உள்ளடக்கத்துக்குச் செல்

வன திரகோபன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வன திரகோபன்
பெண்
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேசினிடே
பேரினம்:
திராகோபன்
இனம்:
தி. சத்யரா
இருசொற் பெயரீடு
திராகோபன் சத்யரா
(லின்னேயஸ், 1758)
வேறு பெயர்கள்

மெலியாகிரிசு சத்யரா லின்னேயஸ், 1758

வன திரகோபன் என்பது செங்கொம்பு பகட்டுக்கோழி என்றும் அழைக்கப்படும் திராகோபன் சத்யரா என்பது இந்தியா, திபெத்து, நேபாளம் மற்றும் பூட்டானின் இமயமலை பகுதிகளில் காணப்படும் ஒரு பகட்டுக்கோழி சிற்றினம் ஆகும். இவை ஓக் மற்றும் ரோடோடென்ட்ரான் காடுகளில் அடர்ந்த மற்றும் மூங்கில் புதர்ப் பகுதிகளில் வாழ்கின்றன. இவை கோடையில் 2400 முதல் 4200 மீட்டர் வரையிலும், குளிர்காலத்தில் 1800 மீட்டர் உயரப் பகுதிகளிலும் காணப்படும். ஆண் பறவை சுமார் 70 செ. மீ. நீளம் வரை வளரக்கூடியது.

இனச்சேர்க்கைக் காலத்தில், ஆண் பறவையின் தலைப்பகுதியில் நீல நிறத் தசைச் தொங்கள் வளர்க்கின்றது. இதனை இவை கொம்பு போன்று காட்சிப்படுத்தி பாறையின் பின்னால் ஒளிந்து கொண்டு, பெண் பறவையின் வருகையினை எதிர்பார்த்துக் காத்திருக்கும். பெண் பறவைகள் வரும் போது இவை இத்தசையினை கொம்பு போலக் காட்சிப்படுத்தி பெண் பறவையினை கவரும் செயலினைச் செய்யும்..[2]

பெண் பறவைகள் பழுப்பு நிறத்தில் காணப்படும். ஆண் பறவைகள் பொதுவாக நீலம், கருப்பு மற்றும் வெள்ளை புள்ளிகளுடன் கூடிய சுருக்கங்களுடன் செந்நிறத்திலிருக்கும்.

திரகோபன்களின் மிகக் குறைந்த அச்சுறுத்தல் இருந்தபோதிலும், வன திராகோபன்கள் இன்னும் பல அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றன. இந்த சிற்றினங்கள் மிதமான சிறிய எண்ணிக்கையினைக் கொண்டிருப்பதாகக் கருதப்படுகிறது. இது இதன் வரம்பின் பெரும்பகுதியில் வேட்டையாடுதல் மற்றும் வாழிட இழப்பு போன்ற அச்சுறுத்தலுக்கு உட்பட்டது.[3]

வகைப்பாட்டியல்

[தொகு]

1750ஆம் ஆண்டில் இங்கிலாந்து இயற்கை ஆர்வலர் ஜார்ஜ் எட்வர்ட்டு தனது பொதுவான பறவைகளின் இயற்கை வரலாறு என்ற புத்தகத்தின் மூன்றாவது தொகுதியில் ஒரு விளக்கப்படத்துடன் வன திரகோபானின் விளக்கத்தையும் சேர்த்தார். இவர் "தி ஹார்ன்டு இந்தியன் பெசன்ட்" என்ற ஆங்கிலப் பெயரைப் பயன்படுத்தினார். எட்வர்டால் வரையப்பட்ட விளக்கப்படம் ஆல்ககாலில் பாதுகாக்கப்பட்ட பறவையின் தலை இலண்டனில் உள்ள மருத்துவர் ரிச்சர்ட் மீட் அனுப்பிய முழு பறவையின் வரைபடத்தை அடிப்படையாகக் கொண்டது. இந்த மாதிரி வங்காளத்திலிருந்து வந்ததாக எட்வர்ட்டு நம்பினார். ஆனால் இந்த மாதிரி நேபாளத்திலிருந்து வந்திருக்கலாம்.

1758ஆம் ஆண்டில் சுவீடன் இயற்கை ஆர்வலர் கரோலல் லின்னேயஸ் தனது சிஸ்டமா நேச்சுராவின் பத்தாவது பதிப்பினைப் புதுப்பித்தபோது, வன திராகோபனை காட்டு வான்கோழியுடன் மெலியாக்ரிசு பேரினத்தில் வைத்தார். லின்னேயஸ் ஒரு சுருக்கமான விளக்கத்தை உள்ளடக்கிய, மெலியாக்ரிசு சத்தியிரா என்ற இருசொற் பெயரை உருவாக்கி, எட்வர்டின் படைப்புகளை மேற்கோள் காட்டினார். வன திராகோபன் 1829ஆம் ஆண்டில் பிரெஞ்சு இயற்கை ஆர்வலர் ஜார்ஜசு குவியரால் அறிமுகப்படுத்தப்பட்ட திராகோபனில் உள்ளது.[4] இந்த சிற்றினம் ஒரே ஒரு உயிரிலகு மாதிரியானது. இதில் எந்த துணையினமும் அங்கீகரிக்கப்படவில்லை. உரோமானிய எழுத்தாளர்களான பிளினி மற்றும் பாம்போனியசு மேலா ஆகியோரால் குறிப்பிடப்பட்ட புராணக் கொம்பு ஊதா தலை பறவையான டிராகோபன்="148" href="./Latin" id="mwQA" rel="mw:WikiLink" title="Latin">லத்தீன் திராகோபானிலிருந்து இந்த பேரினத்தின் பெயர் வந்தது. குறிப்பிட்ட பெயரான சதைரா என்பது இலத்தீன் வார்த்தையான சடிரசு என்பதிலிருந்து வந்தது. இதன் பொருள் "சடைர்" என்பது. இது பெரும்பாலும் கொம்புகளுடன் சித்தரிக்கப்படும் ஒரு உரோமானிய தெய்வத்தினைக் குறிக்கின்றது.

படங்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. BirdLife International (2016). "Tragopan satyra". IUCN Red List of Threatened Species 2016: e.T22679157A92804874. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22679157A92804874.en. https://www.iucnredlist.org/species/22679157/92804874. பார்த்த நாள்: 12 November 2021. 
  2. Smith, C. Barnby (1912). "The display of the Satyr Tragopan Pheasant, Ceriornis satyra". Avicultural Magazine 3 (6): 153–155. https://archive.org/stream/avicultural3319111912avic#page/153/mode/1up. 
  3. "Satyr Tragopan (Tragopan satyra) - BirdLife species factsheet". Birdlife.org. பார்க்கப்பட்ட நாள் 30 June 2018.
  4. Gill, Frank; Donsker, David; Rasmussen, Pamela, eds. (July 2021). "Pheasants, partridges, francolins". IOC World Bird List Version 11.2. International Ornithologists' Union. பார்க்கப்பட்ட நாள் 11 October 2021.

வெளி இணைப்புகள்

[தொகு]
  • பொதுவகத்தில் வன திரகோபன் தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வன_திரகோபன்&oldid=3980714" இலிருந்து மீள்விக்கப்பட்டது