்பந்து அணி
![]() | |||
அடைபெயர் | الأفناك (பாலைவன நரிகள்) الخُضر (பசுமையர்) | ||
---|---|---|---|
கூட்டமைப்பு | அல்சீரியக் கால்பந்துக் கூட்டமைப்பு | ||
மண்டல கூட்டமைப்பு | வட ஆபிரிக்க கால்பந்துக் கூட்டமைப்புகளின் ஒன்றியம் (வடக்கு ஆபிரிக்கா) | ||
வேறு கூட்டுகள் | அராபிய கால்பந்து சங்கங்களின் ஒன்றியம் (அரபு நாடுகள்) | ||
கண்ட கூட்டமைப்பு | ஆகாகூ (ஆபிரிக்கா) | ||
தலைமைப் பயிற்சியாளர் | வாகித் அலிகோட்சிக் | ||
அணித் தலைவர் | மத்சித் பூகெர்ரா | ||
Most caps | லக்தார் பெல்லோமி (101) | ||
அதிகபட்ச கோல் அடித்தவர் | அப்டெலஃபீத் தாசுபயூட் (35) | ||
தன்னக விளையாட்டரங்கம் | இசுடேடு 5 சூய்யி 1962 | ||
பீஃபா குறியீடு | ALG | ||
பீஃபா தரவரிசை | 27 | ||
அதிகபட்ச பிஃபா தரவரிசை | 19 (நவம்பர் 2012-திசம்பர் 2012) | ||
குறைந்தபட்ச பீஃபா தரவரிசை | 103 (சூன் 2008) | ||
எலோ தரவரிசை | 59 | ||
அதிகபட்ச எலோ | 16 (நவம்பர் 1967) | ||
குறைந்தபட்ச எலோ | 105 (சூலை 2008) | ||
| |||
முதல் பன்னாட்டுப் போட்டி | |||
![]() ![]() (தூனிஸ், துனீசியா; 1 சூன் 1957)[1][2] ![]() ![]() (சோஃவியா, பல்காரியா; 6 சனவரி 1963) | |||
பெரும் வெற்றி | |||
![]() ![]() (திரிப்பொலி, லிபியா; 17 ஆகத்து 1973) | |||
பெரும் தோல்வி | |||
![]() ![]() (காட்பசு, செருமனி; 21 ஏப்ரல் 1976) | |||
உலகக் கோப்பை | |||
பங்கேற்புகள் | 4 (முதற்தடவையாக 1982 இல்) | ||
சிறந்த முடிவு | சுற்று 1, 1982, 1986, 2010 | ||
ஆபிரிக்க நாடுகளின் கோப்பை | |||
பங்கேற்புகள் | 14 (முதற்தடவையாக 1968 இல்) | ||
சிறந்த முடிவு | வாகையர், 1990 | ||
கோடைக்கால ஒலிம்பிக்சு | |||
பங்கேற்புகள் | 1 (முதற்தடவையாக 1980 இல்) | ||
சிறந்த முடிவு | கால்-இறுதி, 1980 |
அல்சீரியா தேசிய கால்பந்து அணி (Algeria national football team, அரபு மொழி: منتخب الجزائر لكرة القدم) பன்னாட்டு காற்பந்தாடப் போட்டிகளில் அல்சீரியாவின் சார்பாக விளையாடும் தேசிய அணியாகும். இதனை அல்சீரியாவில் காற்பந்தாட்டங்களை ஒழுங்குபடுத்தும் அல்சீரியக் கால்பந்துக் கூட்டமைப்பு மேலாண்மை செய்கிறது. இதன் தாயக விளையாட்டரங்கமாக அல்ஜியர்ஸ் நகரிலுள்ள இசுடேடு 5 சூய்யி 1962 விளங்குகிறது. இந்த அணியின் தலைமை பயிற்றுனராக வாகித் அலிகோட்சிக் உள்ளார். அல்சீரியா சனவரி 1, 1962 அன்று நிறுவப்பட்டு பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பில் சனவரி 1, 1964 அன்று இணைந்தது.
அல்சீரியா நான்கு உலகக்கோப்பை இறுதிப் போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளது: 1982, 1986, 2010, மற்றும் 2014. அல்சீரியா ஆபிரிக்க நாடுகளின் கோப்பையை 1990இல் வென்றுள்ளது.
அல்சீரியாவின் வழமையான எதிராளிகளாக மொராக்கோ, துனீசியா மற்றும் எகிப்து கால்பந்து அணிகள் உள்ளன.
மேற்சான்றுகள்[தொகு]
- ↑ Courtney, Barrie (23 ஏப்ரல் 2010). "Algeria - List of International Matches". RSSSF. http://www.rsssf.com/tablesa/alg-intres.html. பார்த்த நாள்: 10 நவம்பர் 2010.
- ↑ "World Football Elo Ratings: Algeria". ELO இம் மூலத்தில் இருந்து 2010-11-22 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20101122061008/http://eloratings.net/Algeria.htm. பார்த்த நாள்: 10 நவம்பர் 2010.