அமிலேசு
Appearance
அமிலேசு என்பது நீராற்பகுத்தலின் மூலம் மாப்பொருளை சருக்கரை ஆக்கும் ஒருவகை நொதியாகும். இது மனிதர்கள் உட்பட பல்வேறு பாலூட்டிகளின் உமிழ்நீரில் காணப்படுகிறது. உணவு செரிமானத்திற்கு இது உதவுகிறது.[1]
வகைப்பாடு
[தொகு]ஆல்பா அமிலேசு | பீட்டா அமிலேசு | காமா அமிலேசு | |
---|---|---|---|
மூலம் | விலங்குகள், தாவரங்கள், நுண்மிகள் | தாவரங்கள், நுண்மிகள் | விலங்குகள், நுண்மிகள் |
இழையம் | உமிழ்நீர், மண்ணீரல் | விதைகள், பழங்கள் | சிறுகுடல் |
வினைப்பயன் | மால்ட்டோசு, டெக்ஸ்ட்ரின் உள்ளிட்டவை | மால்ட்டோசு | குளுக்கோசு |
ஏதுவான காரகாடி எண் | 5.6–5.8 | 5.4–5.5 | 4.0-4.5 |
ஏதுவான தட்பவெப்பம் | 68–74°C (154-165°F) | 58–65°C (136-149°F) | 63–68°C (145-155°F) |
பயன்பாடு
[தொகு]நொதிப்பு
[தொகு]நொதிப்பு என்கிற செயல்பாட்டில், மதுவம் என்கிற நுண்மி சருக்கரையை சீரணம் செய்து எத்தனாலை வெளியிடுகிறது. இந்த செயல்பாடு மது தயாரிக்க பெரிதும் பயன்படுகிறது.[3]
மாவுக்கலவை
[தொகு]வெதுப்பி உருவாக்க மாவுக் கலவையாய் பயன்படுகிறது அமிலேசு. மதுவம் சருக்கரையை செரிக்கும் போது எத்தனாலோடு சேர்த்து கார்பனீராக்சைடையும் வெளியிடுகிறது. இந்த கார்பனீராக்சைடானது வெதுப்பியை மேலெழும்பி உப்பச் செய்து அதற்கு செரிவளிக்கிறது.[4]