அலெக்சேய் நவால்னி
அலெக்சேய் நவால்னி Alexei Navalny Алексей Навальный | |||||
---|---|---|---|---|---|
![]() | |||||
நவால்னி | |||||
எதிர்கால உருசியா கட்சித் தலைவர்[a] | |||||
பதவியில் உள்ளார் | |||||
பதவியேற்பு 17 நவம்பர் 2013 | |||||
ஊழலுக்கு எதிரான அமைப்பின் நிறுவன உறுப்பினர் | |||||
பதவியில் 9 செப்டம்பர் 2011 – சூலை 2020 | |||||
தனிநபர் தகவல் | |||||
பிறப்பு | அலெக்சேய் அனத்தோலியெவிச் நவால்னி 4 சூன் 1976 பூத்தின், அஜிந்த்சோவ்சுக்கி மாவட்டம், மாசுக்கோ மாகாணம், உருசியா, சோவியத் ஒன்றியம்[1] | ||||
தேசியம் | உருசியர் | ||||
அரசியல் கட்சி | எதிர்கால உருசியா (2018 முதல்) | ||||
பிற அரசியல் சார்புகள் |
| ||||
வாழ்க்கை துணைவர்(கள்) | யூலியா நவால்னயா (தி. 2000) | ||||
பிள்ளைகள் | 2[2] | ||||
இருப்பிடம் | மாஸ்கோ | ||||
கல்வி |
| ||||
பணி | வழக்கறிஞர், அரசியல்வாதி, செயற்பாட்டாளர், வலைப்பதிவர் | ||||
விருதுகள் | யேல் உலக ஆய்வாளர் (2010) | ||||
கையொப்பம் | ![]() | ||||
இணையம் | Navalny.com | ||||
யூடியூப் தகவல் | |||||
ஒளிவழித்தடம் | |||||
சந்தாதாரர்கள் | 6.52 மில்லியன் (7 மார்ச் 2021) | ||||
மொத்தப் பார்வைகள் | 1.1 பில்லியன் (7 மார்ச் 2021) | ||||
|
அலெக்சேய் அனத்தோலியெவிச் நவால்னி அல்லது அலெக்சி நவால்னி (Alexei Anatolievich Navalny; உருசியம்: Алексе́й Анато́льевич Нава́льный, பஒஅ: [ɐlʲɪkˈsʲej ɐnɐˈtolʲjɪvʲɪtɕ nɐˈvalʲnɨj]; பிறப்பு:4 சூன் 1976) உருசியாவின் எதிர்க்கட்சித் தலைவரும், வழக்கறிஞரும், ஊழலுக்கு எதிரான செயற்பாட்டாளரும், வலைத்தளப் பதிவரும் ஆவார்.[3] இவர் உருசியாவின் எதிர்காலம் என்ற அரசியல் கட்சியின் தலைவராக 2018-ஆம் ஆண்டு முதல் செயல்படுகிறார். நவால்னியின் யூடியூப் சானலுக்கு 6 மில்லியனுக்கு மேற்பட்ட பயனர்களும், டுவிட்டர் கணக்கை 2 மில்லியன் பயனர்களும் பின்பற்றுகிறார்கள்.[4][5] மேற்படி ஊடகங்கள் வழியாக உருசியாவில் விளாதிமிர் பூட்டின் அரசு செய்து வரும் ஊழல்களை வெளிப்படுத்தி இடித்துரைக்கிறார். மேலும் ஊழல்களுக்கு எதிரான அமைப்புகளைத் திரட்டி, ஆளும் அரசுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுக்கிறார்.[6][7] சூலை 2013-இல் அலெக்செ நவால்னி மோசடி குற்றத்திற்காக இடைநீக்கம் செய்யப்பட்ட தண்டனை பெற்றார்.[8][9] 2013-இல் நவால்னி மாஸ்கோ நகர மேயர் தேர்தலில் போட்டியிட்டு 27% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பெற்றார்.[10]
நவால்னி உருசிய, உக்ரைனிய மரபுகளைச் சேர்ந்தவர்.[11] 1998 இல் உருசிய மக்கள் நட்புறவுப் பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்துப் பட்டம் பெற்றார்.[12] 2010-இல் புலமைப்பரிசில் பெற்று யேல் பல்கலைக்கழகம் சென்றார்.[13][14]
2020 ஆகத்து மாதத்தில், நஞ்சூட்டப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.[15] இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஐரோப்பிய ஒன்றியம், பிரித்தானியா, ஐக்கிய அமெரிக்கா ஆகியன உருசிய மூத்த அதிகாரிகளின் மீது பயணத் தடைகளை அறிவித்தன.[16][17][18][19] இதற்கிடையில், பூட்டினின் ஊழல்களை விளக்கி நவால்னி பூட்டினின் அரண்மனை என்ற ஆவணம் ஒன்றை வெளியிட்டதை அடுத்து, நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.[20] 2021 பெப்ரவரியில் இவரது ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனைக்குப் பதிலாக இரண்டரை ஆண்டுகள் தொழிலாளர் சீர்திருத்தக் குடியேற்றத்தில் வைக்கப்பட்டார்.[21][22][23] பன்னாட்டு மன்னிப்பு அவை இவரை மனச்சாட்சியின் கைதிகளின் பட்டியலில் வகைப்படுத்தியது.[24][25] 2021 அக்டோபரில், இவரது மனித உரிமைச் செயற்பாடுகளுக்காக சாகரவ் பரிசு வழங்கப்பட்டது.
