மேஷ சங்கராந்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மேஷ சங்கராந்தி
Mesha zodiac sign in Jaipur, India
பிற பெயர்(கள்)சங்கராந்தி
நாள்மேஷ மாதத்தின் முதல் நாள் (14 ஏப்ரல்) (நெட்டாண்டில் மட்டும் 13 ஏபரல்)
நிகழ்வுஆண்டிற்கு ஒரு முறை

மேஷ சங்கராந்தி (Mesha Sankranti or Mesha Sankramana or Hindu Solar New Year) சூரிய நாட்காட்டியின் படி ஆண்டின் முதல் நாள் ஆகும். இது சித்திரை மாத்த்தின் (மேஷ ராசி) முதல் நாளாகும். இது சூரியன், மேஷ ராசியில் புகும் நாளாகும். [1] இந்து நாட்காட்டியின் படி இந்து சமயத்தினருக்கு முக்கிய நாளாகும். ஆங்கில நாட்காட்டியின் படி, மேஷ சங்கராந்தி பொதுவாக 14 ஏப்ரல் அன்றும், நெட்டாண்டில் மட்டும் 13 ஏபரல் அன்றும் வரும். தமிழர்கள் இந்நாளை சித்திரைப் புத்தாண்டாக கொண்டாடுகின்றனர். மேலும் சூரிய நாட்காட்டியை கடைபிடிக்கும் அசாமியர்கள், வங்காளிகள், பஞ்சாபிகள், மலையாளிகள், ஒடியா மக்கள் மேஷ சங்கராந்தி நாளை புத்தாண்டாக கொண்டாடுகின்றனர்[2]

இதற்கு இணையாக பௌத்த நாட்காட்டியின் அடிப்படையில் தாய்லாந்து, லாவோஸ், கம்போடியா, மியான்மர்,இலங்கை மற்றும் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் மேஷ சங்கராந்தி நாளை புத்தாண்டு நாளாக கொண்டாடுகின்றனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Robert Sewell; Śaṅkara Bālakr̥shṇa Dīkshita; Robert Schram (1996). Indian Calendar. Motilal Banarsidass Publishers. பக். 31–32. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-208-1207-9. https://books.google.com/books?id=dbAZAAAAYAAJ. 
  2. Robert Sewell; Śaṅkara Bālakr̥shṇa Dīkshita; Robert Schram (1996). Indian Calendar. Motilal Banarsidass Publishers. பக். 29–35. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-208-1207-9. https://books.google.com/books?id=dbAZAAAAYAAJ. 

வார்ப்புரு:New Year by Calendar

"https://ta.wikipedia.org/w/index.php?title=மேஷ_சங்கராந்தி&oldid=3856905" இலிருந்து மீள்விக்கப்பட்டது