ஜெனிபர் மன்ஸ்பெரேட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜெனிபர் மோன்ஸெர்ராத்தே
சட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2022
தொகுதிதலேகாவ்[1]
சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
2017–2022
தொகுதிதலேகாவ்[2]
சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
2012–2017
முன்னையவர்அத்தனாசியோ மோன்ஸெர்ராத்தே
தொகுதிதலேகாவ்[3]
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
ஜெனிபர் மோன்ஸெர்ராத்தே

24 மார்ச்சு 1970 (1970-03-24) (அகவை 54)
தேசியம் இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
பிற அரசியல்
தொடர்புகள்
இந்திய தேசிய காங்கிரசு
துணைவர்அத்தனாசியோ மோன்ஸெர்ராத்தே
வேலைஅரசியல்வாதி

ஜெனிபர் மோன்ஸெர்ராத்தே (Jennifer Monserrate) என்பவர் இந்தியாவின் கோவா மாநிலத்தைச் சேர்ந்த அரசியல்வாதி. கோவா சட்டமன்றத்திற்கு, தலேகாவ் தொகுதியிலிருந்து மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.[4][5][6] 2012, 2019-ஆம் ஆண்டுத் தேர்தல்களில் இந்திய தேசிய காங்கிரஸ் சார்பிலும் 2022-ஆம் ஆண்டுத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பிலும் போட்டியிட்டு வெற்றிபெற்றுத் தற்போதைய தலேகாவ் தொகுதி உறுப்பினராக உள்ளார். 2012 ஆகத்து முதல் பொதுக் கணக்குக் குழுவிலும் புகார்மனுக் குழுவிலும் உறுப்பினராக உள்ளார்.

மருத்துவர். பிரமோத் சாவந்த் தலைமையிலான அரசின் வருவாய் மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சராக 2019 யூலையில் பதவியேற்றார். சாவந்த் தலைமையிலான அமைச்சரவையின் ஒரே பெண் அமைச்சரும் இவரேயாவார். 2019 யூலையில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியிலிருந்து பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த பத்து உறுப்பினர்களுள் இவரும் ஒருவர்.[7][8]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

ஜெனிபர், அரசியல்வாதியும், கோவா சட்டமன்ற உறுப்பினராக மூன்றாம் முறையாக இருப்பவருமான பாபுஷ் மோன்ஸெர்ராத்தே என்று அழைக்கப்படும் அத்தனாசியோ மோன்ஸெர்ராத்தேவின் மனைவி ஆவார். இவ்விருவரும் 2012 முதல், கோவா சட்டமன்றத்தில் உறுப்பினர்களாக இருக்கும் முதல் இணையர்கள் என ஏற்கப்பட்டனர்.[9][10]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Jennifer Monserrate (Winner) TALEIGAO (NORTH GOA)". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 22 பிப்ரவரி 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "Jennifer Monserrate (Winner) TALEIGAO (NORTH GOA)". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 22 பிப்ரவரி 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "Jennifer Monserrate (Winner) TALEIGAO (NORTH GOA)". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 22 பிப்ரவரி 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. "Indian National Congress Constituency : 12-Taleigao Votes Polled : 20616 Votes Received : 10682 Won By : 1151". goaassembly.gov.in. Archived from the original on 31 May 2016. பார்க்கப்பட்ட நாள் 16 May 2016.
  5. "MLA Jennifer Monserrate will continue as members of the commission for another term". timesofindia.indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் 16 May 2016.
  6. "The guest of honour was Dr Desh Prabhudessai. Taleigao MLA Jennifer Monserrate". navhindtimes.in. பார்க்கப்பட்ட நாள் 16 May 2016.
  7. 10 former Goa Congress MLAs, who joined BJP, reach Delhi to meet Amit Shah
  8. In fresh jolt to Congress in Goa, 10 party legislators switch to BJP
  9. "My husband has been framed in rape case: Jennifer Monserrate". timesofindia.indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் 16 May 2016.
  10. "Goa Minor Rape Case: Accused MLA's Wife Cries Political Vendetta". newindianexpress.com. பார்க்கப்பட்ட நாள் 16 May 2016.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெனிபர்_மன்ஸ்பெரேட்&oldid=3930453" இலிருந்து மீள்விக்கப்பட்டது