சியாக் சுல்தானகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சியாக் சுல்தானகம்
1725–1946
தலைநகரம்புவாந்தான், மெம்புரா, செனாபெலான், பெக்கான்பாரு, சியாக் ஸ்ரீ இந்திரபுரா
பேசப்படும் மொழிகள்மலாய்
சமயம்
இசுலாம்
அரசாங்கம்முடியாட்சி
சுல்தான் 
• 1725-1746
சுல்தான் முதலாம் அப்துல் ஜலீல் ரகமத் சா
• 1915-1949
சுல்தான் அல்-சையித் சரீப் இரண்டாம் காசிம் அப்துல் ஜலீல் சைபுத்தீன் (இரண்டாம் சரீப் காசிம்)
வரலாறு 
• நிறுவப்பட்டது
1725
1946
முந்தையது
பின்னையது
ஜொகூர் சுல்தானகம்
பகாருயோங்
இந்தோனேசியா
சியாக் சுல்தானும் அவரது மனைவியும் (1910-1939)

சியாக் சுல்தானகம் (இந்தோனேசியம்: (Kesultanan Siak Sri Inderapura) என்பது இன்றைய இந்தோனேசியாவின் ரியாவு மாநிலத்திலுள்ள சியாக் பிராந்தியத்தில் 1723 முதல் 1946 வரை நிலைத்திருந்த இசுலாமிய அரசாகும். இது பகாருயோங் இராச்சியத்தைச் சேர்ந்த இராஜா கெச்சிக் எனப்பட்ட சுல்தான் முதலாம் அப்துல் ஜலீல் ரகமத் சா என்பவரால் ஜொகூர் சுல்தானகத்தின் சிம்மாசனத்தைக் கைப்பற்றும் முயற்சி தோல்வியுற்ற பின்னர் தோற்றுவிக்கப்பட்டது.

1945 ஆகத்து 17-ஆம் திகதி இந்தோனேசிய சுதந்திரம் பிரகடனப்படுத்தப்பட்ட பின்னர், சியாக் சுல்தானகத்தின் கடைசி மன்னரான சுல்தான் இரண்டாம் சரீப் காசிம் தன்னுடைய அரசு இந்தோனேசியக் குடியரசுடன் இணைவதாக அறிவித்ததுடன் சியாக் சுல்தானகம் தனிநாடாயிருப்பது முடிவுக்கு வந்தது.

சியாக் சுல்தான்கள்[தொகு]

  1. சுல்தான் முதலாம் அப்துல் ஜலீல் ரஹ்மத் ஷாஹ் (1725–1746)
  2. சுல்தான் இரண்டாம் அப்துல் ஜலீல் ரஹ்மத் ஷாஹ் (1746–1765)
  3. சுல்தான் அல்துல் ஜலீல் ஜலாலுத்தீன் ஷாஹ் (1765–1766)
  4. சுல்தான் அப்துல் ஜலீல் அலாமுத்தீன் ஷாஹ் (1766–1780)
  5. சுல்தான் முகம்மது அலீ அப்துல் ஜலீல் முஅஸ்ஸம் ஷாஹ் (1780–1782)
  6. சுல்தான் யஹ்யா அப்துல் ஜலீல் முளப்பர் ஷாஹ் (17821784)
  7. சுல்தான் அல்-சையித் சரீப் அலீ அப்துல் ஜலீல் சைபுத்தீன் பாஅலவீ (1784–1810)
  8. சுல்தான் அல்-சையித் சரீப் இப்றாகீம் அப்துல் ஜலீல் கலீலுத்தீன் (1810–1815)
  9. சுல்தான் அல்-சையித் சரீப் இசுமாஈல் அப்துல் ஜலீல் ஜலாலுத்தீன் (1815–1854)
  10. சுல்தான் அல்-சையித் சரீப் முதலாம் காசிம் அப்துல் ஜலீல் சைபுத்தீன் (முதலாம் சரீப் காசிம் I, 1864–1889)
  11. சுல்தான் அல்-சையித் சரீப் ஹாசிம் அப்துல் ஜலீல் சைபுத்தீன் (1889–1908)
  12. சுல்தான் அல்-சையித் சரீப் இரண்டாம் காசிம் அப்துல் ஜலீல் சைபுத்தீன் (இரண்டாம் சரீப் காசிம்), (1915–1949)

மேலும் பார்க்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சியாக்_சுல்தானகம்&oldid=3905367" இலிருந்து மீள்விக்கப்பட்டது