உள்ளடக்கத்துக்குச் செல்

சர்தார் வல்லபாய் படேல் தேசிய காவல் அகாதமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சர்தார் வல்லபாய் படேல் தேசிய காவல் அகாதமி
சுருக்கம்SVPNPA
உருவாக்கம்15 செப்டம்பர் 1948
வகைஅரசு நிறுவனம்
சட்ட நிலைசெயல்படுகிறது
நோக்கம்இந்தியக் காவல் பணி அதிகாரிகளுக்கு பயிற்சி வழங்குதல்
தலைமையகம்உள்துறை அமைச்சகம், புதுதில்லி
தலைமையகம்
சேவை பகுதி
இந்தியா
உறுப்பினர்கள்
இந்தியக் காவல் பணி அதிகாரிகள்
தாய் அமைப்பு
உள்துறை அமைச்சகம்
பணிக்குழாம்
427
வலைத்தளம்svpnpa.gov.in

சர்தார் வல்லபாய் படேல் தேசியக் காவல் அகாதமி (Sardar Vallabhbhai Patel National Police Academy (SVPNPA) இந்தியக் காவல் பணியில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு,பயிற்சி வழங்கும் முதன்மை காவல் பயிற்சி நிறுவனம். இந்நிறுவனம் இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தின் தலைநகரமான ஐதராபாத்தில் அமைந்துள்ளது.[1]இந்த அகாதமி உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்குகிறது.

வரலாறு

[தொகு]

முதலில் மத்தியக் காவல் பயிற்சிக் கல்லூரி எனும் பெயரில், 15 செப்டம்பர் 1948 அன்று இராஜஸ்தான் மாநிலத்தின் அபு மலையில் துவக்கப்பட்டது. 1967-இல் இதன் பெயரை தேசியக் காவல் அகாதமி எனப்பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்தியாவின் முன்னாள் துணைப் பிரதமாராகவும், உள்துறை அமைச்சராகவும் செயல்பட்ட சர்தார் வல்லபாய் படேல் நினைவாக, தேசியக் காவல் அகாதமியின் பெயரை 1974-இல் சர்தார் வல்லபாய் படேல் தேசியக் காவல் அகாதமி எனப்பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 1975-இல் இப்பயிற்சி நிலையத்தை அபு மலையிலிருந்து, ஐதராபாத் நகரத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது.[2]

வளாகத்தின் அமைவிடம்

[தொகு]

சர்தார் வல்லபாய் படேல் தேசியக் காவல் அகாதமி, பெங்களூர்- ஐதராபாத் தேசிய நெடுஞ்சாலை எண் 44-இல், ஐதராபாத் நகரத்திற்கு வெளியே எட்டு கிலோ மீட்டர் தொலைவில், 277 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது.

பயிற்சி

[தொகு]

இந்தியக் குடியியல் பணித் தேர்வில் இந்தியக் காவல் பணிக்கு தேர்ச்சி பெற்றவர்களை சர்தார் வல்லபாய் படேல் காவல் அகாதமியில் பயிற்சி வழங்குவர். பயிற்சி முடித்தவர்களுக்கு ஒதுக்கப்பட்ட மாநிலத்தில் முதலில் உதவி காவல் கண்காணிப்பாளர் பணியிடத்தில் நியமிக்கப்படுவர்.[3] இந்தியக் காவல் பணி அதிகாரிகள் இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்குவர்.

குடியரசு தலைவரின் விருதுகள்

[தொகு]
சர்தார் வல்லபாய் படேல் காவல் அகாதமியின் அர்ப்பணியுடன் கூடிய சேவைக்காக 2008-இல் வெளியிடப்பட்ட அஞ்சல் தலை

சர்தார் வல்லபாய் படேல் தேசியக் காவல் அகாதமியின் அர்ப்பணியுடன் கூடிய சேவைக்காக 2008-இல் இந்திய அஞ்சல் துறை, அஞ்சல் தலை வெளியிட்டு சிறப்பித்தது.

மேலும் தேசியக் காவல் அகாதமியின் சாதனைகளையும், தேச சேவைகளையும் பாராட்டி, அகாதமியின் 40-ஆம் ஆண்டு விழாவின் போது, இந்தியக் குடியரசுத் தலைவரின் சிறப்பு விருது வழங்கப்பட்டது.

அமைப்பு

[தொகு]

இந்தியக் காவல் பணியில் உள்ள காவல் துறை தலைமை இயக்குநர் பணியிடத் தகுதி பெற்றவர் தலைமையில் இந்த அகாதமி இயங்குகிறது. அவருக்கு துணையாக இன்ஸ்பெகடர் ஜெனரல் பதவியில் உள்ள இரண்டு இணை இயக்குநர்களும்; துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் பதவியில் உள்ள மூன்று துணை இயக்குநர்களும், இருபது உதவி இயக்குநர்களும் உள்ளனர்.

காவல் பயிற்சிக்கு உதவியாக ஒரு தடய அறிவியல் ஆராய்ச்சியாளரும், ஒரு நீதித்துறை அதிகாரியும் மற்றும் கணிணி மற்றும் தொலைத்தொர்பு நிபுணர்களும் உள்ளனர்.

