விக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு105

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கருத்துதிர்ப்பு: கூகளின் தமிழ் எழுத்துணரி - தமிழ்க் கலைக்களஞ்சியங்களை விக்கியாக்கம் செய்தல் போட்டி[தொகு]

அண்மையில் இரவி, கூகிள் தமிழ் எழுத்துணரி வியக்கத்தக்க வகையில் நன்றாகச் செயற்படுகிறது என்று அறிமுகப்படுத்தி இருந்தார். பார்க்க: https://www.facebook.com/ravidreams/posts/10154278945453569. முதற்கட்ட பரிசோதனைகள் அப்படியே தெரிகின்றன. இதனைப் பயன்படுத்தி விக்கிப்பீடியா பேச்சு:விக்கித் திட்டம் தமிழ்க் கலைக்களஞ்சியங்கள் விக்கியாக்கம் (இதனையும் பார்க்க: விக்கிப்பீடியா:கலைக்களஞ்சியத் தலைப்புகள்/கலைக்களஞ்சியம்/அ)செயற்திட்டத்தை ஒரு போட்டியாக மேற்கொள்ள முடியும், அல்லது அப்படி முயற்சித்துப் பார்க்கலாம் என்று தோன்றுகிறது. ஒரு தொகுதியின் அனைத்து படங்களின் அடைவையும் கூகிள் ஆவணத்தில் ஏற்ற முடியும். பின்னர் அதன் ஒவ்வொரு கட்டுரைகளையும் விக்கி மூலத்தில் சேர்க்க முடியும். அப்படிச் சேர்க்கும் போது, சேர்க்கும் பயனர் அந்தக் கட்டுரையை மெய்ப்புப்பார்க்க வேண்டும் (proof read). வேறு ஒரு பயனரும் அதனை உறுதி செய்ய முடியும். படங்களையும் சேர்க்க வேண்டும் . யார் கூடிய கட்டுரைகளை சேர்க்கிறார்கள் (மெய்ப்புப்பார்க்கிறார்கள்) என்று பார்த்து பரிசில்கள் வழங்க முடியும். பரிசில்களை ஒவ்வொரு மாதமும் வழங்குவதும், கவனிக்கத்தக்க பரிசில்களாக அமைவதும் ஊக்கத்தை அதிகரிக்கும். (நெடிய, சிறிய கட்டுரைகள் இருக்க வாய்ப்பு உண்டு. எனவே ஒரு random generator மூலம் எஞ்சி இருக்கும் கட்டுரைகளை போட்டியில் பங்குபெறும் பயனர்களுக்கு பகிர முடியும்.) --Natkeeran (பேச்சு) 01:12, 22 செப்டம்பர் 2015 (UTC)

Natkeeran, இது அவ்வளவாக செயல்படவில்லை, இதுகுறித்து சில ஆய்வுகளை செய்தேன், இந்த எழுத்துணரி 1925-க்கு பிறகு வந்த நூல்களுக்கு ஓரளவிற்கு (சுமார் 75%) வேலை செய்கிறது. ஆயினும் நம்மிடமுள்ள நூல்களில் சில பக்கங்களை மேலதிக ஆய்வுக்கு உட்படுத்தி நன்றாக வேலை செய்யும் நூல்களை தனியாக பட்டியலிட்டு போட்டியைத் தொடரலாம். கவனிக்க @Ravidreams and மதனாஹரன்:. நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 04:04, 22 செப்டம்பர் 2015 (UTC)
மேற்கூறிய கலைக்களஞ்சியத்தில் எழுத்துச் சீர்திருத்தத்திற்கு முந்திய எழுத்துகள் பயன்படுத்தப்படும் இடங்களில் சிக்கல் நேர்கிறது. ஏனைய இடங்கள் கிட்டத்தட்டச் சரியாகவே உள்ளன. நற்கீரன் கூறியபடி செய்யலாம். கூகுள் எழுத்துணரியைப் பயன்படுத்துவது தட்டச்சிடும் நேரத்தை மீதப்படுத்தும். அதனைப் பயன்படுத்தலாம். --மதனாகரன் (பேச்சு) 07:05, 22 செப்டம்பர் 2015 (UTC)
சிறுவர் கலைக்களஞ்சியத்தில் இருந்து ஒரு பக்கம். பொது கலைக்களஞ்சியத்தில் இருந்து ஒரு பக்கம். பெருமளவு சரியாக இருக்கிறது. சில பழைய எழுத்துகளை இனம் காண்பதில் சிக்கல் இருக்கிறது. மற்றபடி, வரிகளை ஒடிக்கும் போது சொற்களை உடைத்திருப்பதைச் சீர் செய்ய வேண்டி இருக்கும். ஏற்கனவே, பெங்களூர் கிறித்து பல்கலை மாணவர்கள் கல்வியில் விக்கிப்பீடியா திட்டம் மூலம் ஒரு சில பக்கங்களை உரைவடிவில் கொண்டு வர முனைந்து வருகின்றனர். நேரடியாக கட்டுரைகளை இடாமல் விக்கிமூலத்தின் Proofread நீட்சி மூலம் பக்கம் பக்கமாக சரி பார்ப்பது வினைத்திறம் மிக்கதாக இருக்கும். இரு கலைக்களஞ்சியங்களில் 20 தொகுதிகளையும் சேர்த்து மொத்தம் 8376 பக்கங்கள். முனைப்பான பங்களிப்பாளர் 10 பேர் ஒரு நாளுக்கு 10 பக்கம் என்று சரி பார்த்தால், மூன்று மாதத்தில் முடிக்கலாம் :) இக்கட்டுரைகளை அப்படியே விக்கிமூலத்தில் இட்டு, தேவைப்படும் தலைப்புகளை மட்டும் ஒவ்வொன்றாக இற்றைப்படுத்தி, விக்கிப்படுத்தி அதன் பிறகு விக்கிப்பீடியாவுக்கு நகர்த்துவதே சரியாக இருக்கும். ஆங்கில விக்கிமூலத்தில் என்சைக்ளோபீடியா பிரித்தானிக்காவை இட்டு வைத்திருக்கும் முறையை மாதிரியாகக் கொள்ளலாம். இதனைப் போட்டி வைத்தும் செய்யலாம். வழமையான தமிழ் விக்கிப்பீடியா முனைவுத் திட்டமாகவும் செய்யலாம். செய்து முடித்த பிறகு பிழை கண்டுபிடிப்போருக்கு மட்டும் பரிசு என்று கூட அறிவிக்கலாம். நிற்க! இது ஒரு புறம் இருக்க, த. இ. க. பல்வேறு ஆக்கங்களை உரைக்கு மாற்றும் பணியை ஆட்கள் வைத்து செய்ய எண்ணி இருக்கிறார்கள். அதில் இந்த ஆக்கங்களுக்கு முன்னுரிமை கொடுத்து உரையாகவே பெற்றுக் கொள்ளும் வாய்ப்பும் உண்டு. தமிழ் விக்கிப்பீடியர்களின் வளத்தைக் கருத்தில் கொண்டு எந்த அணுகுமுறை என்பதைத் தேர்ந்தெடுக்கலாம்.--இரவி (பேச்சு) 13:35, 22 செப்டம்பர் 2015 (UTC)
கருத்துக்களுக்கு நன்றி. இந்த மாதிரிப் போட்டியை முன்னெடுக்க ஒரு சிறு குழு முழுமையாக ஈடுபட்டு உழைத்தாலே வெற்றி பெறும். இரவி, த. இ. க நிறைவேற்றுவது என்றால், குத்துமதிப்பாக எந்தக் காலப்பகுதியில் நிறைவேற்றப்படும் என்று கூற முடியுமா. --Natkeeran (பேச்சு) 13:36, 1 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]

