மதுரை ராமநாதபுரம் திருமண்டிலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மதுரை இராமநாதபுரம் திருமண்டிலம்
அமைவிடம்
நாடுஇந்தியா
மாநிலம்தென்னிந்தியத் திருச்சபை
விவரம்
கதீட்ரல்சிஎஸ்ஐ பேராலயம், மதுரை
இணையதளம்
www.csidmr.com

மதுரை இராமநாதபுரம் திருமண்டிலம் (Madurai-Ramnad Diocese) என்பது தமிழ்நாட்டிலுள்ள தென்னிந்தியத் திருச்சபையின் கீழுள்ள ஒரு திருமண்டிலமாகும். தென்னிந்திய திருச்சபைக்குட்பட்ட 24 திருமண்டிலங்களில் இதுவும் ஒன்று. தென் இந்திய திருச்சபையானது 1947 ம் ஆண்டு 14 திருமண்டிலங்களாக பிரிக்கப்பட்டபோது அதில் ஒரு திருமண்டிலமாக மதுரை ராமநாதபுரம் திருமண்டிலம் பிரிக்கப்பட்டது.[1] இத் திருமண்டிலம், தமிழகத்திலுள்ள மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், ஆகிய ஆறு மாவட்டங்களை உள்ளடக்கியது. இதன் பிரதான திருச்சபை மதுரை நரிமேட்டில் அமைந்துள்ளது.

பேராயர்கள்[தொகு]

  • Rt.Rev. லெஸ்லீ நியூபிகின் (1947-1959)
  • Rt.Rev. ஜார்ஜ் தேவதாஸ் (1959-1978)
  • Rt.Rev. டேவிட் ஞானையா போதிராஜுலு (1978 -1994)
  • Rt.Rev. தவராஜ் டேவிட் ஏம்ஸ் (1994-2004)
  • Rt.Rev. கிறிஸ்டோபர் ஆசீர் (2004-2012)
  • Rt.Rev. ஜோசப் (2012 முதல்)[2]

குறிப்பிடத்தக்க திருச்சபைகள்[தொகு]

  • சி.எஸ்.ஐ. கத்தீட்ரல் சபை, நரிமேடு, மதுரை,
இந்த திருச்சபையானது தென்கிழக்கு ஆசியாவிலுள்ள மிகப்பெரிய பிரதான சபைகளில் ஒன்றாக கருதப்படுகிறது, இந்த பிரதான சபையானது கோதிக் பாணியில், நேர்த்தியான கட்டிடக்கலையுடனும், தமிழ் கலாச்சாரத்தை கருத்தில் கொண்டும், இறையியலுக்கு முக்கியத்துவம் அளித்தும் 4 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. இந்த சபையானது மார்ச் 30, 1986 ஆம் ஆண்டு ஈஸ்டர் தினத்தன்று, தலைமை பேராயர் அருள்திரு. டாக்டர். ஐ. ஜேசுதாசரால் மங்களப்படைப்பு செய்யப்பட்டது.
  • மேரி கிளாரா நினைவு தேவாலயம், மேலூர், மதுரை மாவட்டம்.
  • அபிசேகநாதர் சி.எஸ்.ஐ. தேவாலயம், சிவகங்கை (வடக்கு).
  • சி.எஸ்.ஐ. உவேப் நினைவு தேவாலயம், பொன்னகரம், மதுரை

கல்வி நிறுவனங்கள்[தொகு]

  • சி.எஸ்.ஐ. பல் மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், மதுரை[3]
  • சி.எஸ்.ஐ. பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கே. புதூர், மதுரை
  • சி.எஸ்.ஐ. ஜெயராஜ் அன்னபாக்கியம் செவிலியர் கல்லூரி, பசுமலை, மதுரை
  • சி.எஸ்.ஐ. தொழிற்பயிற்சி மையம், பசுமலை, மதுரை
  • சி.எஸ்.ஐ. கல்வியியல் கல்லூரி, ராமநாதபுரம்
  • சி.எஸ்.ஐ. கல்வியியல் கல்லூரி, பசுமலை, மதுரை
  • சி.எஸ்.ஐ. ஆசிரியர் பயிற்சி நிறுவனம், வத்தலக்குண்டு
  • சி.எஸ்.ஐ. ஆசிரியர் பயிற்சி நிறுவனம், திருமங்கலம், மதுரை

மேலும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-05-23. பார்க்கப்பட்ட நாள் 2017-06-29.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-05-06. பார்க்கப்பட்ட நாள் 2017-06-29.
  3. http://csidentalcollege.edu.in/csi/?p=134

வெளியிணைப்புகள்[தொகு]