பாலையூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாலையூர் என்பது தமிழ்நாடு, மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும். இது தஞ்சாவூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்ட எல்லைகளைக் கொண்டது. இக்கிராமம் தமிழகத்தின் தலைநகரமான சென்னையிலிருந்து 282 கிலோமீட்டரில் உள்ளது. தற்போதைய மக்கள்தொகை 2,000.[1] அருகிலுள்ள கிராமங்கள்: பேராவூர், நக்கம்பாடி, கொக்கூர், விஜயநகரம், தூத்துக்குடி, தரங்கம்பாடி, காரைக்கால் மற்றும் சீர்காழி. காரைக்காலில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில் அமைந்துள்ளது.

விவசாயம் மற்றும் முக்கிய பயிர்கள்[தொகு]

நெல், பருத்தி, சோளம் ஆகியவை முக்கியமான வணிக பயிர்களாகும். மாவட்டத்தில் பெரும்பாலும் வண்டல் மண் பரவிக் காணப்படுகின்றன. குறிப்பாக பாலையூரில் வாழை, தென்னை, மிளகாய், நிலக்கடலை, கீரைகள் மற்றும் மஞ்சள் போன்றவைகள் சிறிய அளவில் வளரக்கூடியதற்கு ஏற்ற மண்ணாக உள்ளது.

மேற்கோள்கள்:[தொகு]

  1. "Map Of Palaiyur Village In Thiruvarur, Tamil Nadu". பார்க்கப்பட்ட நாள் 2015-09-22.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலையூர்&oldid=3449641" இலிருந்து மீள்விக்கப்பட்டது