பகுப்பு பேச்சு:நூல்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Notes to create a Template[தொகு]

நூல்

நூல் பெயர் ஆசிரியர் பதிப்பகத்தார் பதிப்பு பக்கங்கள் மொழி காலம் இடம் பொருள்--Natkeeran 07:09, 25 ஏப்ரல் 2006 (UTC)

அத்துடன் ISBNம் உதவியாக இருக்கும். - காயத்திரி 05:31, 20 மார்ச் 2007 (UTC)


பகுப்பு[தொகு]

தமிழல்லாத மொழியிலுள்ள நூல்களுக்காக ஒரு துணைப் பகுப்பை உருவாக்கினால் இலகுவாக இருக்கும் எனக் கருதுகிறேன். - காயத்திரி 05:31, 20 மார்ச் 2007 (UTC)

காயத்திரி, ஆங்கில நூல்களுக்கு என்று தனிப்பகுப்பு உருவாக்கியுள்ளேன். உங்கள் திறமையைக் காட்டுங்கள்:).--Kanags 09:55, 20 மார்ச் 2007 (UTC)

நூல்களின் குறிப்பிடத்தக்கமை[தொகு]

நூலின் ஆசிரியர் விவரத்தையும், சிறுகதைகளைக் கொண்டுள்ளது என்று குறிப்பினையும் நீக்கினால் தகவல்பெட்டி தவிர கட்டுரைப் பக்கத்தில் ஒன்றுமில்லை. நூல்களுக்கான கலைக்களஞ்சிய குறிப்பிடத்தக்கமை குறித்த வரையறைகளை உருவாக்க வேண்டும். --இரவி (பேச்சு) 20:40, 17 மார்ச் 2014 (UTC)

இந்த வரையறை இல்லாமலே, பல கட்டுரைகளில் notability என்ற வார்ப்புருவை இணைப்பது பொருத்தமில்லை. --Natkeeran (பேச்சு) 02:08, 18 மார்ச் 2014 (UTC)

மேலும் தகவல்களுக்குப் பார்க்க: விக்கிப்பீடியா:குறிப்பிடத்தக்கவை

தமிழ் விக்கியில் பல விடயங்களில் இரட்டை நிலை எடுக்கப்படுகிறது போன்று உள்ளது. கிறிக்கட் வீரர்கள், சினிமா, சமயம் என்று வந்தால் notability பற்றி கதை இல்லை. நூல், ஆவணப்படம் என்று வந்தால் notabiltiy வரையறையை உருவாக்கமலே நீக்கு அல்லது notability வார்ப்புருக்கள் இணைக்கப்பட்டு விடுகின்றன. திரிபுர தாண்டவம் என்ன notability இருக்கு? (வாதத்துக்காகவே, எனக்கு அந்தக் கட்டுரை இருப்பதில் ஆட்சோபனை இல்லை.) அல்லது அர்ஜுனன் காதலி போன்ற நூற்றுக்கணக்கான படங்களுக்கு என்ன notability இருக்கும் (கேள்வியே). இல்லை என்று கூறவரவில்லை. மிக இறுக்கமான ஒரு சீர்தரத்தை முன்வைத்தல் அவசியமற்றது. மேலும், notability ஒரு இந்திய மையப் பார்வை வருவதற்கு நிறைய வார்ப்புக்கள் உண்டு. ஏன் என்றால் ஈழத்துக் கலைஞர்கள் பரந்த அறிமுகத்தைப் பெற்றவர்கள் அல்லாமல் இருக்கலாம். அல்லது புகலிடச் சூழலில் அவர்களின் முக்கியத்துவம் இருக்கலாம், ஆனால் இந்தியாவில் அவர்களுக்கு எந்த மதிப்பும் இல்லாமல் இருக்கலாம். ஆகவே இறுக்கமாக notability வரையறை செய்ய வேண்டாம். குறிப்பாக தமிழ் நூல்கள் பற்றிய தகவல்கள் விக்கியில் இடம்பெறுவது மிகவும் பொருத்தமே. --Natkeeran (பேச்சு) 02:25, 18 மார்ச் 2014 (UTC)

பெருந்தலைவர் காமராசர் பிள்ளைத்தமிழ் என்று ஒரு நூல். என்னால் இதற்கு ஆதாரம் கூடத் திரட்டமுடியவில்லை. கன்னிமரா நூலகத்தில் உள்ள இணைப்பைக் கொடுத்திருக்கிறேன். notability என்பது இல்லை. பல கலைஞர்கள் தாங்கள் வாழ்ந்த காலத்தில் notability இல்லாதவர்களே. ஒருவர் குறிப்பிட்ட பதிப்பகம் அல்லது குறிப்பிட்ட ஆசிரியர் குறித்து மட்டுமே நூல்கள் எழுதி வருவாராயின் அவர் paid author இல்லை என உறுதி செய்ய வேண்டியது நம் கடமை. --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 06:23, 18 மார்ச் 2014 (UTC)

நக்கீரன், notability வார்ப்புரு இணைப்பதே இது தொடர்பான உரையாடலைத் துவங்கத் தான்.