தமிழக ஊராட்சிகள் தானியங்கிக் கட்டுரையாக்கம்[தொகு]

த.இ.க. மற்றும் தமிழக ஊரக வளர்ச்சித்துறையின் தகவலுதவியால் உருவாகப் போகும் தானியங்கிக் கட்டுரைக்கான மாதிரிப் பக்கங்களை உருவாக்கியுள்ளேன். பழைய கட்டுரைகள் சிதையாத வண்ணமும், தொடர் இற்றையுடன் தானியக்க இணக்கமாகவும் திட்டமிடுவோம். உங்கள் கருத்துக்களை இங்கு அறியத் தரலாம்.-நீச்சல்காரன் (பேச்சு) 04:18, 30 செப்டம்பர் 2015 (UTC)

2016 இந்திய விக்கிமாநாட்டைப் பொறுப்பேற்று நடத்த அழைப்பு[தொகு]

அன்புடையீர் வணக்கம்,

விக்கிமாநாடு இந்தியா 2016 மாநாட்டினைத் தமிழ் விக்கிப்பீடியர்கள் பொறுப்பேற்று நடத்த வரவேற்கிறோம். இம்மாநாட்டைத் தங்கள் நகரத்தில் நடத்த விரும்புவோரிடம் இருந்து கோரிக்கைகளை வரவேற்கிறோம். நகரத் தெரிவு இரு சுற்றுகளாக நடக்கவிருக்கின்றன. முதல் சுற்று, அனைவரும் பங்கேற்கும் வகையில் எளியமுறையில் அமைக்கப்பட்டுள்ளது. முதல் சுற்றின் நோக்கம் உள்ளூர் விக்கிச் சமூகத்தின் ஆதரவையும் வலுவையும் உறுதி செய்வதே ஆகும். முதல் சுற்றில் தேர்வாகும் 5 நகரங்கள் அடுத்த சுற்றுக்குச் செல்லும்.

முதல் சுற்றில் தேர்வாவதற்கான அடிப்படைகள்

  • நகரமும் இடமும். இந்நகரம் இந்தியாவில் அமைந்திருக்க வேண்டும். குறைந்தது உள்நாட்டு வானூர்தி சேவையையாவது கொண்டிருக்க வேண்டும்.
  • இம்மாநாட்டைப் பொறுப்பேற்று நடத்த உறுதி அளிக்கும் முனைப்பான விக்கிமீடியா பங்களிப்பாளர்கள் கையெழுத்துகள்.
  • ஆலமரத்தடியில் இதுகுறித்து விவாதித்து, சமூகத்தின் ஒப்புதல் பெற்றதற்கான இணைப்பைக் கொடுக்க வேண்டும்.
  • குறிப்பிட்ட நகரத்தில் குறைந்தது 500 பங்கேற்பாளர்களைக் கொண்டு இந்நிகழ்வை நடத்துவதற்குத் தேவைப்படும் மொத்தப் பணம் (வெளியூர்களில் இருந்து உதவித் தொகை பெற்றுக் கொள்ளும் 100 பங்களிப்பாளர்கள் 3 நாட்கள் தங்குவதற்கான செலவையும் கருத்தில் கொள்ளவும்).
  • ஏற்கனவே இவ்வாறான நிகழ்வுகளை நடத்தியதற்கான அனுபவம் ஏதுமிருப்பின் குறிப்பிடவும்>

உங்களுடைய கோரிக்கையை அக்டோபர் 18, 2015 இந்திய நேரம் இரவு 11:59 -க்கு முன் இங்கு பதிவிடவும்.

