அத்தாபூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அத்தாபூர்
அண்மைப் பகுதி
பி.வி. நரசிம்ம ராவ் அதிவேக நெடுஞ்சாலை
பி.வி. நரசிம்ம ராவ் அதிவேக நெடுஞ்சாலை
அத்தாபூர் is located in Telangana
அத்தாபூர்
அத்தாபூர்
Location in Telangana, India
அத்தாபூர் is located in இந்தியா
அத்தாபூர்
அத்தாபூர்
அத்தாபூர் (இந்தியா)
ஆள்கூறுகள்: 17°23′45″N 78°25′52″E / 17.3959°N 78.4312°E / 17.3959; 78.4312ஆள்கூறுகள்: 17°23′45″N 78°25′52″E / 17.3959°N 78.4312°E / 17.3959; 78.4312
நாடு இந்தியா
மாநிலம்தெலங்காணா
மாவட்டம்ரங்காரெட்டி மாவட்டம்
பெருநகரம்ஐதராபாத்து (இந்தியா)
அரசு
 • நிர்வாகம்பெருநகர ஐதராபாத் மாநகராட்சி
 • மக்களவை உறுப்பினர்ஜி. ரஞ்சித் ரெட்டி
 • சட்டப்பேரவை உறுப்பினர்டி.பிரகாசு கௌட்
 • பெருநகரத் தந்தைபோந்து ராம் மோகன்
மொழிகள்
 • அலுவல்தெலுங்கு, ஆங்கிலம், இந்தி, உருது, தக்னி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்500048
தொலைப்பேசிக் குறியீடு91-, 040
வாகனப் பதிவுடிஎஸ்-07
மக்களாவைத் தொகுதிசேவெள்ள மக்களவைத் தொகுதி
சட்டப் பேரவைத் தொகுதிஇராசேந்திர நகர் சட்டமன்றத் தொகுதி
திட்டமிடல் நிர்வாகம்பெருநகர ஐதராபாத் மாநகராட்சி
காவல் ஆணையாளர்விசி. சஜ்ஜனர், இகாப, சைபராபாத் பெருநகர காவல்துறை
இணையதளம்telangana.gov.in

அத்தாபூர் (Attapur) [1] என்பது தெலங்காணாவின் தென் மேற்கு ஐதராபாத்தில் அமைந்துள்ள ஒரு முக்கிய வணிக மற்றும் குடியிருப்பு பகுதியாகும். இது ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்துடன் இணைப்பை வழங்குகிறது. பி.வி. நரசிம்ம ராவ் அதிவேக நெடுஞ்சாலை அத்தாபூர் வழியாக செல்கிறது. மெகுதி பட்டினம், இராசேந்திரநகர் போன்றவற்றுடன் நெருக்கமாக இருப்பது அத்தாபூருக்கு கூடுதல் நன்மையாகும்.

முக்கிய அலுவலகங்கள்[தொகு]

தேசிய சுங்க மறைமுக வரி மற்றும் போதைப்பொருள் கழகம் (நாசின்) அதன் மண்டல பயிற்சி நிறுவனத்தை இங்கு கொண்டுள்ளது. இராசேந்திரநகர் துணைப்பிரிவு நடுவர் மற்றும் வருவாய் பிரிவு அலுவலகம் இங்கே அமைந்துள்ளது. ராஜேந்திரநகர் XVI கூடுதல் பெருநகர நீதித் துறை நடுவர் நீதி மன்றம் இங்குள்ளது. இங்குள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் ஐதராபாத்தில் மிகப் பெரிய ஒன்றாகும். மேலும் இது அதன் அதிகார எல்லைக்குட்பட்ட பல பகுதிகளை உள்ளடக்கியது. சினபோலிஸ் என்ற திரையரங்கம் அதன் ஒலி அமைப்பு, சுற்றுப்புறம், இருக்கைக்கு புகழ் பெற்றது. இமாயத் சாகர் நீர்த்தேக்கம் இந்த ஊருக்கு அருகில் உள்ளது. சில்லறை விற்பனையாளர்களான வால்மார்ட் மற்றும் மெட்ரோ கேஷ் அன்ட் கேரி ஆகியவை அத்தாபூருக்கு அருகில் உள்ளன.

ஆலயங்கள்[தொகு]

225 ஆண்டுகள் பழமையான ரம்பாக் ராமாலயம் கோயில் அமைப்பு மற்றும் வளாகங்கள் 2015 ஆம் ஆண்டிற்கான கலை மற்றும் கலாச்சார பாரம்பரியத்திற்கான இந்திய தேசிய அறக்கட்டளையின் விருதைப் பெற்றுள்ளன. அத்தாபூரில் ஒரு சுயம்பு அனந்த பத்மநாபசுவாமி கோயில் உள்ளது. பகவான் அனந்த பத்மநாபசுவாமி 1100 ஆண்டுகளாக இங்கு இருந்து வருவதாகக் கூறப்படுகிறது. ஐதராபாத்தின் சீக்கியக் கோயிலான பழமையான குருத்வாரா, புராட்டன் குருத்வாரா சாகிப் ஆஷா சிங் பாக், 1832 ஆம் ஆண்டில் அத்தாபூர் அருகே கட்டப்பட்டது. முசக்மஹால் 1681 கட்டப்பட்ட அரண்மனையும் அத்தாபூரின் மையத்தில் உள்ளது. [2]

கல்வி நிலையங்கள்[தொகு]

பி.வி. நரசிம்மராவ் தெலங்காணா கால்நடை பல்கலைக்கழகம், சர்தார் வல்லபாய் படேல் தேசிய காவல் கழகம், தேசிய ஊரக வளர்ச்சி நிறுவனம், தேசிய வேளாண் விரிவாக்க மேலாண்மை நிறுவனம், தேசிய வேளாண் ஆராய்ச்சி மேலாண்மை கழகம், பேராசிரியர் ஜெயசங்கர் தெலங்காணா மாநில வேளாண் பல்கலைக்கழகம், சிறீ கொண்ட லட்சுமண் தெலங்காணா மாநில தோட்டக்கலை பல்கலைக்கழகம் போன்ற முக்கிய நிறுவனம்க்கள் இங்கு அமைந்துள்ளது. [3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Attapur".
  2. {{cite web}} வார்ப்புருவை பயன்படுத்துகையில் title = , url = என்பவற்றைக் கட்டாயம் குறிப்பிடவேண்டும்."".
  3. "Open Mosque at Masjid-e-Quba today" (en).
"https://ta.wikipedia.org/w/index.php?title=அத்தாபூர்&oldid=3052920" இருந்து மீள்விக்கப்பட்டது