//தமிழ் விக்கியில் பல விடயங்களில் இரட்டை நிலை எடுக்கப்படுகிறது போன்று உள்ளது. //

இல்லை, நற்கீரன். எந்த வித நிலைப்பாடுமே இல்லாமல் இருக்கிறோம் என்பது தான் உண்மை. எனவே, நூல்களில் இருந்து இதனைத் தொடங்குகிறேன். ஆளுமைகள், திரைப்படங்கள் என்று மற்ற துறைகளுக்கான உரையாடல்களையும் துவக்குவோம். துறைக்குத் துறை அத்துறை சார்ந்து குறிப்பிடத்தக்கமை மாறுவதும் வழமையே. எனவே, ஒரு துறையில் ஏன் இவ்வளவு இறுக்கம் மற்றொரு துறையில் ஏன் இவ்வளவு இளக்கத்தன்மை என்ற கேள்வியும் பொருத்தமற்றது. எடுத்துக்காட்டுக்கு, 6 பில்லியன் மக்களைப் பற்றியும் நாம் கட்டுரை எழுதுவது இல்லை. ஆனால், பெரும்பாலான திரைப்படங்கள் குறித்து எழுதுகிறோம்.

நூல்கள் குறித்த கட்டுரைகளில் எனக்கு மாற்றுக் கருத்து இருக்கிறது. கேட்கிறேன். உங்களுக்கு மாற்றுக் கருத்து உள்ள துறைகள் குறித்து நீங்கள் கேள்வி எழுப்புங்கள்.

//மிக இறுக்கமான ஒரு சீர்தரத்தை முன்வைத்தல் அவசியமற்றது. //

சரி. இறுக்கமான சீர்தரம் வேண்டாம். ஒரு குறைந்தபட்ச, அடிப்படையான சீர்தரமாவது வேண்டும் அல்லவா? அதனை நீங்கள் முன்மொழியுங்கள். அங்கிருந்து உரையாடலைத் துவங்குவோம். உலகில் அச்சடித்த எல்லா நூல்களையும் திரட்டி இடுவதற்கு IMDB மாதிரி நூல்கள் தரவுத் தளம், Good Reads ஆகியன தான் பொருந்தும். தமிழ் விக்கிப்பீடியா ஒரு கலைக்களஞ்சியம் என்பதால் குறிப்பிடத்தக்கமை வரையறுக்கப்பட வேண்டும்.

//மேலும், notability ஒரு இந்திய மையப் பார்வை வருவதற்கு நிறைய வார்ப்புக்கள் உண்டு. ஏன் என்றால் ஈழத்துக் கலைஞர்கள் பரந்த அறிமுகத்தைப் பெற்றவர்கள் அல்லாமல் இருக்கலாம். அல்லது புகலிடச் சூழலில் அவர்களின் முக்கியத்துவம் இருக்கலாம், ஆனால் இந்தியாவில் அவர்களுக்கு எந்த மதிப்பும் இல்லாமல் இருக்கலாம். //

இது தேவையற்ற அச்சம் மட்டும் இன்றி, உரையாடலைத் திசை திருப்புவதாகவும் இருக்கிறது. நூல்களில் மட்டும் அல்ல, அனைத்துத் துறைகளிலும் மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, தமிழ்நாடு, புலம்பெயர் தமிழர்கள் என்று அனைத்துப் பகுதிகளைச் சார்ந்த துறைகளுக்குக் உள்ளூர் அளவிலான குறிப்பிடத்தக்கமையை ஏற்றுக் கொண்டே வருகிறோம். இந்திய / தமிழ்நாடு மையப்பார்வை என்பது தமிழ் விக்கிப்பீடியாவில் நடைமுறையில் இல்லை.

//தமிழ் நூல்கள் பற்றிய தகவல்கள் விக்கியில் இடம்பெறுவது மிகவும் பொருத்தமே. //

தமிழ் நூல்களைப் பற்றிய தகவலை யாரும் தடுக்கவில்லையே? இது கலைக்களஞ்சியம் என்பதால் தமிழில் அச்சடிக்கப்பட்ட நூல் என்பது மட்டும் இங்கு இடம்பெறுவதற்கான தகுதி ஆகாது என்பதே குறிப்பிட விரும்புவது. நன்றி.--இரவி (பேச்சு) 04:27, 24 மார்ச் 2014 (UTC)


