மதுரை ராமநாதபுரம் திருமண்டிலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வரலாறு[தொகு]

தென் இந்திய திருச்சபையானது 1947 ம் ஆண்டு 14 திருமண்டிலங்களாக பிரிக்கப்பட்டபோது அதில் ஒரு திருமண்டிலமாக மதுரை ராமநாதபுரம் திருமண்டிலம் பிரிக்கப்பட்டது.[1]

திருமண்டிலம் குறித்து[தொகு]

மதுரை ராமநாதபுரம் திருமண்டிலம், தமிழகத்திலுள்ள மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், போன்ற ஆறு மாவட்டங்களை உள்ளடக்கியது. இந்த திருமண்டிலத்தின் பிரதான திருச்சபை மதுரை நரிமேட்டில் அமைந்துள்ளது.

பேராயர்கள்[தொகு]

  • Rt.Rev. லெஸ்லீ நியூபிகின் (1947-1959)[2]
  • Rt.Rev. ஜார்ஜ் தேவதாஸ் (1959-1978)
  • Rt.Rev. டேவிட் ஞானையா போதிராஜுலு (1978 -1994)
  • Rt.Rev. தவராஜ் டேவிட் ஏம்ஸ் (1994-2004)
  • Rt.Rev. கிறிஸ்டோபர் ஆசீர் (2004-2012)[3]
  • Rt.Rev. ஜோசப் (2012 முதல்)[4]

குறிப்பிடத்தக்க திருச்சபைகள்[தொகு]

  • சி.எஸ்.ஐ. கத்தீட்ரல் சபை, நரிமேடு, மதுரை,

இந்த திருச்சபையானது தென்கிழக்கு ஆசியாவிலுள்ள மிகப்பெரிய பிரதான சபைகளில் ஒன்றாக கருதப்படுகிறது, இந்த பிரதான சபையானது கோதிக் பாணியில், நேர்த்தியான கட்டிடக்கலையுடனும், தமிழ் கலாச்சாரத்தை கருத்தில் கொண்டும், இறையியலுக்கு முக்கியத்துவம் அளித்தும் 4 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. இந்த சபையானது மார்ச் 30, 1986ம் ஆண்டு ஈஸ்டர் தினத்தன்று, தலைமை பேராயர் அருள்திரு. டாக்டர். ஐ. ஜேசுதாசன் அவர்களால் மங்களப்படைப்பு செய்யப்பட்டது.

  • மேரி கிளாரா நினைவு தேவாலயம், மேலூர், மதுரை மாவட்டம்.
  • அபிசேகநாதர் சி.எஸ்.ஐ. தேவாலயம், சிவகங்கை (வடக்கு).
  • சி.எஸ்.ஐ. உவேப் நினைவு தேவாலயம், பொன்னகரம், மதுரை

மதுரை ராமநாதபுரம் திருமண்டில கல்வி நிறுவனங்கள்[தொகு]

  • சி.எஸ்.ஐ. பல் மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், மதுரை[5]
  • சி.எஸ்.ஐ. பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கே. புதூர், மதுரை
  • சி.எஸ்.ஐ. ஜெயராஜ் அன்னபாக்கியம் செவிலியர் கல்லூரி, பசுமலை, மதுரை
  • சி.எஸ்.ஐ. தொழிற்பயிற்சி மையம், பசுமலை, மதுரை
  • சி.எஸ்.ஐ. கல்வியியல் கல்லூரி, ராமநாதபுரம்
  • சி.எஸ்.ஐ. கல்வியியல் கல்லூரி, பசுமலை, மதுரை
  • சி.எஸ்.ஐ. ஆசிரியர் பயிற்சி நிறுவனம், வத்தலக்குண்டு
  • சி.எஸ்.ஐ. ஆசிரியர் பயிற்சி நிறுவனம், திருமங்கலம், மதுரை

மேலும் பார்க்க[தொகு]

  1. http://www.csidmr.org/history.html
  2. https://en.wikipedia.org/wiki/Lesslie_Newbigin
  3. https://en.wikipedia.org/wiki/Christopher_Asir
  4. http://www.csidmr.org/office_bearers.html
  5. http://csidentalcollege.edu.in/csi/?p=134