உள்ளடக்கத்துக்குச் செல்

அலங்

ஆள்கூறுகள்: 21°24′43″N 72°12′10″E / 21.412082°N 72.202749°E / 21.412082; 72.202749
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அலாங்
துறைமுக நகரம்
அலாங் துறைமுக நகரம்
அலாங் is located in குசராத்து
அலாங்
அலாங்
அலாங் is located in இந்தியா
அலாங்
அலாங்
ஆள்கூறுகள்: 21°24′43″N 72°12′10″E / 21.412082°N 72.202749°E / 21.412082; 72.202749
நாடுஇந்தியா
மாநிலம்குஜராத்
மாவட்டம்[பவநகர் மாவட்டம்
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்8,309
மொழிகள்
 • அலுவல்குஜராத்தி, இந்தி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
வாகனப் பதிவுGJ 04
இணையதளம்gujaratindia.com
அலாங் கடலில் உடைக்கப்பட காத்திருக்கும் எஸ் எஸ் பிரான்சு கப்பல், ஆகஸ்டு 2007

அலாங் ( Alang) இந்தியாவின், குஜராத் மாநிலத்தின் பவநகர் மாவட்டத்தில் அமைந்த துறைமுக நகரம். காம்பத் வளைகுடாவில் நீண்ட கடற்கரை கொண்ட இந்நகரில் கடந்த 30 ஆண்டுகளாக அனைத்து வகையான கப்பல்களை உடைக்கும் தொழில் நடைபெறுகிறது.[1]அலாங் கடற்கரை நகரம் பவநகரிலிருந்து 50 கி. மீ., தொலைவில் உள்ளது.

கப்பல் உடைக்கும் தொழில்[தொகு]

உலக அளவில் பயணத்திற்கு பயனில்லாத கப்பல்களில் பாதிக்கு மேற்பட்டவைகள் அலாங் கடற்கரைக்கு கொண்டு வரப்பட்டு, கப்பலின் பாகங்களை தனித்தனியாக பிர்த்தெடுத்து, மறு சுழற்சி முறையில் பயன்படுத்துகின்றனர்..[2] அலாங் நகரத்தின் கப்பல்கள் உடைக்கும் தொழிற்சாலையை, உலகத்தின் மிகப்பெரிய கப்பல்களின் இடுகாடு என அழைக்கின்றனர்.[3]

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 1,443 குடியிருப்புகள் கொண்ட அலாங்கின் மொத்த மக்கள்தொகை 8,309 ஆகும். அதில் ஆண்கள் 4,332 மற்றும் 3,977 பெண்கள் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 918 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 1306 (15.72%) ஆக உள்ளனர். சராசரி எழுத்தறிவு 72.53% ஆக உள்ளது. இவ்வட்ட மக்கள்தொகையில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே மற்றும் ஆக உள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 97.28%, இசுலாமியர் 2.47% மற்றும் 0.19% ஆகவுள்ளனர்.[4]

மித்தி விர்தி அனுமின் நிலையம்[தொகு]

அலாங் நகரத்தின் கப்பல்கள் உடைக்கும் தொழிற்சாலைக்கு வடக்கே 3 கிலோ மீட்ட தொலைவில், மித்தி விர்தி அல்லது விராடி பகுதியில் 6600 மெகா வாட் திறன் கொண்ட அணுமின் நிலையம் அமைக்க தேசிய மின் கழகத்தின் வரைவு நகலுக்கு இந்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. [5]. ஆனால் இப்பகுதி மக்கள் அணு மின் நிலையத் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு காட்டியதால், தற்காலிகமாக திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Alang Pin Code". citypincode.in. Archived from the original on 2014-03-22. பார்க்கப்பட்ட நாள் 2014-03-22.
  2. Langewiesche, William. "The Shipbreakers". August 2000;; Volume 286, No. 2; page 31-49. The Atlantic Monthly. பார்க்கப்பட்ட நாள் 22 September 2012.
  3. "5 killed in Alang Port Shipbreaking yard blast in Gujarat". IANS. news.biharprabha.com. பார்க்கப்பட்ட நாள் 28 June 2014.
  4. Alang Population Census 2011
  5. Centre seeks to settle nuclear deal dust

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அலங்&oldid=3541861" இலிருந்து மீள்விக்கப்பட்டது