"தமிழ் நூல்களைப் பற்றிய தகவலை யாரும் தடுக்கவில்லையே?" பல தமிழ் நூல்களுக்கு கொள்கை எதுவும் இல்லாமலே notability வார்ப்புரு இடப்பட்டு இருந்தது. "notability வார்ப்புரு இணைப்பதே இது தொடர்பான உரையாடலைத் துவங்கத் தான்." என்பது தவறான அணுகுமுறை. இப்படி என்றால் கொள்கை இல்லாதா பட்சத்தில் எல்லாத் X கட்டுரைகளுக்கும் வார்ப்புரு இணைக்கலாமா. "தமிழில் அச்சடிக்கப்பட்ட நூல் என்பது மட்டும் இங்கு இடம்பெறுவதற்கான தகுதி ஆகாது" என்பதில் எனக்கு கருத்து வேறுபாடு இல்லை. --Natkeeran (பேச்சு) 13:49, 24 மார்ச் 2014 (UTC)
நற்கீரன், கலைக்களஞ்சியக் குறிப்பிடத்தக்க தன்மை உள்ள கட்டுரைகளை மட்டும் விக்கிப்பீடியாவில் எழுத வேண்டும் என்பது அடிப்படை புரிதல். தமிழ் விக்கிப்பீடியா தொடங்கிய 2003ல் எழுதிய முதல் கட்டுரையைக் கூட இதன் அடிப்படையில் கேள்வி கேட்க முடியும். உலகில் இருக்கிற 1008+ துறைகளுக்கும் முதலில் வழிகாட்டல் உருவாக்கி விட்டு அதன் பிறகு தான் கேள்வி கேட்கலாம் என்பதே நடைமுறைச் சாத்தியமற்றது. குறிப்பிடத்தகாத கருத இடம் அளிக்கும் சில கட்டுரைகளை அடையாளப்படுத்தினால் அதன் அடிப்படையில் உரையாடலைத் தொடர முடியும் அல்லவா? தனிப்பட்ட துறை தொடர்பான தெளிவான வழிகாட்டல் இல்லாத போது பொதுவான குறிப்பிடத்தக்க தன்மை தேவையின் அடிப்படையிலேயே கேள்வி எழுப்பலாமே?

ஒரு நூல் குறிப்பிடத்தக்கதா என்பதை அறிய பின்வரும் கேள்விகளை எழுப்பிப் பார்க்கலாம்:

  • பரவலான வாசகர்களால் அறியப்பட்ட நூலா? (வழக்கமாக குறிப்பிட்ட மொழியில் /துறையில் வாசிக்கும் வாசகர்களுக்குத் தெரிந்தால் போதும். அனைத்து மக்களுக்கும் தெரிய வேண்டும் என்றில்லை)
  • பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு காணும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த நூலா?
  • பிற மொழி விக்கிப்பீடியாக்களில் தனிக்கட்டுரை பெறும் அளவுக்கு முக்கியத்துவம் உள்ள நூலா?
  • அதிகம் விற்பனையாகும் நூல்களின் பட்டியலில் உள்ள ஒன்றா?
  • முக்கியத்துவம் வாய்ந்த விருதுகள், பரிசுகளைப் பெற்றுள்ள நூலா? (எது குறிப்பிடத்தக்க விருது என்பது தனி உரையாடல்)
  • வரலாற்று முக்கியத்துவம், செவ்விலக்கியத் தன்மை உடைய நூலா?
  • பள்ளி, கல்லூரிகளில் பாட நூலாக உள்ளதா?
  • பிற ஊடகங்களில் திறனாய்வுகள், உரையாடல்களைப் பெற்றுள்ள நூலா? அதற்கான ஆதாரங்கள் உண்டா?
  • அச்சடிக்கப்பட்ட கலைக்களஞ்சியம் ஒன்றில் இடம்பெறத்தக்கதா?
  • தமிழ் நூல்களுக்கான கலைக்களஞ்சியம் அல்லது நூல்களுக்கான கலைக்களஞ்சியம் என்று ஒன்றை உருவாக்கினால் அதிலாவது இடம்பெறத்தக்க முக்கியத்துவம் உள்ளதா?

இவை எல்லாமே அகநோக்கிலான கேள்விகள். மறுமொழிகள் மாறுபடலாம். ஆனால், இது போன்ற பல்வேறு நோக்குகளில் குறிப்பிடத்தக்க தன்மையை அலசலாம்.

அல்லது, ஏன் இந்நூல் முக்கியத்துவம் வாய்ந்தது என்று கட்டுரையை எழுதுபவரையே விளக்கக் கோரலாம்.

தற்போது இடம்பெறுள்ள நூல்களைப் பற்றிய சில கட்டுரைகளில் ISBN எண், பக்கங்கள், உள்ளடக்கத் தலைப்புகள், பதிப்பாளர் முகவரி, எழுத்தாளர் பெயர் தவிர வேறு எந்தத் தகவலும் இல்லை. இது கிட்டத்தட்ட ஒரு மனிதரைப் பற்றி கட்டுரை எழுதும் போது அவருடைய எடை, உயரம் இன்ன பிற தரவுகளை மட்டும் வைத்து கட்டுரை எழுதுவது போல் உள்ளது.

