குக் தீவுகள்
குக் தீவுகள் Kūki 'Āirani | |
---|---|
கொடி | |
நாட்டுப்பண்: Te Atua Mou E God is Truth | |
தலைநகரம் | Avarua |
பெரிய நகர் | தலைநகரம் |
ஆட்சி மொழி(கள்) | ஆங்கிலம் குக் தீவு மஓரி |
மக்கள் | குக் தீவினர் |
அரசாங்கம் | அரசியலமைப்பு முடியாட்சி |
• அரச தலைவர் | அரசி இரண்டாம் எலிசபேத் |
• அரசியின் பிரதிநிதி | Sir Frederick Goodwin |
• பிரதமர் | ஜிம் மருரை |
இணைக்கப்பட்ட நாடு | |
• சுயாட்சி தன்னிச்சையாக நியூசிலாந்துடன் இணைந்துள்ளது | 4 August 1965 |
பரப்பு | |
• மொத்தம் | 236 km2 (91 sq mi) (209வது) |
மக்கள் தொகை | |
• Mar 2006 மதிப்பிடு | 18,700 (218வது (2005)) |
• 2001 கணக்கெடுப்பு | 18,027 |
• அடர்த்தி | 76/km2 (196.8/sq mi) (117வது) |
மொ.உ.உ. (கொ.ஆ.ச.) | 2005 மதிப்பீடு |
• மொத்தம் | $183.2 மில்லியன் (தரமில்லை) |
• தலைவிகிதம் | $9,100 (தரமில்லை) |
நாணயம் | நியூசிலாந்து டாலர் (குக் தீவுகள் டாலர்) (NZD) |
நேர வலயம் | ஒ.அ.நே-10 |
அழைப்புக்குறி | 682 |
இணையக் குறி | .ck |
குக் தீவுகள் தன்னிச்சையாக நியூசிலாந்துடன் இணைந்துக் காணப்பட்டும் சுயாட்சி நாடாளுமன்ற மக்களாட்சியாகும். தென் பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள குக்தீவுகளின் 15 சிறிய தீவுகள் மொத்தம் 240 சதுர கிலோமீட்டர் (92.7 சதுர மைல்) பரப்பளவைக் கொண்டுள்ளன. குக் தீவுகளுக்கான பிரத்தீயே பொருளாதார வலயம் 1.8 மில்லியன் சதுர கிலோமீட்டர் (0.7 மில்லியன் சதுர மைல்) பரப்பளவைக் கொண்டதாகும்.[1]
முக்கிய மக்கள் குடியிருப்பு மையங்கள் ரரொடொங்கா (Rarotonga) தீவில் அமைந்துள்ளன குக்தீவுகளின் பன்னாட்டு விமான நிலையமும் ரரொடொங்கா தீவில் அமைந்துள்ளன. குக் தீவு மக்ககளின் முக்கிய குடியேற்றங்கள் நியூசிலாந்திலும் அமைந்துள்ளது முக்கியமாக நியூசிலாந்தின் வட தீவில் 2006 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் போது 58,008 பேர் தன்னிச்சையாக குக் தீவுகளின் மஓரி இனத்தவராக தம்மை பதிவு செய்துள்ளனர்.[2]
2006 ஆம் ஆண்டு 90,000 பேர் உல்லாசப்பிரயானிகளாக இங்கு வந்துள்ளனர், உல்லாசபிரயான கைத்தொழில் நாட்டின் முக்கிய வருவாய் மூலமாகும். கடல்சார் உற்பத்திகள், பழங்கள், முத்துக்கள் ஏற்றுமதியும் வெளிநாட்டு வங்கி வைப்பு வருமானங்களும் ஏனைய முக்கிய வருவாய் மூலங்களாகும்.
குக் தீவுகளின் பாதுகாப்புக்கு நியுசிலாந்து பொறுப்பாகும். எனினும் இது குக் தீவுகளின் யாப்புக்குட்பட்டு குக் தீவுகளின் கோரிக்கையின் பேரிலேயே மேற்கொள்ளப்படலாம். அண்மைக்காலமாக குக் தீவுகள் கட்டற்ற வெளிநாட்டுக் கொள்கையை கைக்கொண்டு வருகிறது.
குறிப்புகள்
[தொகு]- ↑ A View from the Cook Islands SOPAC
- ↑ "QuickStats About Culture and Identity - Pacific Peoples". 2006 Census. Statistics New Zealand. Archived from the original on 2007-08-29. பார்க்கப்பட்ட நாள் 2007-06-12.
வெளியிணைப்புகள்
[தொகு] விக்சனரி விக்சனரி
நூல்கள் விக்கிநூல்
மேற்கோள் விக்கிமேற்கோள்
மூலங்கள் விக்கிமூலம்
விக்கிபொது
செய்திகள் விக்கிசெய்தி
- Cook Islands Government பரணிடப்பட்டது 2009-03-21 at the வந்தவழி இயந்திரம்
- Cook Islands Government (summary)
- Cook Islands Tourism Corporation
- Open Directory Project - Cook Islands directory category
- Comprehensive Cook Islands site with news section
- Detailed and non-commercial website
- Cook Islands National Environment Service பரணிடப்பட்டது 2008-10-15 at the வந்தவழி இயந்திரம்
- Cook Islands Biodiversity Database
- Photographs of CI banknotes including unique 3 dollar bill பரணிடப்பட்டது 2008-04-11 at the வந்தவழி இயந்திரம்