சந்த் கௌர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சந்த் கௌர்
சீக்கிய மகாராணி
சீக்கியப்பேரசின் ஆட்சிப் பிரதிநிதி
சீக்கியப் பேரரசின் மகாராணி சந்த் கௌர்.
சீக்கியப் பேரரசின் மகாராணி
பதவியில்1 செப்டம்பர் 1839 – 8 அக்டோபர் 1839
சீக்கியப் பேரரசின் அரசப் பிரதிநிதி
அரசுப்பிரதிநிதி5 நவம்பர் 1840 – 18 சனவரி 1841
முடிசூட்டு விழா2 திசம்பர் 1840
இலாகூர் கோட்டை, லாகூர்
முன்னிருந்தவர்நௌ நிஹால் சிங்
பின்வந்தவர்சேர் சிங்
துணைவர்கரக் சிங்
வாரிசு(கள்)நௌ நிஹால் சிங்
அரச குலம்சந்து [1]
தந்தைசர்தார் ஜெய்மால் சிங்
பிறப்பு1802
பத்தேகர் சூரியன்,[1] சீக்கியப் பேரரசு
(தற்போது குர்தாஸ்பூர் மாவட்டம், பஞ்சாப், இந்தியா)
இறப்பு11 சூன் 1842 (வயது 40)
லாகூர், சீக்கியப் பேரரசு
(தற்போதைய பஞ்சாப், பாக்கித்தான்)
சமயம்சீக்கியம்

சந்த் கவுர் (Chand Kaur;1802 - 11 சூன் 1842) சீக்கிய பேரரசின் மகாராணி ஆவார். இவரது கணவர் கரக் சிங், ஒரே மகன் நவ் நிஹால் சிங் ஆகிய இருவரும் இறந்த பிறகு, இவர் நௌ நிஹால் சிங் மற்றும் அவரது கர்ப்பிணி விதவை சாஹிப் கௌர் ஆகியோரின் பிறக்காத குழந்தைக்காக தன்னைஅரசப் பிரதிநிதியாக அறிவித்துக் கொண்டார். சாஹிப் கௌர் ஒரு இறந்த மகனைப் பெற்றபோது இவர் தனது கோரிக்கையை கைவிட்டார். மேலும், போட்டியாளர் ஷேர் சிங்கை எதிர்த்து இலாகூரில் நடந்த வெற்றிகரமான தாக்குதலுக்கு தலைமை தாங்கினார்.[2] தனது வேலைக்காரர்களால் 11 சூன் 1842 அன்று படுகொலை செய்யப்பட்டார்.[1]

சுயசரிதை[தொகு]

சந்த் கௌர், பஞ்சாப்பின் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள பதேகர் சூரியனில் ஒரு ஜாட் சீக்கிய சந்து குடும்பத்தில் 1802 இல் பிறந்தார்.[1] இவருடைய தந்தை சர்தார் ஜெயமால் சிங், கன்ஹையா சிற்றரசின் தலைவராவார். பிப்ரவரி 1812 இல், தனது பத்து வயதில், மகாராஜா ரஞ்சித் சிங்கின் மூத்த மகன் குன்வர் கரக் சிங்கை மணந்தார். இவர்களின் மகன், நவ் நிஹால் சிங், 23 பிப்ரவரி 1821 இல் பிறந்தார். இவர் மார்ச் 1837 இல் ஷாம் சிங் அடரிவாலாவின் மகள் சாஹிப் கௌரை மணந்தார்.