ஆங்கில விக்கிப்பீடியாவில் நூல்களைப் பற்றிய கட்டுரைகளுக்கான வழிகாட்டல்:

https://en.wikipedia.org/wiki/Wikipedia:Notability_%28books%29

--இரவி (பேச்சு) 13:58, 24 மார்ச் 2014 (UTC)

ரவி, மேலே நீங்கள் முன்வைக்கப்பட்டவை எல்லாம் உங்கள் பரிந்துரையே. தமிழ் விக்கியில் பொதுவாக, இணக்க முடிவில் ஏற்றுக் கொள்ளப்பட்டவை அல்ல. "அதிகம் விற்பனையாகும் நூல்களின் பட்டியலில் உள்ள ஒன்றா?", "முக்கியத்துவம் வாய்ந்த விருதுகள், பரிசுகளைப் பெற்றுள்ள நூலா?", "வரலாற்று முக்கியத்துவம், செவ்விலக்கியத் தன்மை உடைய நூலா?", "பள்ளி, கல்லூரிகளில் பாட நூலாக உள்ளதா?", "அச்சடிக்கப்பட்ட கலைக்களஞ்சியம் ஒன்றில் இடம்பெறத்தக்கதா?", "பள்ளி, கல்லூரிகளில் பாட நூலாக உள்ளதா?", " பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு காணும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த நூலா?" போன்ற கேள்விகளின் அடிப்படையில் பார்த்தால், இப்படியும் பார்க்கலாம்.
  • ஒசுகர் விருது பெற்ற படமா?
  • கோலிவுட் தரத்தில் உள்ள படமா?
  • உலக சினிமா தரத்தில் உள்ள படமா?
  • பிற மொழியில் தழுவி எடுக்கப்படக் கூடிய படமா?
  • விண் வெளிக்கு ஒரு குமிழி அனுப்பினால், அதில் வைத்து அனுப்பக் கூடிய படமா?
  • சினிமாக் கல்லூரியில் இந்தப் படம் பாடமாக உள்ளதா?
  • அச்சிடிக்கப்பட்ட கலைக்களஞ்சியத்தில் இப் படத்துக்கு இடம் இருக்குமா?
  • அதிகப் பேர் பார்த்த படமா? கள்ளக் கொப்பியில் பார்த்தவர்கள் கணக்கில் எடுக்கப்படுவினரா?
  • சங்கத் தமிழர்கள் ரசித்துப் பார்க்கக் கூடிய படமா. அப்படி ஆயின், அதற்கு ஆதாரம் என்ன?

மேற்கூறிய கேள்விகளை ஒரு தமிழ் படம் பற்றி எழுதுகிறவர்கள் கருத்தில் கொள்ளவும். இல்லை எனினில் notability கேள்விக்கு உட்படுத்தப்படும்.

தமிழில நூல் போட்டா, 1000 பிரதிகள் விற்பது கடினம். பெரும்பாலான நூற்கள் கவனிக்கப்படுவதே இல்லை. இன்றும் தமிழில் நூல் வெளியிடுவது என்பது கணிசமாக தடைகளைத் தாண்டி நடைபெறும் ஒன்றே. எனவே மேற்சுட்ட இறுக்கமான வரையறை சற்றும் பொருந்தாது. --Natkeeran (பேச்சு) 14:59, 24 மார்ச் 2014 (UTC)

நற்கீரன், நான் உரையாடல் பக்கத்தில் என்னுடைய கருத்துகளைத் தான் முன்வைக்கிறேன். பலரும் தங்கள் கருத்துகளையும் பரிந்துரைகளையும் முன்வைக்கும் போது இணக்க முடிவு நோக்கி நகர்வோம். மலையாள விக்கிப்பீடியாவில் குறிப்பிடத்தக்க விருதுகள் பெற்ற நூல்கள் / எழுத்தாளர்கள் பற்றி மட்டுமே கட்டுரைகள் எழுதுவது என்று வழமை கொண்டிருக்கிறார்கள். மலையாளத்ததுக்கும் தமிழுக்கும் சமூக, அறிவுத் தளங்களில் பெரிய தொலைவு இல்லை என்றே கருதுகிறேன். ஆங்கிலம் அளவுக்கு இறுக்கமான வரையறை தேவையில்லை என்பதில் ஏற்கனவே உடன்பாடு கொண்டுள்ளேன். ஆனால், குறைந்தபட்ச, அடிப்படை குறிப்பிடத்தக்கமையை நீங்களே பரிந்துரைத்து உரையாடலை அதில் இருந்து தொடர்வது நலமான போக்காக இருக்கும். --இரவி (பேச்சு) 15:05, 24 மார்ச் 2014 (UTC)

மலையாளத்துக்கும் தமிழுக்கும் சமூக, அறிவுத் தளங்களில் பெரிய வேறுபாடு உண்டு. மலையாளத்தில் கல்வி அறிவு, தாய்மொழிக் கல்வி, வாசிப்புப் பழக்கம், படைப்புகள் உருவாக்கம், அறிவுப் பரிமாற்றம் தமிழகத்தை விட குறிப்பிடத்தக்க அளவு (பல மடங்கு!) அதிகம். தமிழ் நூல்களைப் பொருத்தவரையில், அச்சில் வெளிவந்த அனைத்து துறைசார் நூல்கள் (அடங்காதவை: கல்வெட்டுக்கள், தனிப்பட்ட விழா மலர்கள்) பற்றிய தகவல்களும் இடம்பெறலாம் என்பதுவே என் கருத்து. பிற பயனர்களின் கருத்துக்களை அறிய ஆவல். --Natkeeran (பேச்சு) 15:16, 24 மார்ச் 2014 (UTC)

//மலையாளத்தில் கல்வி அறிவு, தாய்மொழிக் கல்வி, வாசிப்புப் பழக்கம், படைப்புகள் உருவாக்கம், அறிவுப் பரிமாற்றம் தமிழகத்தை விட குறிப்பிடத்தக்க அளவு (பல மடங்கு!) அதிகம். //

பல மடங்கு கூடுதல் எல்லாம் இல்லை, நற்கீரன். நீங்கள் குறிப்பிட்ட அனைத்து அடிப்படைகளிலுமே அருகருகே தான் உள்ளோம்.

