உள்ளடக்கத்துக்குச் செல்

அநீதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
'
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்வசந்தபாலன்
தயாரிப்பு
  • எம். கிருஷ்ண குமார்
  • முருகன் ஞானவேல்
  • வரதராஜன் மாணிக்கம்
  • வசந்தபாலன்
கதைவசந்தபாலன்
இசைஜி. வி. பிரகாஷ் குமார்
நடிப்பு
ஒளிப்பதிவுஏ. எம். எட்வின் சகாய்
படத்தொகுப்புஇரவிக்குமார். எம்
கலையகம்அர்பன் பாய்சு சுடியோசு
விநியோகம்எஸ் பிக்சர்ஸ்
வெளியீடு21 சூலை 2023 (2023-07-21)
ஓட்டம்103 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அநீதி (Aneethi) என்பது 2023 ஆம் ஆண்டு வெளிவந்த உளவியலை அடிப்படையாகக் கொண்ட இந்தியத் தமிழ் காதல் அதிரடி நாடகத் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை வசந்தபாலன் இயக்கியிருந்தார். அர்பன் பாய்சு என்ற பட நிறுவனத்தின் பதாகையின் கீழ் எம். கிருஷ்ண குமார், முருகன் ஞானவேல், வரதராஜன் மாணிக்கம், ஜி.வசந்தபாலன் ஆகியோர் தயாரித்தனர். இப்படத்தில் அர்ஜூன் தாஸ், துஷாரா விஜயன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.[1] திரைப்பட விமர்சகர்களின் நேர்மறையான விமர்சனத்தை இப்படம் பெற்றது.[2]

கதைக்கரு

[தொகு]

அலைப்பேசி செயலி வழியே கிடைத்த கட்டளைமுறையின் அடிப்படையில் உணவு வழங்கும் பணியாளுக்கும், தற்செயலாக அதுபோன்று உணவு வழங்கும் போது, சந்திக்கும் பணக்கார வீட்டு பணிப்பெண்ணுக்கும் இடையே நடக்கும் காதல் கதையே, இத்திரைப்படமாகும். காதலன் நாள்பட்ட மனநலப் பிரச்சினையால் (Obsessive-compulsive disorder (OCD)) பாதிக்கப்பட்டுள்ளவன். பிறர் அவனை மோசமாக நடத்தும்போதெல்லாம், அவனுக்குள் ஒரு "கொலை செய்யத் தூண்டும் உள்ளுணர்வு" ஏற்படுகிறது. அதனை உண்மையில் நிகழ்வது போலவும் காட்டுகிறார்கள். காதலியின் குடும்பச் சூழலல் காரணமாக, ஒரு பணக்கார மூதாட்டியின் (சாந்தா தனஞ்செயன்) வீட்டில் வீட்டு வேலை செய்யும் பெண்ணாக இருக்கிறாள். அந்த மூதாட்டியும் அவரது வெளிநாட்டில் வசிக்கும் பிள்ளைகளும் (வனிதா விஜயகுமார், அர்ஜுன் சிதம்பரம்) அப்பணிப்பெண்ணை மிக மோசமாக நடத்துகின்றனர். காதலின் கனிவான குணத்தால் கவரப்பட்ட காதலன் திரு, அவளுடன் நெருக்கமாகப் பழகத் தொடங்குகிறான். காதலி (சுப்புலட்சுமி)யின் முதலாளியான மூதாட்டி எதிர்பாராத விதமாக, பணிப்பெண்ணுக்கு தனது பெரிய வீட்டினை எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொள்கிறாள். இந்த மரணச் செய்தியை, வெளிநாட்டில் உள்ள அவரது குடும்பத்தினருக்குத் தெரிவிக்க முடியாமல், திருவும், சுப்புலட்சுமியும் அந்தப் பிரச்சினையில் சிக்கிக் கொள்கின்றனர். மூதாட்டியின் மரணத்திற்கு காதலர்களே காரணம் என்று, அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர். இந்தக் கொலைப் பழியில் இருந்து, இருவரும் எப்படித் தப்பிக்கிறார்கள்? எளிய உழைக்கும் மக்கள் மீது, பணக்கார வர்க்கம் நிகழ்த்தும் அநீதி, சுரண்டல் ஆகியவற்றைச் சுற்றியே படத்தின் மீதிக்கதை நகர்கிறது.

நடிகர்கள்

[தொகு]

பாடல்கள்

[தொகு]

இத்திரைப்படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார்.

பாடல்கள்
# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "திகட்ட திகட்ட காதலிப்போம்"  ஜி. வி. பிரகாஷ் குமார், யாமினி கண்டசாலா 04:46
2. "துளி ஈரம் சுரக்காதா - தலைப்புப் பாடல்"  ஹரிஷ் சிவராமகிருஷ்ணன் 03:30
3. "மலர்தான் விழுந்தது"  கேசம் அப்துல் வகாப், இரவி ஜி 03:50
4. "பூ நாழி பொன் நாழி"  சித் ஸ்ரீராம் 03:16

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Arjun Das, Dushara Vijayan's Aneethi trailer is here". The New Indian Express (in ஆங்கிலம்). Archived from the original on 2023-07-14. Retrieved 2023-07-13.
  2. "Arjun Das' heartfelt note after Aneethi's success". The Times of India. 2023-08-01 இம் மூலத்தில் இருந்து 2023-08-02 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230802003052/https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/arjun-das-heartfelt-note-after-aneethis-success/articleshow/102312487.cms?from=mdr. 

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அநீதி&oldid=4400467" இலிருந்து மீள்விக்கப்பட்டது