தெம்மினிக் திரகோபன்
தெம்மினிக் திரகோபன் | |
---|---|
ஆண் | |
பெண் | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | பேசினிடே
|
பேரினம்: | திரகோபன்
|
இனம்: | தி. தெம்மினிக்
|
இருசொற் பெயரீடு | |
திரகோபன் தெம்மினிக் (கிரே, 1831) |
தெம்மினிக் திரகோபன் (Tragopan Temminckii) என்பது நடுத்தர அளவிலான, தோராயமாக 64 செ. மீ. நீளமுள்ள, திரகோபன் சிற்றினம் ஆகும்.
உடலமைப்பு
[தொகு]ஆண் என்பது வெள்ளை புள்ளிகள் கொண்ட இறகுகளுடன், கருப்பு அலகு மற்றும் இளஞ்சிவப்பு கால்கள் கொண்ட சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறப் பறவை ஆகும். ஆண்கள் நீல முகத் தோல், ஊதப்பட்ட அடர் நீல நிறப் தசை மடிப்பு மற்றும் கொம்புகளைக் கொண்டது. பெண் பறவைகள் நீல வட்டக் கண் தோலுடன் வெள்ளை புள்ளிகளுடன் பழுப்பு நிறத்தில் உள்ளன.
இதன் தோற்றம் வன திரகோபனை ஒத்திருக்கிறது. ஆனால் பிந்தைய இனங்களைப் போலல்லாமல் இது சிவப்பு மேல் உடல் இறகுகளையும் ஆரஞ்சு கழுத்தினையும் கொண்டுள்ளது. முக்கியமாக இது பெர்ரி, புல் மற்றும் தாவரங்களை உணவாக உட்கொள்கின்றது.
பர்வல்
[தொகு]தெம்மினிக் திராகோபன் தொலைதூர வடகிழக்கு இந்தியா, மத்தியச் சீனா, வடக்கு மியான்மர் மற்றும் வடமேற்கு தோங்கின் மலைகள் முழுவதும் காணப்படுகிறது.
பரந்த மற்றும் இதன் பெரிய அளவிலான வாழ்விட வரம்பு முழுவதும் ஒரு பொதுவான சிற்றினமான தெம்மிங்க் திராகோபான், பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியலில் அச்சுறுத்தப்பட்ட உயிரினமாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பறவையின் பொதுவான பெயர் இலத்தீன் இரு சொற்பெயர் இடச்சு இயற்கை ஆர்வலர் கோயன்ராட் ஜேக்கப் தெம்மிங்கின் நினைவாக இடப்பட்டுள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ BirdLife International (2016). "Tragopan temminckii". IUCN Red List of Threatened Species 2016: e.T22679169A92805480. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22679169A92805480.en. https://www.iucnredlist.org/species/22679169/92805480. பார்த்த நாள்: 11 November 2021.