எடுத்துக்காட்டுக்கு,

இவ்வளவு ஏன், மக்கள் தொகை அடிப்படையில் கூட மலையாள விக்கிப்பீடியாவை விட தமிழ் விக்கிப்பீடியாவைக் கூடுதல் ஆட்கள் பார்க்கிறார்கள்.

கல்வெட்டுக்கள்(!!), தனிப்பட்ட விழா மலர்கள் தவிர அனைத்தையும் ஒரு கலைக்களஞ்சியத்தில் இடம்பெறச் செய்யலாம் என்பது ஒரு வரையறையே இல்லை. ஏற்றுக் கொள்ள இயலாது.--இரவி (பேச்சு) 15:39, 24 மார்ச் 2014 (UTC)

ரவி, தற்போது இரண்டு துருவ கருத்து நிலைகள் உள்ளன. பிற பயனர்களின் கருத்துக்களுக்கு அமைய இணக்க முடிவு எட்டி முன்னேறி நகர்வதே பொருத்தம். அதற்கு இடையில் உங்கள் வரையறையைக்கு ஏற்ப வார்ப்புருக்களை இணைக்க வேண்டாம். --Natkeeran (பேச்சு) 15:44, 24 மார்ச் 2014 (UTC)
sidenote: 14% கல்வியறிவு குறைவு எனப்து பல பத்தாண்டுகள் எடுக்கும். மலையாள இதழ்களின் வாசகர்களை கணக்கில் கொள்ளும் போது, தமிழகம் 2 மடங்கு மக்கள் தொகை என்பது குறிப்பிடத்தக்கது. அப்படி இருந்து மலையாள வாசகர்கள் அதிகம். --Natkeeran (பேச்சு) 15:50, 24 மார்ச் 2014 (UTC)

நூல்களின் குறிப்பிடத்தக்கமையை வரையறுப்பது தொடர்பான நடவடிக்கைகளுக்கு ஒரு நியாயமான கால எல்லைக்கு உடன்பட்டு இது தொடர்பாக பயனர்களின் கருத்துகளைப் பெறுவதற்குப் பொறுப்பேற்பீர்கள் என்றால், வார்ப்புரு இடுவதைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க இயலும்.

//தமிழ் நூல்களைப் பொருத்தவரையில், அச்சில் வெளிவந்த அனைத்து துறைசார் நூல்கள் (அடங்காதவை: கல்வெட்டுக்கள், தனிப்பட்ட விழா மலர்கள்) பற்றிய தகவல்களும் இடம்பெறலாம்//

ஐந்து வயதுக்குக் குறைவான தமிழ் குழந்தைகளைத் தவிர அனைவரைப் பற்றியும் கட்டுரை எழுதலாம் என்பது போல் உள்ளது இந்த வரையறை. தவிர, அச்சில் வருவது மட்டுமே ஒரு தகுதியாகாது என்பதை ஏற்ற உங்கள் முந்தைய நிலைப்பாட்டில் இருந்து முரண்படுகிறது. விக்கிப்பீடியாவில் கவிதை, புதினம் எழுதக்கூடாது என்பது போல விழா மலர்கள், கல்வெட்டுகளை எல்லாம் இடக்கூடாது என்பது ஏற்கனவே உள்ள பொது இணக்க முடிவு தான். மற்ற நூல்களுக்கும் என்ன குறிப்பிடத்தக்கமை வரையறை என்பது தான் இங்கு கேள்வி.

http://shijualex.in/analysis-of-the-indic-language-statistical-report-2012/ பார்த்தால் Page views per lakhs speaker அடிப்படையில் கூட தமிழ், மலையாளத்தை முந்துகிறது. இணையச் சந்தை எடுத்துக் கொண்டால் கூட இந்திக்கு அடுத்து தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதை அறிவோம்.

https://en.wikipedia.org/wiki/Indian_states_ranking_by_literacy_rate பட்டியலில் பெரிய மாநிலங்கள் பட்டியலில் கேரளத்துக்கு அடுத்து தமிழ்நாடு வருகிறது.

கேரளமும் தமிழ்நாடும் இந்திய மாநிலங்களில் பல்வேறு முன்னேற்ற அளவீடுகளில் அடுத்தடுத்த வருவன என்பது பொது அறிவு.

எடுத்துக்காட்டுக்கு,

https://en.wikipedia.org/wiki/Indian_states_ranking_by_media_exposure

https://en.wikipedia.org/wiki/Indian_states_ranking_by_television_ownership

http://timesofindia.indiatimes.com/tech/tech-news/Indias-Net-subscriber-base-touches-238-71m-in-2013-Govt/articleshow/30680772.cms?

