சலிமா இக்ரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சலிமா இக்ரம்
2015இல் சலிமா இக்ரம்
பிறப்பு17 மே 1965 (1965-05-17) (அகவை 58)
லாகூர், பாக்கித்தான்
துறைஎகிப்தியவியல்
பணியிடங்கள்கெய்ரோவிலுள்ள அமெரிக்கப் பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்
இணையதளம்
salimaikram.com

சலிமா இக்ரம் (Salima Ikra) (பிறப்பு 17 மே 1965) கெய்ரோவிலுள்ள அமெரிக்க பல்கலைக்கழகத்தில் எகிப்தியவியல் பேராசிரியராக இருக்கிறார். பல எகிப்திய தொல்லியல் திட்டங்களில் பங்கேற்றவரும், எகிப்திய தொல்லியல் பற்றிய பல புத்தகங்களை எழுதியவரும், பல்வேறு பத்திரிகைகளுக்கு பங்களிப்பவரும், தொடர்புடைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் விருந்தினரும் ஆவார்.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

இக்ரம் 1965இல் பாக்கித்தானின் லாகூரில் பிறந்தார். இவர் ஒன்பது வயதில் எகிப்துக்கு வந்தது எகிப்தியலில் ஆர்வம் காட்ட வழிவகுத்தது.[1][2]

கல்வி[தொகு]

இக்ரம் பிரைன் மவ்ர் கல்லூரியில் எகிப்தியலையும் தொல்பொருளையும் பயின்றார். பாரம்பரியம் மற்றும் அண்மைக் கிழக்கு தொல்பொருள் மற்றும் வரலாற்றில் பட்டம் பெற்றார். கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்தில் தனது படிப்பைத் தொடர்ந்த இவர், அங்கு தனது முதுதத்துவமாணி பெற்றார். மேலும், எகிப்தியல் மற்றும் அருங்காட்சியக ஆய்வுகளில் முனைவர் பட்டமும் பெற்றார்.[3] இவரது முனைவர் பட்ட ஆய்வறிக்கை 'சாய்ஸ் வெட்டுக்கள்: பண்டைய எகிப்தில் இறைச்சி உற்பத்தி' என்ற தலைப்பில் இருந்தது.

தொழில்[தொகு]

கெய்ரோவில் வசிக்கும் இக்ரம், கெய்ரோவில் உள்ள அமெரிக்க பல்கலைக்கழகத்தில் எகிப்தியலையும் தொல்பொருளையும் கற்பிக்கிறார். அங்கு இவர் எகிப்தியலின் பேராசிரியராக உள்ளார்.[3] 2017ஆம் ஆண்டில், இவர் வீழ்ச்சி காலத்தில் யேல் பல்கலைக்கழகத்தில் வருகை பேராசிரியராக இருந்தார்.[4] இவர் 2017ஆம் ஆண்டில் அமெரிக்க கலை மற்றும் அறிவியல் கழகத்தில் சர்வதேச கௌரவ உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][5]

எகிப்து அருங்காட்சியகத்தில் விலங்கு மம்மி திட்டத்தின் இணை இயக்குநராக இருக்கிறார்.[6] 2001 முதல், 'வடக்கு கார்கா ஒயாசிஸ் ஆராய்ச்சி' என்ற திட்டத்தை கொரின்னா ரோஸி என்பவருடன் உதவியோடு இயக்கினார்.[7][8] மேலும், வடக்கு கார்கா ஒயாசிஸ் தர்ப் அன் அமுர் ஆராய்ச்சியை மன்னர்களின் சமவெளியில் தொடங்கினார்.[4] கெய்ரோவில் உள்ள நெதர்லாந்து-பிளெமிஷ் நிறுவனத்தின் ஆண்ட்ரே வெல்ட்மெய்ஜருடன் பண்டைய எகிப்து தோல் வேலை திட்டத்திலும் (ஏஇஎல்பி) பணியாற்றியுள்ளார்.[9][10]

ஊடகப் பணி[தொகு]

இவர் ஊடகச் செயல்பாடுகளில் ஆர்வமாக இருக்கிறார். எஜிப்ட் டுடே என்ற மாதாந்திர இதழிலும், நேஷனல் ஜியோகிராஃபிக் இதழிலும் எகிப்தியல் பற்றிய கட்டுரைகளுக்கு பங்களிக்கிறார்.[11][12][13][14] கேஎம்டி என்ற நவீன எகிப்தியல் பத்திரிகையிலும் இவர் எழுதியுள்ளார்.[15][16] பொது ஒளிபரப்புச் சேவை,[17] சேனல் 4,[18] டிஸ்கவரி தொலைக்காட்சி,[19] ஹிஸ்டரி தொலைக்கட்சி,[20] நேஷனல் ஜியோகிராஃபிக் தொலைக்காட்சி,[21] பிபிசி ஆகியவற்றிற்கான ஆவணத் தொடர்கள் மற்றும் சிறப்புகளில் இவர் தோன்றியுள்ளார்.[22][23] யுனிவர்சல் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தி மம்மி என்றத் திரைப்படத்தின் ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார். 