நன்றி,

விக்கிமாநாடு இந்தியா 2016 தன்னார்வலர்கள் குழு சார்பாக --இரவி (பேச்சு) 07:13, 30 செப்டம்பர் 2015 (UTC)

கருத்துக்கள் தேவை[தொகு]

ஆப்பிரிக்க-அமெரிக்கக் கணிதவியலாளர்கள் பட்டியல் - இக்கட்டுரையின் பெரும்பகுதி ஆங்கிலத்திலேயே உள்ளது. தமிழில் உள்ளவற்றுக்கும் சிவப்பு இணைப்புக்களே உள்ளன. 16 செப்டம்பர் 2015‎ இல் உருவாக்கப்பட்ட இக்கட்டுரை எவ்வித முன்னேற்றமுமின்றி உள்ளது. இக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது என்று கருதி விட்டுவிடுவதா (எதுவரை?) அல்லது நீக்கிவிடுவதா? இவ்வாறான கட்டுரைகளை விட்டுவிடுவதால், இவ்வுதாரணம் பல அரைகுறைக் கட்டுரைகளுக்கு வழி ஏற்படுத்தும் அல்லவா? --AntanO 19:19, 1 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]

தமிழாக்கம் செய்யப்பட வேன்டிய கட்டுரைகளைக் கவனித்து அவற்றை நீண்ட காலம் தேங்க விடாது (அதிக பட்சம் 1 கிழமை) துப்பரவாக்க வேண்டும். மொழிபெயர்க்கப்படாத பகுதிகள் நீக்கப்பட வேண்டும். மேற்குறிப்பிட்ட முழுமையாக தமிழாக்கப்படாத கட்டுரைகளை நீக்கலாம். விரும்பினால் மீண்டும் உருவாக்குவதற்கு நீண்ட நேரம் பிடிக்காது. பொதுவாக மொழிபெயர்க்கபடாத கட்டுரைகளோ அல்லது பகுதிகளோ எப்போதுமே (ஒரு நாள் கூட) தமிழ் விக்கியில் இருக்கக் கூடாது என்றே விரும்புகிறேன்.--Kanags \உரையாடுக 00:55, 2 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]
👍 விருப்பம் --AntanO 10:24, 3 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]

நூல்கள் பற்றிய கட்டுரைகள்[தொகு]

விக்கிப்பீடியாவில் நூல்கள் குறித்த கட்டுரைகளுக்கு ஏதாவது வரைமுறைகள் உள்ளனவா? எந்த மாதிரியான நூல்கள் பற்றியும் எழுதலாமா? அல்லது குறிப்பிட்டுக் கூறக்கூடியதாக இருக்க வேண்டுமா? எவ்வாறு வரையறுப்பது? இது குறித்து ஆங்கில விக்கியில் ஏதாவது உதவிப் பக்கங்கள் உளனவா? அல்லது இது குறித்து இங்கு நாம் உரையாடியுள்ளோமா?--Kanags \உரையாடுக 08:16, 3 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]

en:Wikipedia:Notability (books) ஆ.வி.யில் உள்ளது. இதை ஒட்டி இங்கு வழிகாட்டல் பக்கம் உருவாக்குவது நல்லது. --AntanO 10:19, 3 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]
en:Template:Notability guide - இவற்றையும் கருத்திற் கொள்ளல் நன்று. குழப்பமின்றி, குறித்த வழிகாட்டலில் இயங்குவது சிறப்பாகவும், வீணான உரையாடல்களுக்கு இடமின்றிவிடும். --AntanO 10:23, 3 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]
முன்பு நடைபெற்றுள்ள உரையாடல்கள் பகுப்பு_பேச்சு:நூல்கள் இங்கு உள்ளன. நூல்களுக்கான குறிப்பிடத்தக்கமையை தவியிலும் கொண்டுவரவேண்டிய நேரமிது. -- Mdmahir (பேச்சு) 10:25, 3 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]
விக்கிப்பீடியா:குறிப்பிடத்தக்கமை (நூல்கள்) என்ற வழிகாட்டியை உருவாக்கியுள்ளேன். (இது மொழிபெயர்க்கப்பட வேண்டும்.)--Kanags \உரையாடுக 22:09, 3 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]

வலைப்பதிவர் சந்திப்பு அழைப்பிதழ்[தொகு]

நான்காவதாண்டாக 2015 தமிழ் வலைப்பதிவர் சந்திப்பு அக்டோபர் 11 அன்று புதுக்கோட்டையில் நடைபெறவுள்ளது. இச்சந்திப்பு கணித்தமிழ் வளர்ச்சிக்கு பல்வேறு வகையில் முக்கியத்துவம் அளிக்கிறது. அதன் பயனாக, தமிழ் விக்கிப்பீடியா வளர்ச்சிக்கும் வாய்ப்புள்ளது. நிகழ்ச்சி அழைப்பிதழ் http://bloggersmeet2015.blogspot.com/2015/10/blog-post_4.html ஆர்வமுள்ளவர்கள், விக்கி வலைப்பதிவர்கள் நிகழ்வில் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறேன். -நீச்சல்காரன் (பேச்சு) 20:04, 9 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]

விக்கிப்பீடியா ஆசியா மாதம்[தொகு]