மலையாளம் / கேரளத்தின் முன்னேற்றங்களைத் தமிழுடன் ஒப்பிட இத்தரவுகளே கிடைப்பதால் இவற்றை முன்வைக்கிறேன். இதனை இந்திய நடுவப் பார்வையாக கொள்ள வேண்டாம். நன்றி.--இரவி (பேச்சு) 16:29, 24 மார்ச் 2014 (UTC)

அச்சில் வெளிவந்த எல்லா நூல்களையும் பற்றிக் கட்டுரைகள் எழுதுவது ஏற்புடையது அல்ல. அதேவேளை ஆங்கில விக்கியின் "குறிப்பிடத்தக்கதன்மை" குறித்த வழிகாட்டல்கள் எந்த அளவுக்கு நமக்குப் பொருத்தமானவை என்பதுவும் முக்கியமான ஒரு கேள்வி. எடுத்துக்காட்டாக, எல்லாத்துறைகளிலும் எழுதப்படும் நூல்கள் குறித்துத் திறனாய்வுகளும், மீளாய்வுகளும், உரையாடல்களும் இடம்பெறுகின்ற ஆங்கில மொழியில், "பல்வேறுபட்ட, முக்கியமான அச்சில் வெளிவந்த ஆக்கங்களுக்கான விடயமாக அமைதல்" என்னும் நிபந்தனை பொருத்தமானதாக இருக்கலாம். ஆனால், சினிமா, தமிழ் மொழி, இலக்கியம் போன்ற சில துறைகள் தவிர்ந்த பிற துறைகளில் மேற்குறித்தவாறான செயற்பாடுகள் தமிழில் இடம்பெறுவதில்லை என்பதால் தமிழ் விக்கியைப் பொறுத்தவரை இவ்வாறான நிபந்தனைகள் பொருத்தமானதாக அமையா. தமிழ் மக்கள் அறிந்து கொள்ளவேண்டிய, பல்வேறு துறைகளையும் சார்ந்த நூல்கள் பல உள்ளன. குறிப்பிட்ட சில துறைகளில் தமிழில் நூல் வெளிவருவதே அதற்கு ஒரு முக்கியத்துவத்தைக் கொடுக்கக்கூடும். எனவே, ஆங்கில விக்கி வழிகாட்டல்களைப் பிரதி யெடுக்காமல், தமிழ் மொழியினது, தமிழ்ச் சமுதாயத்தினதும் சூழலுக்கு ஏற்ப வழிகாட்டல்களை உருவாக்கிக்கொள்வதே உசிதமானது.
இப்போது சில கட்டுரைகளில் இடப்பட்டுள்ள "Notability" வார்ப்புரு "இந்தக் கட்டுரை பொதுவான குறிப்பிடத்தக்கவை வழிகாட்டுதல்களைப் பின்பற்றாதுள்ளது" என்று குறிப்பிடுகிறது. தமிழ் விக்கிக்கான "குறிப்பிடக்கவை வழிகாட்டுதல்கள்" எதுவும் இல்லாத ஒரு நிலையில் இந்த வார்ப்புருவுக்கு எதுவித பொருளும் கிடையாது. இது குறித்த உரையாடலைத் தொடங்குவதே இவ்வார்ப்புருவின் நோக்கமாக இருந்தால், வார்ப்புருவை வேறு வகையில் மாற்றியமைக்கவேண்டும். அல்லது வழிகாட்டுதல்களை உருவாக்கியபின் பொருத்தமான கட்டுரைகளுக்கு வார்ப்புருவை இடலாம்.
//நூல்களின் குறிப்பிடத்தக்கமையை வரையறுப்பது தொடர்பான நடவடிக்கைகளுக்கு ஒரு நியாயமான கால எல்லைக்கு உடன்பட்டு இது தொடர்பாக பயனர்களின் கருத்துகளைப் பெறுவதற்குப் பொறுப்பேற்பீர்கள் என்றால், வார்ப்புரு இடுவதைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க இயலும்.//
மேற்படி நிபந்தனை ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல. நியாயப்படி, வார்ப்புரு இடவிரும்புபவரே இதற்கான பொறுப்பை ஏற்கவேண்டுமேயொழிய அவ்வாறு வார்ப்புரு இடுவது குறித்துக் கேள்வி எழுப்புபவர் அல்ல. ---மயூரநாதன் (பேச்சு) 20:05, 10 ஏப்ரல் 2014 (UTC)

ஆங்கில விக்கிப்பீடியா அளவுக்கு நாம் இறுக்கம் காட்டத் தேவையில்லை. ஆங்கில விக்கிப்பீடியா வரையறை ஒரு ஒப்பீட்டுக்காகவே தரப்பட்டுள்ளது. தமிழ்ச் சூழலைக் கருதி தமிழ் நூல்களுக்கு இன்னும் இளகிய வரையறை தரலாம். ஆனால், அது என்ன வரையறை என்பதற்கான உரையாடலே இது.

