சாமுகி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஷாமுகி
வகை அப்ஜத்
மொழிகள் பஞ்சாபி
  • மாஜி பேச்சுமொழி
  • இந்த்கோ பேச்சுமொழி
  • சரக்கி பேச்சுமொழி
காலக்கட்டம்
மூல முறைகள் புரோட்டோ-சினைடிக்
 → பீனிசிய
  → அராமைக்
   → நபாட்டேன்
    → அராபிக்
     → பெர்சிய
      → ஷாமுகி
ஒருங்குறி அட்டவணை U+0600 to U+06FF

U+0750 to U+077F
U+FB50 to U+FDFF
U+FE70 to U+FEFF

சாமுகி (Shahmukhi, ஷாமுகி, பஞ்சாபி: شاہ مکھی, குர்முகி: ਸ਼ਾਹਮੁਖੀ, பஞ்சாபி மொழியை எழுத பஞ்சாபிலுள்ள முசுலிம்கள் பயன்படுத்தும் பெர்சிய-அராபிய எழுத்துமுறை ஆகும்; இதன் நேரடிப் பொருள் "அரசரின் (ஷா) வாயிலிருந்து" என்பதாகும். இது பொதுவாக நஸ்தலீகு வரிவடிவத்தில் எழுதப்படுகின்றது. பஞ்சாபி மொழியில் பயன்படுத்தப்படும் இரு எழுத்துமுறைகளில் பெர்சிய-அராபிய முறை ஒன்றாகும்; மற்றது குர்முகி.

சாமுகி எழுத்துமுறையை முதலில் பஞ்சாபின் சூபி கவிஞர்கள் பயன்படுத்தினர்; 1947இல் பாக்கித்தான் உருவாக்கத்தை அடுத்து பாக்கித்தானிய பஞ்சாபில் முஸ்லிம் மக்கள் எழுதும் வழமையான எழுத்துமுறையானது; தற்கால இந்திய பஞ்சாபில் இந்துக்களும் சீக்கியர்களும் குர்முகி எழுத்துமுறையைத் தழுவினர்.

இந்தியப் பஞ்சாபில் இதன் பயன்பாடு பெரும்பாலும் மூத்த தலைமுறையினரிடம் மட்டுமே உள்ளது. ஆயினும் பஞ்சாபி மொழியில் முதுகலைப் பட்டப்படிப்பு படிப்பவர்களுக்கு இந்த எழுத்துமுறையை அறிந்திருப்பது பரிந்துரைக்கப்பட்டுள்ளது.[1] இருப்பினும் இந்திய சம்மு காசுமீரில் போத்தோயரி பேச்சுமொழியைப் பதிய முதன்மை எழுத்துமுறையாக சாமுகி பயன்படுத்தப்படுகின்றது.

சாமுகி வலதுபுறம் தொடங்கி இடது புறம் நோக்கி எழுதப்படுகின்றது; குர்முகி இடதிலிருந்து வலதாக எழுதப்படுகின்றது. இரண்டு எழுத்துமுறைகளுக்கும் உள்ள ஒப்பீட்டைக் கீழே காணலாம்:

மேல் இடது: பன்னாட்டு ஒலிப்பியல் அரிச்சுவடி, dash, மேல் வலது: குர்முகி, கீழே: சாமுகி.

மேற்சான்றுகள்[தொகு]

  1. "Re: Sangam: Gurmukhi to Shahmukhi(Urdu) transliteration software". Sikhmatrimonials.com. 2006-06-27. 2014-02-08 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாமுகி&oldid=3434249" இருந்து மீள்விக்கப்பட்டது