வணக்கம். வரும் நவம்பர் அல்லது திசம்பரில் விக்கிப்பீடியா ஆசிய மாதம் ஒருங்கிணைக்கப்பட இருக்கிறது. இதில், ஆசிய நாடுகள், அவற்றின் பண்பாடுகள் குறித்த பரந்த தலைப்புகளில் கட்டுரைகளை ஆக்க முனைகிறார்கள். இவ்வாறு குறைந்தது 5 கட்டுரைகளுக்கு மேல் உருவாக்குபவர்களுக்கு மற்ற நாடுகளில் இருந்து அழகிய படங்களுடன் கூடிய அஞ்சல் அட்டை அன்பளிப்பாக அனுப்பி வைக்கப்படும். இத்திட்டம் குறித்த விதிகளை இங்கு பார்க்கலாம். இத்திட்டத்தைத் தமிழ் விக்கிப்பீடியாவில் ஒருங்கிணைக்க ஒரு சிலராவது முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். ஒருங்கிணைப்பாளர்கள் செய்ய வேண்டிய பணிகளை இங்கு காணலாம். இந்தியாவில் இருந்து அஞ்சல் அட்டை அனுப்புகிற பொறுப்பை விக்கிமீடியா இந்தியா கவனித்துக் கொள்கிறது. இலங்கையில் இருந்து அஞ்சல் அட்டைகள் அச்சிட்டு அனுப்பி வைக்க விரும்பினால் அதற்கான செலவுகளைப் பெற முடியும். கவனிக்க: மணியன், அன்டன், Kanags--இரவி (பேச்சு) 06:18, 10 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]

இணைய வழி மூலமும், ஓய்வான நேரத்திலும் உதவ முடியும். நீங்களும், தினேசும் பங்குபற்றுகிறீர்கள் என அறிகிறேன். மேலதிகமோனோர் தேவையா? --AntanO 05:11, 14 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]
Antan, இது முழுக்க இணைய வழியில் நடக்கும் நிகழ்வு மட்டுமே. தினேசின் பங்களிப்பு, தனிப்பட்ட காரணங்களை முன்னிட்டு, அடுத்து ஓரிரு மாதங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டதாகவே இருக்கும். எனவே, நிச்சயம் உதவி தேவை. நிகழ்வு பற்றிய விதிகளைத் தெளிவுபடுத்தல், இத்திட்டம் மூலம் உருவாகும் கட்டுரைகளைப் பகுப்பிடல், 5 கட்டுரைகளுக்கு மேல் புதிதாக உருவாக்குபவர்களை இனங்காணல் போன்ற பணிகளில் உதவி தேவைப்படுகின்றன. நன்றி.--இரவி (பேச்சு) 09:19, 16 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]
@Ravidreams: உதவ முடியும், ஆனாலும் சில வேளைகளில் என்னால் முக்கிய வேலையாக இருக்கும் சந்தர்ப்பங்களில் பங்களிக்க முடியாது போய்விடலாம். மற்றப்படி ஆட்சேபனை இல்லை. --AntanO 07:46, 23 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]

மேற்கோளை உறுதிப்படுத்தல்[தொகு]

பராமரிப்பு செயற்பாடுகளின்போது, பிழையாக அல்லது வலிந்து அல்லது பொருத்தமில்லாத மேற்கோள்கள் இணைக்கப்பட்டிருப்பதை அவதானித்துள்ளேன். சிலவேளை சிக்கலாக மேற்கோள்களும் அமைந்துள்ளன. எ.கா: பறையர் என்ற கட்டுரையில் திருவள்ளுவர், ஒளவையார் என்போர் பறையர் எனக்குறிப்பிட்டு, சான்றாக Encyclopedia of Global Studies Page 1290 என்ற உசாத்துணை குறிக்கப்பட்டுள்ளது. ஆனால் குறித்த இணைப்பு நூலுக்கானது, விடயத்திற்கானதல்ல. இவ்விடத்தில் எவ்வாறு நடந்து கொள்வது என்பது பற்றி முன்னர் பேசப்பட்டதான நினைவு. இது பற்றி அறிந்தவர்கள் அல்லது இவ்வாறான சந்தர்ப்பங்களில் எவ்வாறு செயற்படுவது என்பது பற்றி கருத்துத் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். --AntanO 05:08, 14 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]

Antan, சர்ச்சைக்குரிய தரவுகளுக்கு, நேரடியாக அத்தரவு குறித்த ஒன்றுக்கு மேற்பட்ட நம்பகமான ஆதாரங்கள் தேவை. ஆதாரம் தரத் தவறும் இடங்களில் குறித்த தரவை நீக்கவோ திருத்தி எழுதவோ செய்யலாம்.--இரவி (பேச்சு) 09:21, 16 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--AntanO 07:42, 23 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]

தானியங்கிக் கட்டுரையாக்கத்துக்கான ஒப்புதல் தேவை[தொகு]

தமிழக ஊராட்சிகள் தொடர்பான 12,000+ கட்டுரைகளைப் பதிவேற்றுவதற்கான ஒப்புதலைக் கோருகிறோம். வாக்கெடுப்பில் கலந்து கொள்ள இங்கு வாருங்கள். நன்றி.--இரவி (பேச்சு) 13:49, 16 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]

ESEA Newsletter October 2015[தொகு]

ESEA Newsletter Header
ESEA Newsletter Header

ESEA Newsletter is out! Check out some amazing work done by Wikimedia Communities in East and Southeast Asia! Here is the summary of the Newsletter.

  • Wikimedia Taiwan initiated a monthly meetup called “A Room of WikiWomen's Own”. They are also planning to incubate Wikipedia of local aboriginal languages in Taiwan.
  • Wikimedia Indonesia is helping to build the Sundanese Wikipedia community by launching various activities called “Wiki Sabanda”.
  • Wikimedians in Kansai successfully held “Wikipedia ARTS”, an offline edit-a-thon, to integrate fine arts information from a library into Wikipedia articles.

