அலிகேட்டர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அலிகேட்டர் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த அமெரிக்க திகில் திரைப்படமாகும். இப்படத்தை லூயிஸ் டீக் இயக்கினார் மற்றும் ஜான் சேல்ஸ் இப்படத்தின் திரைக்கதையை எழுதினார். இதில் ராபர்ட் ஃபோஸ்டர், ராபின் ரைக்கர் மற்றும் மைக்கேல் வி. காஸோ ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த படம் அதன் நையாண்டி தனத்திற்க்காக விமர்சகர்களிடமிருந்து பாராட்டுக்களைப் பெற்றது. 1991 ஆம் ஆண்டில் அலிகேட்டர் II: தி மியூட்டேஷன் என்ற தலைப்பில் இரண்டாம் பாகம் வீடியோவாக வெளியிடப்பட்டது. [1] இப்படத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு டேபில்டாப் விளையாட்டு 1980 இல் ஐடியல் டாய் நிறுவனத்தால் விநியோகிக்கப்பட்டது. [2] [3]

வரவேற்பு[தொகு]

இப்படம் வெளியான காலத்திலும் அதற்குப் பின்னரும் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. ராட்டன் டொமாட்டோஸில், இது 9 மதிப்புரைகளின் அடிப்படையில் சராசரியாக 5.3 / 10 மதிப்பீட்டைக் வழங்கியது.

வசூல்[தொகு]

இப்படம் 1.5 மில்லியன் டாலர்கள் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டது. இப்படம் திரையரங்குகளில் சராசரியான வசூலை மட்டுமே பெற்றது. ஒட்டுமொத்தமாக இப்படம் 6.46 மில்லியன் டாலர்கள் வசூலித்தது.[4]

குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அலிகேட்டர்&oldid=2763206" இருந்து மீள்விக்கப்பட்டது