தாந்த் புடவை
தாந்த் புடவை (Tant sari) என்பது வங்காளத்தில் பாரம்பரியமாக நெய்யப்படும் ஒரு புடவையாகும். இது வங்காளத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள வங்காளப் பகுதியில் இருந்து தோன்றியது. பொதுவாக வங்காளப் பெண்களால் பயன்படுத்தப்படுகிறது. இது பருத்தி நூல்களால் நெய்யப்பட்டு அதன் இலகுவான தன்மை மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றால் வேறுபடுகிறது. இது இந்திய துணைக் கண்டத்தில் வெப்பமான மற்றும் ஈரப்பதமான காலநிலைக்கு மிகவும் வசதியான புடவையாக கருதப்படுகிறது.[1]
வரலாறு
[தொகு]முகலாய சகாப்தத்தில் அரச வழிகாட்டுதலின் கீழ் தாந்த் (குறிப்பாக ஜாம்தானி மற்றும் மஸ்லின்) டாக்கா (வங்காளதேசம்) மற்றும் முர்சிதாபாத் (மேற்கு வங்காளம்) மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பிரபலமடைந்தது.[2] மன்செஸ்டரின் ஜவுளித் தொழிலைப் பாதுகாக்க பிரித்தானிய அரசாங்கம் இந்த கலையை அழிக்க முயன்றது. ஆனால் தாந்த் கலாச்சாரம் உயிர்வாழ முடிந்தது.
1947ஆம் ஆண்டு இந்தியப் பிரிவினையின் போது வங்காள மாகாணம் பிரிக்கப்பட்டதால், சில நெசவாளர்கள் மேற்கு வங்காளத்திற்கு குடிபெயர்ந்து அங்கு தங்கள் கைவினைக் கலையைத் தொடர்ந்தனர். இவ்வாறு தாந்த் நெசவாளர்கள் இப்போது வங்காளத்தின் இரு பகுதிகளிலும் காணப்படுகிறார்கள்.[3]
நெசவு முறை
[தொகு]ஆரம்பத்தில் பாரம்பரியமாக கைத்தறியில் இப்புடவையை நெசவு செய்து வந்தனர். இன்று பெரும்பாலும் விசைத்தறிகளால் நெசவு செய்யப்படுகின்றன.
கருப்பொருள்கள் மற்றும் மையக்கருத்து
[தொகு]வழக்கமான தாந்த் புடவையில் பல்வேறு வகையான மலர்கள் மற்றும் பிற கலைக் கருத்தாக்கங்களைப் பயன்படுத்தி நெய்யப்படுகிறது. பிரபலமான பாரம்பரிய கருத்தாக்கங்களில் வண்டினங்கள், அரண்மனை, சந்திரன், மீன்கள், யானை, நீல வானம், நவர்த்தினங்கள், நட்சத்திரங்கள் மற்றும் பூக்கள் போன்றவை. அச்சிடப்பட்ட, கையால் வரையப்பட்ட மற்றும் பூத்தையல் செய்யப்பட்ட வடிவங்களும் இடம் பெறுகின்றன.[3] சமீபத்தில் சூரியனின் பல்வேறு வடிவமைப்புகளுடன் நவீன கலை உள்ளிட்ட பல்வேறு கருக்கள் இந்த புடவையில் சித்தரிக்கப்படுகின்றன.[4] தாந்த் புடவை வண்ணமயமான வடிவமைப்புடன் வருகிறது. அதன் ஓரங்கள் எளிதில் கிழிந்துவிடுவதால் தடிமனாக நெய்யப்படுகின்றன.[5]
முக்கியத்துவம்
[தொகு]சிறந்த தாந்த் ஆடைகளாக கருதப்படும் பாரம்பரிய கலையான ஜாம்தானி நெசவு யுனெஸ்கோவால் மனிதகுலத்தின் அழிந்துவரும் கலாச்சார பாரம்பரியமாக அறிவிக்கப்பட்டது
வங்காளதேசம் மற்றும் மேற்கு வங்காளத்தின் சாதாரண வங்காள பெண்களுடன், பல முக்கிய வங்காள பெண் பிரமுகர்களும் தங்கள் வழக்கமான ஆடையாக தாந்த் புடவையை அணிய விரும்புகிறார்கள். வங்காளதேசத்தின் முன்னாள் பிரதமர் சேக் அசீனா, நாடாளுமன்ற சபாநாயகர் ஷிரின் ஷர்மின் சவுத்ரி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் இதில் குறிப்பிடத்தக்கவர்கள்.
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Subodh Kapoor (1 July 2002). The Indian Encyclopaedia. Cosmo Publications. p. 6422. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7755-257-7. பார்க்கப்பட்ட நாள் 7 November 2012.
- ↑ G. K. Ghosh; Shukla Ghosh (1995). Indian Textiles: Past and Present. APH Publishing. pp. 39–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7024-706-7.
- ↑ 3.0 3.1 "Parinita – tant saree background".
- ↑ "Nutan Fulia Tantubay Samabay samity Ltd".
- ↑ Bimcy, Sr; Sisily, Sr. Bincy & Sr; Charlotte. Spotlight Social Studies 4. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7172-516-8.