MediaWiki message delivery (பேச்சு) 23:15, 18 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]

ஆங்கிலத் தலைப்பில் வழிமாற்றுக்கள்[தொகு]

தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்துகையில், குறிப்பாக கையடக்கத் தொலைபேசிகள் போன்ற சிறு சாதனங்களில் பயன்படுத்தும் சிலருக்கு தமிழில் தட்டச்சிட்டுத் தேடுவது கடினமாக இருக்கலாம். எனவே, ஆங்கிலப் பெயர்களிலும் வழிமாற்றுக்களை ஏற்படுத்துவது நல்லதென நினைக்கிறேன்.--பாஹிம் (பேச்சு) 12:24, 24 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]

விருப்பமில்லை --AntanO 19:03, 25 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]
விருப்பமில்லை --நந்தகுமார் (பேச்சு) 21:03, 25 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]
விருப்பமில்லை இதேநிலை துவக்கத்தில் மேசைக் கணினிகளிலும் இருந்தது; ஆங்கில வழிமாற்றுக்களைத் தந்தால் தமிழை தங்கள் கருவிகளில் பெறவும் உள்ளிடுவதற்கான முனைப்பும் ஈடுபாடு இருக்காது.--மணியன் (பேச்சு) 04:38, 26 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]
விருப்பமில்லை வேறு சில கையடக்கத்தொலைபேசிகளில் தமிழ் விக்கியைப் பார்க்கக் கூட முடியாது!!!. அதற்காக தமிழ் விக்கிக் கட்டுரைகளை ஆங்கில மொழி மூலம் வழங்க முடியாதே!!! தமிழுக்கான விக்கியாகவும் தமிழில் வழங்கும் விக்கியாகவுமே இருத்தல் நலம். நன்றி --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 05:24, 26 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]
விருப்பமில்லை ----சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 06:26, 26 அக்டோபர் 2015 (UTC) மேலுள்ள பல காரணங்களுக்குமாக...[பதிலளி]
👍 விருப்பம் --Chandravathanaa (பேச்சு) 22:26, 27 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]
விருப்பமில்லை --கலை (பேச்சு) 21:04, 7 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]
விருப்பமில்லை --செல்வா (பேச்சு) 21:53, 7 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

தானியங்கியாக்கப் பயிற்சிப் பட்டறை[தொகு]

எதிர்வரும் நவம்பர்த்திங்கள் இறுதியில் சுவீடனில் நடைபெறவுள்ள தானியாங்கியாக்கப் பயிற்சிப் பட்டறையில் பங்குகொள்ள விரும்புபவர்கள் இங்கே விண்ணப்பிக்கலாம். -- சுந்தர் \பேச்சு 11:49, 27 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]

👍 விருப்பம்--Mdmahir (பேச்சு) 05:52, 28 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]

விக்கிசெய்தியில் நிருவாக அணுக்கம்[தொகு]

வணக்கம், விக்கிசெய்திகள் தற்போது ஒரு தொய்வு நிலையை எட்டியுள்ளது. இதனை மீளக் கட்டியெழுப்புவதற்கு செல்வசிவகுருநாதன் முன்வந்துள்ளார். நிருவாக அணுக்கம் அவருக்கு ஒரு பேருதவியாக இருக்கும். அதற்கான வாக்கெடுப்பு இங்கு நடத்தப்படுகிறது. அனைவரும் வாக்களித்து ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.--Kanags \உரையாடுக 12:17, 27 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]

அனைவருக்கும் வணக்கம்! நான் விக்கிப்பீடியாவில் பங்களிக்கத் தொடங்கியதற்கு செய்தித்துறையின் மீது இருந்த ஆர்வமும் ஒரு முக்கியக் காரணமாகும். இதன்காரணமாகவே விக்கிசெய்திகளிலும் பங்களித்து வந்தேன். அங்கு எனக்கு நிருவாக அணுக்கம் இருந்தால், இன்னமும் சிறப்பான பங்களிப்பினைத் தர இயலும். வாக்களித்து ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:42, 27 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]
எனது பங்களிப்புக்கள் (தொகுப்புக்கள்) அங்கு இல்லாததால் வாக்களிக்க முடியாது என நினைக்கிறேன். இந்நிலை பலருக்கும் இருக்கலாம். --AntanO 15:49, 27 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]
@AntanO: அப்படியில்லை, புகுபதிகை செய்த அனைவரும் வாக்களிக்கலாம்.--Kanags \உரையாடுக 20:02, 27 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]
நன்றி. Y ஆயிற்று --AntanO 20:06, 27 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]
சந்திரவதனா, n:விக்கிசெய்தி:நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள் பக்கத்தில் வாக்களியுங்கள்.--Kanags \உரையாடுக 01:42, 28 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]
நன்றி Kanags Y ஆயிற்று --Chandravathanaa (பேச்சு) 08:13, 28 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]

ஐ.சி.டி.பயிற்சி@ஜெயம் கல்லூரி[தொகு]

ஜெயம் கல்லூரியில் நடந்த இன்றைய பயிற்சி {27-10-2015} மிகவும் பயனுள்ளதாக இருந்தது.. மேலும் அனைத்து ஆசிாியப் பெருமக்களுக்கும் விக்கிபீடியா பயன்படுத்துவதன் முக்கியத்துவம் மற்றும் அதனுடைய சிறப்பான பயன்கள் பற்றி அறிந்து காெண்டு வரும் காலத்தில் சிறப்பான பல தகவல்களை தனக்காகவும் தம்முடைய மாணவா்களுக்காகவும் இந்த தகவல் களஞ்சியத்தின் மூலம் பெற்று பயன்பெறுவா் என நம்புகிறேன்.. நன்றி.----Tamilarasan.m.s (பேச்சு) 10:30, 28 அக்டோபர் 2015 (UTC)−முன்நிற்கும் கருத்து DeepakRajaDpi (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது. [பதிலளி]

வாழ்த்துகள்.--Kanags \உரையாடுக 10:19, 28 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]
👍 விருப்பம் --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 10:56, 28 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--சக்திகுமார் லெட்சுமணன் (பேச்சு) 15:28, 28 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]

பயிற்சி பயனுள்ளதாக இருந்ததை அறிய மகிழ்ச்சி. ::இப்பயிற்சி குறித்த விவரத்தை இங்கு இற்றைப்படுத்தியுள்ளேன். கருத்துகளைத் தொடர்ந்து அங்கு பகிர வேண்டுகிறேன். --இரவி (பேச்சு) 17:07, 29 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]