2018 ஆம் ஆண்டில், இக்ரம் டெனெர்ஃப் (எசுப்பானியா), சர்வதேச மாநாட்டில் பங்கேற்றார். இந்த மாநாட்டின் போது, உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மம்மிகளின் கண்காட்சி இடம்பெற்றது. டெனெர்ஃப் தீவின் பண்டைய குடிமக்களின் குவான்ச் மம்மிகள் உட்பட, எகிப்திய மம்மிகளைப்எகிப்திய மம்மிகளைப் போன்ற ஒரு நுட்பத்துடன் இதில் காட்சிக்கு வைக்கப்பட்டது.[24]

விருதுகள்[தொகு]

  • கெய்ரோவில் உள்ள அமெரிக்க பல்கலைக்கழகத்தால் ஆராய்ச்சி விருது (2006).[25]

வெளியிடப்பட்ட படைப்புகள்[தொகு]

இளம் வாசகர்களுக்கான்ப் படைப்புகள்[தொகு]

  • Egyptology (Amideast, 1997)
  • In Ancient Egypt: Gods and Temples (Los Altos, CA: Hoopoe Books Ltd., 1998)
  • In Ancient Egypt: Mummies and Tombs (Los Altos, CA: Hoopoe Books Ltd., 1998)
  • Pharaohs (Amideast, 1997)
  • Land and People (Amideast, 1997)

மேற்கோள்கள்[தொகு]

  1. "Dr. Salima Ikram, Faunal Analyst - Theban Mapping Project". thebanmappingproject.com. Archived from the original on மார்ச் 12, 2014. பார்க்கப்பட்ட நாள் April 19, 2010. {{cite web}}: Check date values in: |archive-date= (help); Unknown parameter |= ignored (help)
  2. 2.0 2.1 "Salima Ikram Elected to American Academy of Arts and Sciences, Visiting Professor at Yale | The American University in Cairo". www.aucegypt.edu. பார்க்கப்பட்ட நாள் 2019-09-02.
  3. 3.0 3.1 "Salima | The American University in Cairo". www.aucegypt.edu. பார்க்கப்பட்ட நாள் 2019-09-02.
  4. 4.0 4.1 "Salima Ikram | Near Eastern Languages & Civilizations". nelc.yale.edu (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-09-02.
  5. "Salima Ikram". American Academy of Arts & Sciences (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-09-03.
  6. "Animal Mummies in the Cairo Museum". animalmummies.com. Archived from the original on May 10, 2000. பார்க்கப்பட்ட நாள் April 19, 2010.
  7. "Caring for the Dead". archaeology.org. பார்க்கப்பட்ட நாள் April 19, 2010.
  8. "North Kharga Oasis Survey". www.aucegypt.edu (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-09-03.
  9. Marchant, Jo (2011). "Ancient Egyptian chariot trappings rediscovered" (in en). Nature News. doi:10.1038/nature.2011.9388. http://www.nature.com/news/ancient-egyptian-chariot-trappings-rediscovered-1.9388. 
  10. "Old Kingdom leather fragments reveal how ancient Egyptians built their chariots - Ancient Egypt - Heritage - Ahram Online". english.ahram.org.eg. பார்க்கப்பட்ட நாள் 2019-09-02.
  11. "Illustrating Egypt's Wildlife". EgyptToday. பார்க்கப்பட்ட நாள் 2019-09-02.
  12. "The great pyramid". EgyptToday. பார்க்கப்பட்ட நாள் 2019-09-02.
  13. "Sacred Gold". EgyptToday. பார்க்கப்பட்ட நாள் 2019-09-02.
  14. "Curse Of The Mummy". www.nationalgeographic.com.au. பார்க்கப்பட்ட நாள் 2019-09-02.
  15. "Kmt Vol. 5 No. 1". www.kmtjournal.com. பார்க்கப்பட்ட நாள் 2019-09-02.
  16. "Kmt Vol. 5 No. 2". www.kmtjournal.com. பார்க்கப்பட்ட நாள் 2019-09-02.
  17. Desk, TV News. "Liev Schreiber to Narrate PBS's Global Series CIVILIZATIONS". BroadwayWorld.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-09-02.
  18. "Tutankhamun: The Mystery of the Burnt Mummy". Egypt Exploration Society (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-09-02.
  19. "Egypt's New Tomb Revealed : Programs : Discovery Channel : Discovery Press Web". press.discovery.com. பார்க்கப்பட்ட நாள் 2019-09-02.
  20. "Egyptology's New Frontier - Archaeology Magazine Archive". archive.archaeology.org. பார்க்கப்பட்ட நாள் 2019-09-02.
  21. Nature, Laura Geggel 2016-03-31T18:10:07Z Human. "Morgan Freeman Delves into 'The Story of God' in Nat Geo Special". livescience.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-09-02.{{cite web}}: CS1 maint: numeric names: authors list (link)
  22. "BBC Four - The Man Who Shot Tutankhamun". BBC (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-09-02.
  23. "70 million animal mummies: Egypt's dark secret". BBC. https://www.bbc.com/news/science-environment-32685945. 
  24. Canarias presume de momias en el congreso ‘Atanathos’
  25. "Awards and Honors | The American University in Cairo". www.aucegypt.edu. பார்க்கப்பட்ட நாள் 2019-09-03.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சலிமா_இக்ரம்&oldid=3908841" இலிருந்து மீள்விக்கப்பட்டது