நஞ்சூட்டப்படல் மற்றும் மீட்பு[தொகு]
20 ஆகஸ்டு 2020 அன்று தென்மத்திய உருசியாவின் தோம்ஸ்க் நகரத்திலிருந்து மாஸ்கோ நகரத்திற்கு வானூர்தியில் சென்று கொண்டிருந்த நவால்னிக்கு தீடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், வழியில் உள்ள ஓம்ஸ்க் நகரத்தில் விமானம் தரையிறக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.[26] நவால்னி மருத்துவமனையில் கத்திக்கொண்டே தாம் இறந்து கொண்டிருப்பதாக மருத்துவர்களிடம் கூறினார்.[27] காலையில் நவால்னி வானூர்தியில் ஏறுவதற்கு முன்னர் வானூர்தி நிலையத்தில் தேனீர் மட்டும் அருந்தினார் என்றும் அப்போது தேனீரில் நஞ்சு கலக்கப்பட்டிருக்கலாம் என அவருடைய உதவியாளர் கூறினார். மருத்துவர்களும் நவால்னி குருதியில் நஞ்சு இருந்த தடயத்தை இரத்தப் பரிசோதனையில் கண்டறிந்தனர். ஜெர்மனியால் அனுப்பபட்ட வானூர்தியில் ந்வால்னியை ஏற்றி பெர்லின் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். [28][29] [30][31]24 ஆகஸ்டு 2020 அன்று பெர்லின் மருத்துவர்கள் நவால்னி உடலில் நஞ்சு ஏற்றப்பட்டு இருந்ததை உறுதிப்படுத்தினர்.[32]
நாடு திரும்பல் மற்றும் சிறையில் அடைத்தல்[தொகு]
ஜெர்மனியில் மருத்துவ சிகிச்சையில் உடல் நலம் தேறிய நவால்னி, 17 சனவரி 2021 அன்று மாஸ்கோ திரும்பினார். பிப்ரவரி 2021-இல் நவால்னி மீது நிலுவையில் பழைய குற்றச்சாட்டுகளுக்காக உருசியாவின் காவல்துறையினர் நவால்னியைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.[33] [34] [35][36] உருசியாவை ஆளும் விளாதிமிர் பூட்டின் அரசின் மனிதாபிமானமற்ற செயல்களை கண்டித்து, நவால்னி 31 மார்ச் 2021 முதல் சிறையில் உண்ணாநோன்பு இருந்து வருகிறார். இதனால் நவால்னியின் சிறுநீரகம் செயலிழக்கக்கூடும் எனவும், எந்நேரமும் மாரடைப்பு ஏற்படலாம் எனவும் சமீபத்திய ரத்தப் பரிசோதனை முடிவுகள் காட்டுவதாக அவரது மருத்துவர்கள் எச்சரித்தார்கள்.