பயிற்சி[தொகு]

விக்கிப்பீடியா பயிற்சி அளிப்பவர்கள் புதிய பயனர்களை அவர்களின் மணல்தொட்டியில் முதலில் எழுதிப் பழகப் பயிற்சி அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.--Kanags \உரையாடுக 11:08, 29 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]

👍 விருப்பம்--AntanO 11:21, 29 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]
இப்பயிற்சி குறித்த விவரத்தை இங்கு இற்றைப்படுத்தியுள்ளேன். கருத்துகளைத் தொடர்ந்து அங்கு பகிர வேண்டுகிறேன். --இரவி (பேச்சு) 17:07, 29 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]

இங்கோ அல்லது அங்கோ தெரிவித்தும் பயன் இல்லை. கிட்டத்தட்ட நூற்றுக்கணக்கான கட்டுரைகள் கலைக்களஞ்சியத்திற்கேற்ப உருவாக்கப்படவில்லை. அவை பொது வெளியில் காணப்படுகின்றன. கிட்டத்தட்ட 10 இற்கும் குறைவானவர்களே துப்புரவுப் பணியில் ஈடுபடுகின்றனர். இதில் 5 இற்கும் குறைவாக நிருவாகிகள் உள்ளனர். கூகிள் திட்டம் போன்று இதுவும் அமைந்துவிடாதிருக்கட்டும். --AntanO 13:25, 30 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]

பார்வதி, கவனிக்க. கலைக்களஞ்சிய முக்கியத்துவம் உள்ள தலைப்புகளில் இருந்து பயிற்சிக்கான கட்டுரைகளை உருவாக்கலாம். குறிப்பிடத்தக்கமை இல்லாத கட்டுரைகள் (அவர் தம் பள்ளிகள், குடியிருப்புகள்) நீக்கப்படுவதற்கான வாய்ப்புகளே அதிகம். எனவே, பொருத்தமான கட்டுரைகளை மட்டும் மணல்தொட்டியில் இருந்து பொதுவெளிக்கு நகர்த்தலாம். சொந்தமாக உடனடியாக எழுதுவது கடினம் என்றால் ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரைகளை மொழிபெயர்ப்பதற்குக் கோரலாம். மொழிபெயர்ப்புக் கருவியையும் அறிமுகப்படுத்தலாம். துப்புரவுப் பணியாற்றும் பயனர்களுக்குத் தேவையற்ற சுமையைக் குறைக்க வேண்டுகிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 14:04, 30 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]

ஒவ்வொரு மாவட்டம் தோறும் கணினி பற்றிய முன்னனுபவம் இல்லாத ஆசிரியர்களுக்கே இப்பயிற்சி தரப்படுகிறது. எனவே விக்கியில் இப்போது தான் அடியெடுத்து வைக்கும் அவர்களுக்கு என்னாலியன்றவரை தலைப்புகள் குறித்து அறிவுறுத்தினேன்.மணல் தொட்டியில் எழுதக் கோரினேன். விக்சனரி, விக்கிப்பீடியா, பொதுவகம் என மூன்று பயிற்சிகளும் அளிக்கிறேன். தாங்கள் குறித்தவைகளை மனதில் கொள்கிறேன். நன்றி.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 18:27, 30 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]

விக்கி நுட்பத் திறன்கள் கருத்தெடுப்பு[தொகு]

சில வாரங்கள் முன்பு விக்கிமீடியா அறக்கட்டளை ஊடாக தமிழ் விக்கிப்பீடியாவுக்கான வளர்ச்சி வாய்ப்புகள் குறித்து உரையாடினோம். அதன் தொடர்ச்சியாக, தமிழ் விக்கிப்பீடியர்களுக்கு என்று மட்டுமேயான நுட்பத் திறன்கள் பயிற்சிக்கு விக்கிமீடியா அறக்கட்டளை ஏற்பாடு செய்யவிருக்கிறது. இருக்கிற 280+ மொழிச் சமூகங்களில் தமிழ் விக்கிப்பீடியாவை நாடி வந்து இதனைச் செய்கிறார்கள் என்பது நமக்கான பெருமை. இதனைச் சரியான முறையில் பயன்படுத்தி முன்னேற அனைத்து விக்கிப்பீடியர்களையும் கேட்டுக் கொள்கிறேன். இந்தக் கருத்தெடுப்பு அல்லது திட்டம் குறித்து என்ன ஐயம் என்றாலும் இங்கு கேளுங்கள். கருத்தெடுப்பு தொடர்பான அறிவிப்பு கீழே.--இரவி (பேச்சு) 17:46, 5 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

(தமிழாக்கம்)

அன்புள்ள தோழர்களே,

சில மாதங்கள் முன்பு உரையாடியவாறு, விக்கிமீடியா அறக்கட்டளை, தமிழ் விக்கிமீடியா சமூகத்தின் திறன்களை வளர்க்கும் பொருட்டு, அதனுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறது. பல்வேறு திறன்கள் குறித்து தமிழ் விக்கிமீடியா சமூகம் ஆர்வம் கொண்டிருந்தாலும், விக்கி நுட்பத் திறன்கள் தொடர்பாக கூடுதல் ஆர்வம் புலப்பட்டது.

சமூகத்தின் தேவை அறிந்து சரியான முறையில் பயிற்சியைத் திட்டமிட, இக்கருத்தெடுப்பில் கலந்து கொள்ள வேண்டுகிறோம். இது சரியான பயிற்றுநரைக் கொண்டு சரியான தேவைகள் தொடர்பாக பயிற்சி அளிக்க உதவும். இது, நேரடிப் பயிற்சியாக, தமிழ்நாட்டில், வார இறுதியில் அமையும் என்று எதிர்பார்க்கிறோம். இதற்காகச் சிலருக்கு பயண உதவித் தொகை முதலிய உதவிகளும் கிடைக்கலாம்.

