உள்ளடக்கத்துக்குச் செல்

அசுபாசியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வத்திக்கான் அருங்காட்சியகத்தில் உள்ள அசுபாசியாவின் பெயரில் பொறிக்கப்பட்டிருக்கும் பளிங்கு பாலின உடலி.

அசுபாசியா (/æˈspʒiə, æˈspziə, æˈspʒə, æˈspʃə/;[1] (ஆங்கிலம்: Aspasia; கிரேக்கம்: Ἀσπασία; (கி. மு 470 - 400); இவர் கிரேக்க காலத்திய ஏதென்ஸின் செல்வாக்குமிக்க குடியேற்றக்காரர் ஆவார், மேலும் அரசியல் தலைவரான பெரிக்கிளீசின் காதலியாகவும், வைப்பாட்டியாகவும் (திருமணம் இல்லாமல் கூடவாழ வைத்துக் கொள்ளப்பட்டிருக்கும் பெண்) இருந்தவர். பெரிகிள்ஸ் ஒரு தம்பதிக்கு இளைய மகனாக இருந்தார், ஆனால் அந்த ஜோடி திருமணத்தின் முழு விவரமும் தெரியவில்லை. புளூட்டாக்கின் கருத்துப்படி, அவரது வீடு ஏதென்ஸில் அறிவார்ந்த மையமாக இருந்தது, தத்துவஞானி சாக்கிரட்டீசு உள்ளிட்ட முக்கிய எழுத்தாளர்களையும் சிந்தனையாளர்களையும் கவர்ந்திழுக்கும் இடமாக அமைந்திருந்தது. அசுபாசியாவின் போதனைகள் சாக்ரடீஸ் மீது நன்மதிப்பை பெற்று தந்ததாக கருதப்படுகிறது. கிரேக்கத் தத்துவஞானியான, சாக்கிரட்டீசின் சீடரும், அரிஸ்டாட்டிலின் குருவுமான பிளேட்டோ, நகைச்சுவையின் தந்தை என்று குறிப்பிட்ட ஒரு பண்டைய கிரேக்க நாடகாசிரியரான அரிஸ்டாஃபனீஸ், கிரேக்க தத்துவஞானி, வரலாற்று வரைவாளர், போர் வீரர் மற்றும் சாக்ரடீஸின் மாணவரான செனபோன் மற்றும் பலவற்றின் எழுத்துக்களில் அசுபாசியாவின் குறிப்புகள் காணபடுகின்றது. அவள் கிரேக்கத்தில் தன்னுடைய பருவ வயது வாழ்க்கையின் பெரும்பகுதியைக் கழித்த போதினும், அவரின் வாழ்க்கை பற்றிய சில விவரங்கள் முழுமையாக அறியப்பட்டுள்ளன. அசுபாசியாவை ஒரு விலைமகளிர் விடுதியாளர் என்று சிலரும், மற்றும் விலைமாது என்று சில அறிஞர்களும் தெரிவிக்கின்றனர். வரலாற்றில் அசுபாசியாவின் பங்கு பண்டைய கிரேக்கத்தில் பெண்கள் புரிந்துகொள்வதற்கு சிக்கலான நுண்ணறிவுகளை வழங்குகிறது. அவரது காலப்பகுதியிலிருந்த பெண்களைப் பற்றி மிகக் குறைவாகவே அறியப்படுகிறது. அசுபாசியாவின் வாழ்க்கையைப் பற்றி கேள்விகளைக் கேட்பது மனிதனின் அரைப் பகுதியைப் பற்றி கேள்வி கேட்பதாகும் என்று ஒரு அறிஞர் குறிப்பிட்டுள்ளார்.[2]

தோற்றம் மற்றும் ஆரம்பகால ஆண்டுகள்

[தொகு]