சிறையில் அடைக்கப்பட்ட நவால்னிக்கு உரிய மருத்துவ சிகிச்சை வழங்கவும், சிறையிலிருந்து விடுவிக்கவும் 20 ஏப்ரல் 2021 அன்று ருசியா முழுவதும் போராட்டம் நடத்திய நவால்னியின் ஆதரவாளர்களில் 1,700 பேர் கைது செய்யப்பட்டனர்.[37][38]
அதிபர் புதினை கடுமையாக விமர்சித்து வரும் எதிர்கட்சித் தலைவர் அலெக்சேய் நவால்னி சிறையில் உயிரிழந்தால், கடுமையான பின் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என உருசியாவை அமெரிக்கா எச்சரித்தது.[39]
ஊழல் வழக்கில் 13 ஆண்டுச் சிறை[தொகு]
அலெக்சி நவால்னி மீது ஊழல் குற்றச்சாட்டு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. அவருக்கு இரண்டரை ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனை அடுத்து அலெக்ஸி சிறையில் தண்டனை அனுபவித்து வந்தார். தற்போதைய விளாடிமிர் புடின் அரசு, அலெக்ஸி மீது வேறு பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அவருக்கு 13 ஆண்டுகள் சிறை விதித்து உத்தரவிட்டார்.[40][41]
விருதுகளும் பரிசுகளும்[தொகு]
சாகரவ் பரிசு[தொகு]
ஐரோப்பிய ஒன்றியத்தால் வழங்கப்படும் 2021-ஆம் ஆண்டிற்கான சாகரவ் பரிசு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அலெக்சேய் நவால்னிக்கு வழங்கப்பட்டது.[42]
அடிக்குறிப்புகள்[தொகு]
- ↑ முன்னர் இது மக்கள் கூட்டமைப்பு (2012–2014), முன்னேற்றக் கட்சி (2014–2018) என அழைக்கப்பட்டது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Aden, Mareike (5 September 2013). "Alexej Nawalny: Der dunkle Star". Zeit Online (ஜெர்மன்). 26 October 2020 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "биография – Алексей Навальный: Кто такой Алексей Навальный". 2018.navalny.com (ரஷியன்). 20 October 2017 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 20 October 2017 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Roth, Andrew (24 March 2021). "Alexei Navalny says health has sharply deteriorated in jail". தி கார்டியன். https://www.theguardian.com/world/2021/mar/24/alexei-navalny-says-health-has-sharply-deteriorated-in-jail.
- ↑ Kim, Lucian (8 February 2018). "Banned From Election, Putin Foe Navalny Pursues Politics By Other Means". NPR. https://www.npr.org/sections/parallels/2018/02/08/584369719/banned-from-election-putin-foe-navalny-pursues-politics-by-other-means.
- ↑ Sebastian, Clare (12 June 2017). "Alexey Navalny and Russia's YouTube insurgency". CNN. https://www.cnn.com/2017/06/11/europe/russia-navalny-youtube-protests/index.html.
- ↑ Kaminski, Matthew (3 March 2012). "The Man Vladimir Putin Fears Most". The Wall Street Journal. https://www.wsj.com/articles/SB10001424127887323309404578614210222799482.
- ↑ "Navalny's Anti-Corruption Fund Accuses Medvedev of Secret Massive Estate". Foreign Policy. 2 March 2017. 27 March 2017 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 27 March 2017 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Brumfield, Ben; Black, Phil; Smith-Spark, Laura (19 July 2013). "Outspoken Putin critic Alexei Navalny hit with prison sentence". CNN. https://www.cnn.com/2013/07/18/world/europe/russia-navalny-case/.
- ↑ "Kremlin critic Alexei Navalny given suspended sentence and brother jailed". தி கார்டியன். 30 December 2014. https://www.theguardian.com/world/2014/dec/30/kremlin-critic-navalny-given-suspended-sentence-brother-jailed.
- ↑ Englund, Will (9 September 2013). "Kremlin critic Alexei Navalny has strong showing in Moscow mayoral race, despite loss". தி வாசிங்டன் போஸ்ட். https://www.washingtonpost.com/world/kremlin-critic-alexei-navalny-has-strong-showing-in-moscow-mayoral-race-despite-loss/2013/09/09/dc9504e4-1924-11e3-a628-7e6dde8f889d_story.html.
- ↑ "Село Навальних. Як в Україні земляки і родичі згадують головного ворога Путіна" (in uk). BBC News Україна. https://www.bbc.com/ukrainian/features-55903459.
- ↑ "Alexei Navalny: Russia's vociferous Putin critic" (in en-GB). BBC News. 15 January 2021. https://www.bbc.com/news/world-europe-16057045.
- ↑ "Kremlin critic Navalny: To Moscow via Yale". Deutsche Welle. 14 August 2013. https://www.dw.com/en/kremlin-critic-navalny-to-moscow-via-yale/a-17021240.
- ↑ "Alexey Navalny | Yale Greenberg World Fellows". worldfellows.yale.edu. 16 November 2019 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 16 November 2019 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Russian opposition leader Alexei Navalny 'poisoned'". BBC News. 20 August 2020. https://www.bbc.co.uk/news/world-europe-53844958.
- ↑ Chappell, Bill (15 October 2020). "EU Sanctions Russian Officials Over Navalny Poisoning, Citing Chemical Weapons Use". NPR.org. 20 October 2020 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Navalny Novichok poisoning: EU sanctions hit top Russians". BBC News. 15 October 2020. https://www.bbc.com/news/world-europe-54552480.
- ↑ Emmott, Robin; Young, Sarah; Falconbridge, Guy; Marrow, Alexander; Antonov, Dmitry (15 October 2020). "EU, Britain sanction Russian officials over Navalny poisoning". ராய்ட்டர்ஸ் (Brussels). https://www.reuters.com/article/us-russia-politics-navalny-eu-idUSKBN2701DT.