உங்களுடன் இணைந்து பணியாற்றுவதை எதிர்நோக்கியுள்ளேன். நன்றி. Asaf (WMF) (பேச்சு) 19:04, 4 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

Dear colleagues,

As discussed a couple of months ago, the Wikimedia Foundation is interested in working with the Tamil community to build the community capacity, and while the community was interested in a number of different capacities, there was some preference for the On-wiki technical skills capacity.

To plan the best possible investment in training the community (training would happen in-person, in Tamil Nadu, probably over a weekend; some domestic travel scholarships will be available), we ask that you fill out this survey (in Tamil). It will help us ensure we offer the most relevant training, and provide the most relevant trainer.

Thank you, and I look forward to working with you! Asaf (WMF) (பேச்சு) 19:04, 4 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

இலக்கணக் குற்றங் களைதல்[தொகு]

இது தமிழ் விக்கிப்பீடியாவா என்பதில் சந்தேகம் நிலவுகிறது. உதாரணமாக, தமிழ் முறைக்கு ஒவ்வாத ட்ரா என்று குறிக்கப்பட்டுள்ள இடங்களை தமிழ் முறைக்கேற்ப ற்றா என்று மாற்றுவதை வேண்டுமென்றே மீண்டும் பிழையான வழக்கத்துக்குக் கொண்டு செல்வது போல் தெரிகிறது. இதில் தமிழ் நாட்டு முறை என்றோ இலங்கை முறை என்றோ கூறுவதில் பொருளில்லை. கூடியளவு தமிழிலக்கணத்தைச் சார்ந்திருப்பதே பொருத்தமென்று தெரிகிறது. இலக்கணக் குற்றங்கள் காணப்படுமிடங்களைத் திருத்த வேண்டுமா வேண்டாமா? அத்தகைய இடங்களுக்குத் தனித் தனியாக இசைவு பெற வேண்டுமா?--பாஹிம் (பேச்சு) 03:19, 7 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

பாகிம், சில எடுத்துக்காட்டுகளையும் தந்திருந்தால் நல்லது. எனினும், உங்கள் பரிந்துரை மெட்ரோ - மெற்றோ, கிளியோபாட்ரா - கிளியோபாற்றா. எனக்கு இதில் உடன்பாடில்லை. தமிழ் முறைப்படி எழுத வேண்டுமானால், மெட்ரோ - மெத்திரோ, கிளியோபாத்திரா என எழுத வேண்டும்.--Kanags \உரையாடுக 03:24, 7 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

நீங்கள் சொல்லும் முறைக்கு ஆதாரம் கிடையாது, கனகு. பெற்றோர் என்பதை petror என்றுதானே வாசிக்கிறீர்கள்? அப்படியாயின் petrol என்பதற்கு ஏன் பெற்றோல் என்பது பிழையென்கிறீர்கள்? இவ்விரு சொற்களிலும் கடைசியெழுத்து மாத்திரம் வேறுபடுகிறது.--பாஹிம் (பேச்சு) 03:29, 7 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

