செம்பருந்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செம்பருந்து
கருடன், இந்தியா
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
H. indus
இருசொற் பெயரீடு
செம்பருந்து
பீட்டர் போடர்ட், 1783

செம்பருந்து[2] (Brahminy Kite, Haliastur indus) செம்மண் நிற இறக்கைகளைக் கொண்டு உடலின் நடுப்பகுதியை வெண்ணிறமாக உடைய பருந்து. இந்து சமயப் புராணங்களில் திருமாலின் வாகனமாக வரும் செம்பருந்து ஒன்றைக் கருடன்[3] என்ற பெயரில் வணங்குவர்.

விவரிப்பு[தொகு]

இவை இந்திய துணைக்கண்டம், தென் கிழக்காசியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இடங்களில் காணப்படுகிறது. இதன் தலை, கழுத்து, நெஞ்சு மற்றும் சிறகின் விளிம்பு தனிப்பட்ட வெள்ளை நிறத்தில் காணப்படும். இது கரும்பருந்தின் நெருங்கிய உறவினர்.[4] இது சில சமயம் 5000 அடிக்கு மேலுள்ள இமயமலையிலும் காணப்படும்.[5] இதைப் போன்ற பருந்து வகைகள் இந்தியா, இலங்கை, பாக்கித்தான், வங்காளம் போன்ற நாடுகளில் அதிகம் காணப்படும்.சாவகத்தில் இந்த இனம் அழிந்து போய்விட்டது.[6]

பெரும்பாலும் இப்பறவை இறந்த மீன்களை உணவாகக் கொள்வதால் கடற்கரைப் பகுதிகளிலும் உள்நாட்டு நீர்நிலைகளிலும் காணப்படும்.

சிறப்புகள்[தொகு]

இந்து சமயத்தில் கருடன் திருமாலின் வாகனமாகக் கருதப்படுகிறது.

உசாத்துணை[தொகு]

  • Hadden, Don (2004). Birds and Bird Lore of Bougainville and the North Solomons. Alderley, Qld: Dove Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-9590257-5-8.

மற்ற மூலங்கள்[தொகு]

  • Jayabalan,JA (1995) Breeding ecology of Brahminy Kite Haliastur indus in Cauvery Delta, south India. Ph.D. Dissertation, Bharathidasan University. Mannampandal, Tamil Nadu.
  • Raghunathan,K (1985) Miscellaneous notes: a peculiar feeding habit of Brahminy Kite. Blackbuck. 1(3), 26-28.
  • Jayakumar,S (1987) Feeding ecology of wintering Brahminy Kite (Haliastur indus) near Point Calimere Wildlife Sanctuary. M.Sc. Thesis, Bharathidasan University, Tiruchirapalli.
  • Hicks, R. K. 1992. Brahminy Kite Haliastur indus fishing? Muruk 5:143-144.
  • van Balen, B. S., and W. M. Rombang. 2001. Nocturnal feeding by Brahminy Kites. Australian Bird Watcher 18:126.

மேற்கோள்[தொகு]

  1. "Haliastur indus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2008. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2009.
  2. அலி, சாலிம். "76. Brahminy Kite". The Book of Indian Birds (13 ed.). Bombay Natural History Society, Oxford University Press. p. 96. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 019566523-6. {{cite book}}: |access-date= requires |url= (help)
  3. சென்னைப் பல்கலைக் கழக இணையப் பேரகரமுதலி[தொடர்பிழந்த இணைப்பு]
  4. Wink M, Sauer-Gürth H (2000). "Advances in the molecular systematics of African Raptors". Raptors at Risk (PDF). WWGBP/HancockHouse. pp. 135–147. {{cite book}}: Unknown parameter |editors= ignored (help)
  5. Dodsworth,PTL (1912). "Extension of the habitat of the Brahminy Kite (Haliastur indus)". J. Bombay Nat. Hist. Soc. 21 (2): 665–666. 
  6. van Balen, B. S., I. S. Suwelo, D. S. Hadi, D. Soepomo, R. Marlon, and Mutiarina (1993). "Decline of the Brahminy Kite Haliastur indus on Java". Forktail 8: 83–88. 

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Haliastur indus
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
"https://ta.wikipedia.org/w/index.php?title=செம்பருந்து&oldid=3769684" இலிருந்து மீள்விக்கப்பட்டது