- ↑ "U.S., EU Sanction Russia Over Navalny Poisoning". The Moscow Times. 2 March 2021.
- ↑ "Navalny Targets 'Billion-Dollar Putin Palace' in New Investigation". The Moscow Times. 19 January 2021.
- ↑ "In Responding to Navalny's Prison Sentence, the West Has Limited Options". Stratfor. 2 February 2021. 11 February 2021 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Palasciano, Andrea (2 February 2021). "As It's Happening: Navalny Sentenced to 2.5 Years in Penal Colony". The Moscow Times. 2 February 2021 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Putin critic Navalny jailed in Russia despite protests" (in en-GB). BBC News. 2 February 2021. https://www.bbc.com/news/world-europe-55910974.
- ↑ "Statement on Alexei Navalny's status as Prisoner of Conscience" (ஆங்கிலம்). பன்னாட்டு மன்னிப்பு அவை. 7 May 2021. 9 May 2021 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Amnesty apologises to Alexei Navalny over 'prisoner of conscience' status". BBC News. 7 May 2021. 27 May 2021 அன்று பார்க்கப்பட்டது.
[In February, AI] said the decision [to remove the status] had been made internally and was not influenced by the Russian state. But in a new statement on Friday the organisation apologised and said their decision had been used to "further violate Navalny's rights" in Russia.
- ↑ Harding, Luke; Roth, Andrew (20 August 2020). "A cup of tea, then screams of agony: how Alexei Navalny was left fighting for his life". The Guardian. https://www.theguardian.com/world/2020/aug/20/a-cup-of-tea-then-screams-of-agony-how-alexei-navalny-was-left-fighting-for-his-life.
- ↑ Bidder, Benjamin; Esch, Christian (1 October 2020). "Russian Opposition Leader Alexei Navalny on His Poisoning". Spiegel. https://www.spiegel.de/international/world/alexei-navalny-on-his-poisoning-i-assert-that-putin-was-behind-the-crime-a-ae5923d5-20f3-4117-80bd-39a99b5b86f4.
- ↑ அலெக்ஸே நவால்னிக்கு விஷம் கொடுக்கப்பட்டதாக சந்தேகம்: கோமா நிலையில் ரஷ்யாவின் எதிர்க்கட்சி தலைவர்
- ↑ "Alexei Navalny doctors refuse to let Putin critic leave Russia – aide". The Guardian. 21 August 2020. https://www.theguardian.com/world/2020/aug/21/alexei-navalny-plane-leaves-germany-to-transport-putin-critic-after-suspected-poisoning.
- ↑ "Alexei Navalny: Russian doctors agree to let Putin critic go to Germany". BBC News. 21 August 2020. https://www.bbc.co.uk/news/world-europe-53865811.
- ↑ "Alexei Navalny arrives in Germany for treatment". BBC News. 22 August 2020. https://www.bbc.com/news/world-europe-53871617.
- ↑ Osborne, Samuel (24 August 2020). "Alexei Navalny: Russian opposition leader was poisoned, German hospital suggests". The Independent. https://www.independent.co.uk/news/world/europe/alexei-navalny-poisoned-russia-putin-berlin-hospital-test-kremlin-a9685821.html.
- ↑ "Navalny Returns to Russia". The Moscow Times. 17 January 2021.
- ↑ "Russia Warns 'Obliged' to Detain Kremlin Critic Navalny on Return". The Moscow Times. 14 January 2021.
- ↑ "Human Rights Court Says Navalny Unfairly Convicted In 'Yves Rocher Case'". rferl.org. 17 October 2017.
- ↑ "Alexey Navalny remanded in custody for 30 days pending trial". Meduza.io. 18 January 2021.
- ↑ நவால்னியை சிறையிலிருந்து விடுவிக்கக் கோரிய போராட்டக்காரர்கள் 1,700 பேர் கைது
- ↑ What is next for Aleksey Navalny’s movement?
- ↑ "நவால்னி சிறையில் இறந்தால் ரஷ்யா கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்" - அமெரிக்கா எச்சரிக்கை
- ↑ Russian prosecutors call for Alexei Navalny to serve 13 years in prison
- ↑ அலெக்சி நவால்னிக்கு 13 ஆண்டு சிறை
- ↑ Jailed Russian Opposition leader wins top EU human rights prize
வெளி இணைப்புகள்[தொகு]
- Navalny's page for the Yale World Fellows Program
- "Palace for Putin. History of the biggest bribery", a video released by Navalny on 19 January 2021, after returning to Moscow.
- ரஷ்ய எதிர்க் கட்சித் தலைவர் அலெக்சே நவால்னி ஓரிரு நாளில் இறக்க நேரும்: மருத்துவர்கள் எச்சரிக்கை