அசுபாசியா, மிலேத்தசின் (Miletus) கிரேக்க நகரத்திலுள்ள அயோனியனில் (Ionian) பிறந்தார், (தற்போதைய துருக்கி நாட்டின் அய்டின் (Aydın) மாகாணத்தில்) அவரது தந்தையின் பெயர் ஆக்சியோச்சசு (Axiochus) என்பது தவிர, தனது குடும்பத்தை பற்றி சிறிது தெரிந்திருந்தாலும், அவர் ஒரு பணக்கார குடும்பத்தில் இருந்திருக்க வேண்டும் என்பது தெளிவாகத் தெரிகிறது, ஏனென்றால், சிறந்த கல்வியை பெற்றிருந்தால் அவ்வாறாக இருந்தால் மட்டுமே அவள் பெற்றிருக்க முடியும் என் கூறப்படுகிறது. சில பழங்கால ஆதாரங்கள் அவர் கரியான் கைதி-போர்-அடிமை என்று கூறுகின்றன; இந்த அறிக்கைகள் பொதுவாக தவறானவை என்று கருதப்படுகின்றன.[3]

எந்த சூழ்நிலையில் முதலில் ஏதென்சிற்கு பயணம் செய்தார் என்பது தெரியவில்லை. ஆக்சியோச்சசு மற்றும் அசுபாசியா என்ற பெயர்களைக் குறிப்பிடும் 4 ஆம் நூற்றாண்டின் கல்லறை கல்வெட்டு கண்டுபிடிக்கபட்டு, அசுபாசியாவின் குடும்ப பின்னணி மற்றும் ஏதெனின் தொடர்புகளை மறுசீரமைப்பதற்காக வரலாற்று ஆசிரியர் பீட்டர். கே (Peter K) என்பவர் முயன்றுவருகிறார். அவரது கூற்றுப்படி அவரை ஸ்காம்பொனிடே (புகழ்பெற்ற அல்கிபியேட்சின் தாத்தா) என்ற இரண்டாவது அல்கிபிடியசு உடன் இணைக்கின்றது. இவர் கி. மு. 460 இல் ஏதென்சில் இருந்து அகற்றப்பட்டார், மிலேத்தசில் தனது சிறைவாசத்தை கழித்திருக்கலாம் என நம்பப்படுகிறது.[4] தனது நாட்டைவிட்டு வெளியேறியபின், மூத்த அல்கிபியேட்சு (Alcibiades) மிலேத்தசுக்கு சென்றார், அங்கு அவர் ஒரு குறிப்பிட்ட ஆக்சியோச்சசு மகளை மணந்தார் என்று பிக்னெல் (Bicknell) கருதுகிறார். பின்பு அல்கிபியேட்சும், அவருடைய புதிய மனைவி மற்றும் அவரது இளைய சகோதரியான அசுபாசியா ஆகியோருடன் ஏதென்சுக்கு திரும்பினார். இந்த திருமணத்தின் முதல் குழந்தை ஆக்சியோச்சசு (Axiochus) (புகழ்பெற்ற அல்கிபியேட்சுவின் மாமா) மற்றும் இரண்டாவது குழந்தை அசுபாசியா என பெயரிடப்பட்டது என்று பிக்னெல் வாதிடுகிறார். அல்கிபியேட்சின் வீட்டுக்கு நெருக்கமான தொடர்புகளால் பெரிக்கிளீசு அசுபாசியாவை சந்தித்ததாக அவர் கூறுகிறார். மேலும் ஏதென்சில் இருக்கும் போது, அசுபாசியா, தத்துவஞானி அனாக்சகோரசு உடன் லிராவின் ஜேசன் விவகாரங்களை வைத்திருக்கலாம் என நம்பப்படுகிறது.[5]

சான்றுகள்

[தொகு]
  1. Ondřej Kaše, Thesis Dubletní výslovnost v angličtině ("Alternative Pronunciation in English") in Czech, 2013, p. 28.
  2. M. Henry, Prisoner of History, 9
  3. "Aspasia". www.livius.org (ஆங்கிலம்). 19 சூன் 2017. பார்க்கப்பட்ட நாள் 24 மார்ச் 2018. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. Aspasia Biography - Mar 1, 2018 [தொடர்பிழந்த இணைப்பு]
  5. Sue Blundell, Women in Ancient Greece, 1995
"https://ta.wikipedia.org/w/index.php?title=அசுபாசியா&oldid=3680322" இலிருந்து மீள்விக்கப்பட்டது