கலைக்களஞ்சியத்தில் எல்லாவற்றையும் எழுத முடியாது. குறிப்பிடத்தக்கவற்றை மட்டுமே எழுதலாம் என்பது அடிப்படை புரிதல். அந்தக் குறிப்பிடத்தக்கமை கட்டுரையில் நடுநிலையான, நம்பகமான, புறவயமான பல்வேறு ஆதாரங்களைக் கொண்டு நிறுவப்படாத போது, இந்த மேம்பாட்டைக் கோரி வார்ப்புரு இட விக்கியில் இடம் உண்டு. இதற்குத் துறை சார் வழிகாட்டல்கள் கட்டாயம் இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை.

எனவே, வார்ப்புருவும் இடாதீர்கள், ஒரு குறைந்தபட்ச வரையறையையும் உருவாக்க மாட்டோம் என்று உரையாடலை ஊறப்போடுவதில் எனக்கு உடன்பாடு இல்லை.

தமிழில் மொத்தம் எத்தனை நூல்கள் பதிப்பாகியுள்ளன என்ற தகவல் தேவை. இது தொடர்பாக இத்துறையில் இயங்கும் சிலரை வினவியபோது உறுதியான தரவு ஏதும் கிட்டவில்லை. இந்தியப் பதிப்புத் துறை பெரும்பாலும் ஒருங்கிணைக்கப்படாத ஒரு துறையாகவே இயங்குவதாகத் தெரிகிறது.

http://chennaieventz.com/images/bapasi2.png - 2014 புத்தகக் காட்சியில் மட்டும் ஐந்து இலட்சம் தலைப்புகள் விற்பதாக விளம்பரப்படுத்துகிறது.

https://en.wikipedia.org/wiki/Chennai_Book_Fair#36th_Book_Fair - ஒரு மில்லியன் தலைப்புகள் விற்கப்பட்டன என்கிறது.

இவற்றில் ஆங்கிலத் தலைப்புகள் உள்ளடங்குமா என்று தெரியவில்லை.

//தமிழில் வருடத்துக்கு முப்பதாயிரம் நூல்கள் வெளிவருகின்றன. அவற்றில் ஐநூறு நூல்களாவது பல்வேறு வகையிலும் முக்கியமானவை.//

என்று ஒரு எழுத்தாளரான செயமோகன் இங்கு குறிப்பிடுகிறார். இப்படிப் பல்வேறு எழுத்தாளர்களின் அளவீடுகளில் பார்த்தாலும் ஒரு 5000 நூல்கள் முக்கியம் என்று கருத இயலுமா? இது ஒவ்வொரு ஆண்டும் வெளியாகும் நூல்களில் 16% கூட கிடையாது. எனவே, நிச்சயம் அச்சில் வரும் அனைத்து நூல்களும் கலைக்களஞ்சிய குறிப்பிடத்தக்கமை பெறுவதாக ஏற்றுக் கொள்ள முடியாது. எவை ஏற்றுக் கொள்ளக்கூடியவை என்பதற்குப் புறவயமான வழிக்காடல்களை உருவாக்க வேண்டும். தமிழ்ச் சூழலில் இணையத்தில் நூல்களைப் பற்றிய தரவுகள் குறைவு தான். ஆனால், வலுவான ஒரு சிற்றிதழ் இயக்கம் இருக்கிறது. அவற்றில் நூல் விமர்சினங்கள் வருகின்றன. பல்வேறு வெகுமக்கள் ஊடகங்களிலும் நூல் அறிமுகப் பகுதிகள் வருகின்றன. புத்தகம் பேசுது என்றே ஒரு இதழ் உள்ளது. இதழ்களைப் பற்றி பலர் கல்லூரிகளில் ஆய்வுகள் செய்கிறார்கள். எனவே, முற்று முழுதாக தமிழ்ச் சூழலில் போதிய உசாத்துணைகள் இல்லை என்று ஒதுக்கி விட முடியாது. இது தொடர்பான கட்டுரைகளை எழுதுபவர்களுக்கு இத்தகைய உசாத்துணைகளைத் தேடி எடுத்து எழுதும் பொறுப்பு உண்டு. --இரவி (பேச்சு)


தமிழில் புத்தகம் பேசுது மட்டுமல்ல; உங்கள் நூலகம் என்ற இதழும் வெளிவருகிறது. இவையிரண்டும் நூல்கள் தொடர்பாகவெனவே வெளியாகுபவை. அது தவிர காலச்சுவடு, தீராநதி, உயிர்மை போன்ற இடநிலை இதழ்கள் முதல் பெருமளவு சஞ்சிகைகளில் மாதந்தோறும் புத்தககங்கள் அறிமுகமாகின்றன. முக்கியமான, விருது பெற்ற நூல்களுக்கு நிச்சயமாக ஒன்றுக்கு மேற்பட்ட அறிமுகங்கள் கிடைக்கும். உண்மையில் பல குறிப்பிடத்தகுதியற்ற நூல்களுக்கே ஒன்றுக்கு மேற்பட்ட அறிமுகங்கள் வெளியாகுவதையும் அவதானிக்கலாம்.