செல்வா, கிளியோபாற்றா, மெற்றோ என எழுதுவதை ஏற்றுக் கொள்கிறீர்களா?--Kanags \உரையாடுக 21:18, 7 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]
நான் கூறியது கூடியமட்டிலும். மெற்றோ என்றோ, கிளியோபாற்றா என்றோ எழுதினால் மாறுதலாக இருப்பதால் ஏற்கத்தகாதது போல் தோன்றும், ஆனால் ஒலிப்பு சரியாகவும் இருக்கும், பார்த்துப் பழகினால் ஏற்கவும் முடியும். மெட்ரோ, பெட்ரோல், கிளியோபாட்ரா என்று எழுதுவது பிறழ்வு. ஆனால் ஏற்கலாம், ஆனால் இப்படியே ஒவ்வொன்றாய் சிதைத்து எதுவும் செய்யலாம் எப்படியும் எழுதலாம் என்னும்படி சீர்குலைந்து போவது ஏற்கமுடியாதது. ஜஸ்ரின் என்றும் ட்ரூடோ என்றும் பௌத்தநாத் என வல்லின ஒற்றில் முடியும் படியும் வல்லின ஒற்றை முதலெழுத்தாகவும், தமிழின் ஒலிப்பையே மாற்றும் யாழ்பாண வழக்க ரகர எழுத்தின் பயன்பாட்டையும் இங்கே பொதுத்தமிழில் பயன்படுத்துவது சரியென்று நினைக்கவில்லை. கோவை மாவட்டத்தில் ஒன்ற, என்ற (உன்னுடைய, என்னுடைய) என்பதைப் பயன்படுத்துகின்றார்கள் என்பதற்காக அப்படியெல்லாம் இங்கே விக்கியில் எழுதலாமா? கூடியமட்டிலும் தமிழ் இலக்கணத்தைப் பின்பற்றி எழுதுவது மிக முக்கியம். மெய்யெழுத்தில் தொடங்கி எழுதுதல், வல்லின ஒற்றில் முடித்தல் முதலானவை கட்டாயம் தவிர்க்கப்படவேண்டியவை. --செல்வா (பேச்சு) 21:50, 7 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]
ஆங்கிலத்தில் எழுதும்பொழுது walk, talk psychology, pneumonia போன்ற ஆயிரக்கணக்கான சொற்களில் ஓர் எழுத்தின் ஒலி இல்லாவிட்டாலும் ஒழுக்கமாக விதிகளைப் பின்பற்றி எழுதுகின்றோம், ஆனால் தமிழில் ஒரு சொல்லின் முதலில் மெய்யெழுத்து வரலாகாது, ஒரு சொல்லின் கடைசியாக வல்லின மெய்யெழுத்து வரலாகாது என்பதை (இவை அறிவார்ந்த இயற்கையான விதியாக இருந்தபோதிலும்) ஏன் தமிழ் விக்கிப்பீடியாவில் பின்பற்றுவதில்லை? கலைக்களஞ்சியம் என்பது சீரிய படைப்பு. இதில் ஒழுக்கமாக கூடியமட்டிலும் இலக்கண விதிகள் பின்பற்றபட வேண்டாமா? ஏதோ ஒரிரு விதிகளை மீறி எழுதுகின்றார்கள் என்பதால் எல்லா விதிகளையும் மீறி எழுதலாமா? பௌத்தநாத் என்று எழுதினால் அதனுடன் -இல், -இலிருந்து என்னும் சொற்களைச் சேர்க்கும்பொழுது பௌத்தநாதில், பௌத்தநாதிலிருந்து என்றா எழுதுவோம், புது இலக்கணம் படைக்கவேண்டுமா? இதெல்லாம் OR (Original Research) ஆகாதா? பௌத்தநாத்து என்று எழுதினால் பௌத்தநாத்தில், பௌத்தநாத்திலிருந்து என்று இலக்கணப்படி உகரம் நீக்கி புணர்த்தி எழுதலாம் அன்றோ? கேக், டாப், நாத் முதலான சொற்களில் வரும் கடைசி வல்லின எழுத்தை அதனை அடுத்து ஓர் உயிரொலி வராமல் மெய்யாகவே ஒலிக்கவே முடியாது. இது அறிவார்ந்த தமிழர் தொல்லறிவு. ஏன் இதனைப் புறக்கணிக்க வேண்டும்? --செல்வா (பேச்சு) 18:21, 8 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--AntanO 18:23, 8 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]
சில இடங்களில் (எ.கா: க்ருத்ராவலீனம்) எது சரியான பெயர் என்பதில் ஏற்படும் குழப்பமும் அவ்வாறான பிழைகளுக்குக் காரணமாகி விடுகின்றன. இவ்வாறே சொல்லின் முன்னும் இறுதியிலும் ஆய்த எழுத்து வராது. (பார்க்க: பேச்சு:ஆய்த எழுத்து) தற்கால ஊடகங்களின் போக்குக்கு தமிழ் விக்கியும் செல்ல வேண்டுமா? எ.கா: Fire என்பதை ஃபயர் எழுதுவதால், அது Fire ஆக உச்சரிக்கப்பட மாட்டாது. ஃ ஒலி எப்படி Fire இல் சரியாக ஒலிக்க முடியும்? ஃபயர் என்பதை (Fire அல்ல) உச்சரிக்கும் ஒலிக்கோப்பு இருந்தால் கேட்க விரும்புகிறேன். --AntanO 18:49, 8 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]
க்ருத்ராவலீனம் என்பது தமிழில் தவறு. கிருத்திராவலீனம் என முறையாக எழுதலாம். ஆய்தம் முதலில் வராது என்பதும் உண்மை. f என்னும் ஒலியைத் தமிழில் கூற பொறியியலாளரும் தமிழறிஞரும் ஆகிய மாணிக்கர் என்பவர் ஃப என்னும் கூட்டெழுத்தைப் பரிந்துரைத்து இப்பொழுது பரவலாக ஆட்சியில் உள்ளது. வகரத்தின் உரசொலித் திரிபுதான் F ஒலி. பகரத்தின் உரசொலித் திரிபாகவும் கொள்ள இடமுண்டு. ஆனால் தமிழில் இவ்வொலி கிடையாது. fire, France போன்றவற்றை பயர், பிரான்சு என்று புதிய எழுத்துகளை நுழைக்காமல் எழுதுவதே நல்லது. வேற்றுமொழிப்பெயர்களைத் தமிழில் சொல்லும்பொழுது ஒலித்திரிபுகள் இருப்பது இயல்புதான். இது எல்லா மொழிக்கும் பொருந்தும். Hanuman, Himalaya என்பதை அனுமன், இமயம் என நாம் எழுதுவது இயல்பு. ஃகனுமான், ஃகிமாலயா என விதிமீறி ஒலிப்பை எழுதிக்காட்டலாம், ஆனால் சொல்லாக வழங்கும்பொழுது அனுமன், இமயம், இதயம் (Hridaya) என எழுதுவதே தமிழின் எளிமையும் இனிமையும் போற்றுதல் ஆகும். ஆங்கிலேயன் மணி, வள்ளி, ஞானசம்பந்தன், ஏன் தமிழ் என்பதைக்கூட சரியாகச் சொல்லமுடியாதே. இவையெல்லாம் திரிபுடன் வழங்கிவருதல் இயல்பே. ஆங்கிலத்தில் தகர ஒலி கிடையாது, ழகரம், ணகரம், டகரம், ளகரம், ஞகரம் என பற்பல ஒலிகள் கிடையா, பல மூக்கொலிகள் கிடையா. ஆதலால் அவர்கள் வேற்றொலிகளைக் குறிக்கப் புது எழுத்துகளை உருவாக்கிக்கொள்ளவில்லை. திரிபோடு எழுதுதல் இயல்பே. காந்தி என்பதை நாம் kaandhi என்கின்றோம் ஆங்கிலேயன் candy (கேஅண்டி) என்பது போல் gandy என்கின்றார்கள். மெலிந்த தகரம் இல்லாததால். அப்படியே ஒரு விதியை மீறினாலும் எல்லா விதிகளையும் மீறலாம் எனவும் பொருள்கொள்ளலாகாது.--செல்வா (பேச்சு) 19:58, 8 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]