வலைவாசல்:இயற்பியல்/சிறப்புப் படங்கள்/வியாழன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அணுவுலை விபத்துகள்[தொகு]

அணுவுலை மற்றும் கதிரியக்க விபத்துகள் (Nuclear and radiation accidents) என்பவை மக்கள், சுற்றுச்சூழல் அல்லது அணுவுலை மற்றும் கதிரியக்க மையம் ஆகியவற்றிற்கு குறிப்பிடத்தக்க கதிரியக்க விளைவுகளை ஏற்படுத்தும் நிகழ்வுகளாக பன்னாட்டு அணுசக்தி முகமையகத்தால் வரையறை செய்யப்பட்டுள்ளது. தனி நபர்களுக்கு மரணத்தை ஏற்படுத்தும் விளைவுகள் (கதிரியக்க நச்சேற்றம்), சுற்றுச்சூழலில் பெருமளவு கதிரியக்கத்தை வெளியிடல், அணு உலையின் நடுப்பகுதி எதிர்பாராத விதத்தில் உருகுதல் ஆகியவற்றை இத்தகு விபத்துகளுக்கு உதாரணங்களாகக் கொள்ளலாம்.

செர்னோபில் அணு உலை விபத்துக்குப் பின் எடுக்கப்பட்ட 4 ஆவது அணு உலையின் படம்
செர்னோபில் அணு உலை விபத்துக்குப் பின் உக்ரைன்னின் பிரிப்யாட் நகரம்
புக்குஷிமா டா இச்சி அணு உலை