அகாதமியின் இயக்குநர்கள் பட்டியல்

[தொகு]
வ. எண் பெயர் மாநிலம் & ஐபிஎஸ்-ஆண்டு பதவியேற்ற நாள் பதவி விலகிய நாள்
1 பி எல் மேத்தா, இந்தியக் காவல் மேற்கு வங்காளம் 15 செப்டம்பர் 1948 31 சனவரி1954
2 வார்யம் சிங், இந்தியக் காவல் பஞ்சாப், 1941 11 பிப்ரவரி1954 5 நவம்பர் 1956
3 ஏ ஆர் ஜெயவந்த், இந்தியக் காவல் மத்தியப் பிரதேசம் 8 மார்ச் 1957 16 மே 1958
4 ஜி கே ஹண்டூ, இந்தியக் காவல் ஐக்கிய மாகாணம் 17 மே 1958 30 அக்டோபர் 1960
5 பி பி பானர்ஜி, இந்தியக் காவல் பிகார், 1934 14 மார்ச் 1961 28 பிப்ரவரி 1962
6 எஸ் சி மிஸ்ரா ஐக்கிய மாகாணம், 1933 24 மார்ச் 1962 7 டிசம்பர் 1967
7 பி பி பானர்ஜி, இந்தியக் காவல் பிகார், 1934 1 சனவரி 1968 31 சனவரி 1970
8 ஏ கே கோஷ், இந்தியக் காவல் பிகார் 1 பிப்ரவரி 1970 10 சூலை1971
9 எஸ் ஜி கோகலே ஐபிஎஸ் மகாராட்டிரா, 1949 1 பிப்ரவரி 1972 31 சூலை 1974
10 எஸ் எம் டயஸ், ஐபிஎஸ் தமிழ்நாடு, 1949 11 செப்டம்பர் 1974 28 பிப்ரவரி 1977
11 ஆர் டி சிங், ஐபிஎஸ் பிகார் 7 நவம்பர் 1977 4 பிப்ரவரி 1979
12 பி ஏ ரோசா, ஐபிஎஸ் அரியானா, 1948 5 பிப்ரவரி 1979 18 செப்டம்பர் 1979
13 பி கே இராய், ஐபிஎஸ் ஒடிசா, 1948 11 நவம்பர்1979 31 சனவரி 1982
14 ஜி சி சிங்க்வி, ஐபிஎஸ் இராஜஸ்தான், 1951 18 பிப்ரவரி 1983 30 நவம்பர் 1985
15 ஏ ஏ அலி, ஐபிஎஸ் மத்தியப் பிரதேசம், 1955 2 டிசம்பர் 1985 31 மார்ச் 1990
16 பி டி மாளவியா, ஐபிஎஸ் மத்தியப் பிரதேசம், 1957 12 செப்டம்பர் 1990 31 டிசம்பர் 1991
17 சங்கர் சென், ஐபிஎஸ் ஒடிசா, 1960 2 ஏப்ரல் 1992 31 மே1994
18 ஏ பி துரை, ஐபிஎஸ் கர்நாடகா, 1963 1 சூலை 1994 28 செப்டம்பர் 1996
19 திரிநாத் மிஸ்ரா, ஐபிஎஸ் உத்தரப் பிரதேசம், 1965 12 சூன் 1996 6 டிசம்பர் 1997
20 பி வி இராஜகோபால், ஐபிஎஸ் மத்தியப் பிரதேசம், 1965 29 சூன்1998 31 மே 2001
21 எம் கே சுக்லா, ஐபிஎஸ் மத்தியப் பிரதேசம், 1966 29 சூன் 1998 31 மே 2001
22 ஞானேஸ்வர் ஜா, ஐபிஎஸ் உத்தரப் பிரதேசம், 1967 11 சூலை 2002 31 சூலை 2004
23 கமல் குமார், ஐபிஎஸ் உத்தரப் பிரதேசம், 1972 1 அக்டோபர் 2004 31 அக்டோபர் 2006
24 டாக்டர் ஜி எஸ் இராஜகோபால், ஐபிஎஸ் இராஜஸ்தான், 1971 11 சூலை 2002 31 சூலை 2004
25 கி. விஜயகுமார், ஐபிஎஸ் தமிழ்நாடு, 1975 1 டிசம்பர் 2008 5 மே 2010
26 இராஜிவ் மாத்தூர், ஐபிஎஸ் சத்தீஸ்கர், 1974 22 அக்டோபர் 2010 30 செப்டம்பர் 2011
27 வி என் இராய், ஐபிஎஸ் அரியானா, 1977 2 நவமப்ர் 2011 31 டிசம்பர் 2012
28 சுபாஷ் கோஸ்சுவாமி, ஐபிஎஸ் அசாம், 1977 7 மார்ச் 2013 8 நவம்பர் 2013
29 அருணா பகுகுனா, ஐபிஎஸ் தெலங்கானா, 1979 28 சனவரி 2014 28 பிப்ரவரி 2017
30 டி. ஆர். டோலி பர்மன், ஐபிஎஸ் ஜம்மு காஷ்மீர், 1986 1 மார்ச் 2017 29 மார்ச் 2019

இதனையும் காண்க

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Indian Police Service
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


மேற்கோள்கள்

[தொகு]
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2008-01-07. பார்க்கப்பட்ட நாள் 2020-01-07.
  2. "History of Academy". www.svpnpa.gov.in.
  3. "Sardar Vallabhbhai Patel National Police Academy". About Academy. Sardar Vallabhbhai Patel National Police Academy. Archived from the original on 29 அக்டோபர் 2013. பார்க்கப்பட்ட நாள் 10 August 2012.

வெளி இணைப்புகள்

[தொகு]