சாமுகி
ஷாமுகி | |
---|---|
எழுத்து முறை வகை | அப்ஜத்
|
திசை | Right-to-left |
மொழிகள் | பஞ்சாபி
|
தொடர்புடைய எழுத்து முறைகள் | |
மூல முறைகள் | |
ஒருங்குறி | |
U+0600 to U+06FF U+0750 to U+077F | |
சாமுகி (Shahmukhi, ஷாமுகி, பஞ்சாபி மொழி: شاہ مکھی, குர்முகி: ਸ਼ਾਹਮੁਖੀ, பஞ்சாபி மொழியை எழுத பஞ்சாபிலுள்ள முசுலிம்கள் பயன்படுத்தும் பெர்சிய-அராபிய எழுத்துமுறை ஆகும்; இதன் நேரடிப் பொருள் "அரசரின் (ஷா) வாயிலிருந்து" என்பதாகும். இது பொதுவாக நஸ்தலீகு வரிவடிவத்தில் எழுதப்படுகின்றது. பஞ்சாபி மொழியில் பயன்படுத்தப்படும் இரு எழுத்துமுறைகளில் பெர்சிய-அராபிய முறை ஒன்றாகும்; மற்றது குர்முகி.
சாமுகி எழுத்துமுறையை முதலில் பஞ்சாபின் சூபி கவிஞர்கள் பயன்படுத்தினர்; 1947இல் பாக்கித்தான் உருவாக்கத்தை அடுத்து பாக்கித்தானிய பஞ்சாபில் முஸ்லிம் மக்கள் எழுதும் வழமையான எழுத்துமுறையானது; தற்கால இந்திய பஞ்சாபில் இந்துக்களும் சீக்கியர்களும் குர்முகி எழுத்துமுறையைத் தழுவினர்.
இந்தியப் பஞ்சாபில் இதன் பயன்பாடு பெரும்பாலும் மூத்த தலைமுறையினரிடம் மட்டுமே உள்ளது. ஆயினும் பஞ்சாபி மொழியில் முதுகலைப் பட்டப்படிப்பு படிப்பவர்களுக்கு இந்த எழுத்துமுறையை அறிந்திருப்பது பரிந்துரைக்கப்பட்டுள்ளது.[1] இருப்பினும் இந்திய சம்மு காசுமீரில் போத்தோயரி பேச்சுமொழியைப் பதிய முதன்மை எழுத்துமுறையாக சாமுகி பயன்படுத்தப்படுகின்றது.
சாமுகி வலதுபுறம் தொடங்கி இடது புறம் நோக்கி எழுதப்படுகின்றது; குர்முகி இடதிலிருந்து வலதாக எழுதப்படுகின்றது. இரண்டு எழுத்துமுறைகளுக்கும் உள்ள ஒப்பீட்டைக் கீழே காணலாம்:
மேற்சான்றுகள்
[தொகு]- ↑ "Re: Sangam: Gurmukhi to Shahmukhi(Urdu) transliteration software". Sikhmatrimonials.com. 2006-06-27. பார்க்கப்பட்ட நாள் 2014-02-08.
வெளி இணைப்புகள்
[தொகு]- Shahmukhi to Gurmukhi Transliteration System: A Corpus based Approach
- The Western Panjabi Alphabet பரணிடப்பட்டது 2017-11-30 at the வந்தவழி இயந்திரம்
- Learn Shahmukhi
- Likhari in Shahmukhi பரணிடப்பட்டது 2004-03-15 at the வந்தவழி இயந்திரம்
- Kalam-e-Baba Nanak
- Punjabi and Punjab பரணிடப்பட்டது 2011-07-15 at the வந்தவழி இயந்திரம்
- E-Book on Gurmukhi and Shahmukhi
- PDF on Gurmukhi and Shahmukhi பரணிடப்பட்டது 2018-09-03 at the வந்தவழி இயந்திரம்