மகனின் ஆட்சி[தொகு]

27 சூன் 1839 இல் ரஞ்சித் சிங்கின் மரணத்திற்குப் பிறகு, கரக் சிங் அவரது வாரிசாகவும், ராஜா தியான் சிங் டோக்ரா அவரது ஆளுநராகவும் நியமிக்கப்பட்டனர்.[3] புதிய மன்னன் அக்டோபர் 1839 வரை சில மாதங்கள் மட்டுமே ஆட்சி செய்தார். அவருடைய மகன் நாவ் நிஹால் சிங் மற்றும் தியான் சிங் ஆகியோரின் சதித்திட்டத்தில் அவர் அரியணையிலிருந்து தூக்கியெறியப்பட்டார். இலாகூரில் சிறையில் அடைக்கப்பட்ட அவர் நவம்பர் 1840 இல் மெதுவாக கொல்லும் நஞ்சு அளிக்கப்பட்டு கொல்லப்பட்டார்.[4] தியான் சியாவின் உத்தரவின் பேரில் நஞ்சு கொடுக்கப்பட்டதாக சமகால வரலாற்றாசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.[5]

நவம்பர் 5 ஆம் தேதி தனது தந்தையின் தகனத்திலிருந்து திரும்பிய நவ் நிஹால் சிங், குலாப் சிங்கின் மகன் உதாம் சிங் மற்றும் தியான் சிங்கின் மருமகன் ஆகியோருடன் ஹசூரி பாக் வாயில் வழியாக சென்றார். அவர்கள் வாயில் வழியாக செல்லும்போது மேலே இருந்து கற்களை வீசி உதாம் சிங்கைக் கொன்றனர். இளவரசரை காயப்படுத்தின. சில அடிகள் பின்தங்கிய தியான் சிங் உடனடியாக இளவரசனை கோட்டைக்குள் அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்தார். கோட்டைக்குள் வேறு யாரும் அனுமதிக்கப்படவில்லை, அவரது தாயும் நண்பர்களும் அவரைப் பார்க்க அனுமதித்தபோது, அவர் தலையில் பலத்த காயங்களுடன் இறந்தார்.[6]

இறப்பு[தொகு]

கடைசியாக இவர் இலாகூரில் உள்ள தனது மறைந்த மகனின் அரண்மனைக்குச் சென்று ஓய்வு பெற்று 900,000 ரூபாய் ஓய்வூதியமாகப் பெற்றார். சிறிது காலம் லாகூரில் உள்ள தனது மறைந்த மகனின் அரண்மனையில் வசித்து வந்தார். இருப்பினும் இவரது எதிரிகள் இவரை ஒரு அச்சுறுத்தலாகவே கருதினர். எனவே 1842 சூன் 11 அன்று இவர் வேலைக்காரர்களால் மரக்கட்டையால் அடித்து கொல்லப்பட்டார்.[1]

இவரது சமாதி லாகூரில் உள்ள இஸ்லாமியா கல்லூரியின் மைதானத்தில் உள்ளது.[7]

மேற்கோள்கள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
சந்த் கௌர்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Harbans Singh, Editor-in-Chief. "Encyclopaedia of Sikhism". Punjab University Patiala. Archived from the original on 12 September 2016. பார்க்கப்பட்ட நாள் 2 February 2013. {{cite web}}: |first1= has generic name (help)

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 "Chand Kaur". Encyclopaedia of Sikhism. Punjab University, Patiala. Bhagat Singh. "Chand Kaur". Encyclopaedia of Sikhism. Punjab University, Patiala.
  2. "Chand Kaur".. Punjab University, Patiala. 
  3. "Connecting the Dots in Sikh History". Institute of Sikh Studies. Archived from the original on 5 March 2016. பார்க்கப்பட்ட நாள் 30 செப்டம்பர் 2021. {{cite web}}: Check date values in: |access-date= (help); Unknown parameter |= ignored (help)
  4. "Kharak Singh, Maharaja (1801-1840)".. 
  5. "Nau Nihal Singh Kanvar (1821-1840)".. 
  6. Harbans Singh Noor (February 2004). "Death of Prince Nau Nihal Singh". Sikh Spectrum. Archived from the original on 26 June 2013.
  7. "Nakain Kaur, Chand Kaur and Sahib Kaur's Samadhis". Lahore Sites of Interest. Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2021-09-30.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்த்_கௌர்&oldid=3929565" இலிருந்து மீள்விக்கப்பட்டது