இன்னொரு விடயத்தினையும் கவனிக்க வேண்டும். தமிழில் vanity press வகை நூல்கள் மிக ஏராளம். வெறுமனே எண்ணிக்கையையும் விற்பனையையும் கருத்திற் கொண்டு வந்துவிழும் நூல்கள். அத்தகைய பல நூல்களுக்கு இங்கே இப்பொழுது கட்டுரைகள் உள்ளன. கோபி (பேச்சு) 18:06, 15 ஏப்ரல் 2014 (UTC)

தமிழக நூல்க் கண்காட்சிகளில் பெரிந்துதொகை பன்னாட்டு ஆங்கில/பிற மொழி பதிப்பகங்கள் கலந்து கொள்கின்றன. vanity press, தரம் எதும், தணிக்கை செய்ய்ப்பட வேண்டியவை எவை என்று விக்கி தீர்மானித்தால், அதனால் நிச்சியம் பலன் கிட்டும் என்று எதிர்பாக்கலாம். ஜெயமோகன் பரிந்துரைத்த, அல்லது எழுதிய நூல்கள் பற்றி மட்டுமே விக்கியில் எழுத வேண்டும் என்று இங்கு சட்டம் இயற்றப்பட்டாலும் ஆச்சிரியப்படுவதற்கில்லை. --Natkeeran (பேச்சு) 18:22, 15 ஏப்ரல் 2014 (UTC)

நற்கீரன், vanity press, தரம் எதும், தணிக்கை செய்ய்ப்பட வேண்டியவை எவை என்பவை எவற்றையும் விக்கி தீர்மானிக்க வேண்டியதில்லை. ஆனால் தமிழில் விமர்சன, நூல் அறிமுக மரபுகளே இல்லை என்பதாகவும் ஆதாரம் திரட்ட முடியாது என்பதாகவும் கருதுவது சரியல்ல. இதுவரையான தமிழ் அறிவுச் செயற்பாடுகளனைத்தையும் ஒரேயடியாகப் புறமொதுக்கி இணையஞ் சார்ந்து இயங்குவது பொருத்தமானதல்ல.

கலைக்களஞ்சியமொன்றில் கட்டுரை வரவேண்டியதான பல நூல்கள் தமிழில் ஆண்டுதோறும் வெளியாகின்றன. ”இந்தியச் சூழலில் மொழி இழப்பு” என்ற ஒரு நூல் வெளிவந்ததை அரிமா நோக்கு எனும் சிற்றிதழ் அறிமுகத்தில் அறிந்தேன். இவ்வாறான குறிபிடத்தக்க நூல்கள் வெளியாகின்றன; அவற்றுக்கான அறிமுகங்களும் வெளியாகிக்கொண்டுதான் இருக்கின்றன.

இப்படியான நூல்களுக்கான கட்டுரைகள் அவசியமானவை. எல்லாவற்றையும் எழுதலாம் என்பதாக அமைவது ஒட்டுமொத்தமாக நீர்த்துப்போகச்செய்யும் செயலே.

1000 நூல்கள் வருகின்றன என்றால் 50 ஆவது தேறும். அந்த 50 இல் 5 க்குக் கட்டுரைகள் எழுதக்கூட இங்கே வளங்கள் இல்லை. ஆனால் 1000 இல் எதனை வேண்டுமானாலும் எழுதலாம் என்றால் 15 கட்டுரைகள் வரும்; அந்தப் 15 இல் முக்கியமான 50 இலிருந்து ஒன்றும் வராது. எல்லாம் வரலாம் என்பதனூடாக முக்கியமான 50 தவறவிடப்படுகிறது. இது தமிழ் சார்ந்த அறிவுச்செயற்பாடுகளையே பாதிக்கும். கோபி (பேச்சு) 18:38, 15 ஏப்ரல் 2014 (UTC)

"அந்தப் 15 இல் முக்கியமான 50 இலிருந்து ஒன்றும் வராது"....இந்த முக்கியமான 50 யார் தீர்மானிப்பது. ஒரு விக்கி கொமிட்டி போட்டுச் செய்யலமா? அந்த 50 பற்றியும் நீங்கள் எழுதிவிட்டி, பிறரை 10001 - 11000 நூலைப் பற்றி எழுத விடுங்கோவன். "இணையஞ் சார்ந்து இயங்குவது பொருத்தமானதல்ல"...நல்ல பகிடி. விக்கியே இணையம் சார்ந்தான். ஓலைச்சுவடி சார்ந்து இயங்கலாமா. --Natkeeran (பேச்சு) 18:48, 15 ஏப்ரல் 2014 (UTC)

நற்கீரன் அந்த 50 இனைக் கண்டடைவதற்கான அறிவுச்செயற்பாடுகள் தமிழில் நடந்தவாறே உள்ளன. நூல் அறிமுகங்கள் அத்தகையவையே. எவரும் எதை வேண்டுமானாலும் எழுதலாம் என்று சொல்வதனூடாக அந்த அறிவுச்செயற்பாடுகளின் பயன்பாடே த.வி.க்கு வந்துசேராதிருப்பதற்குத் துணை நிற்கிறீர்கள். நான் இணையஞ் சார்ந்து என்று குறிப்பிட்டது அச்சூடகம் சார்ந்த ஒட்டுமொத்த அறிவினையும் கவனத்திலெடுக்காது விடுவதனையே. ஆத்திரம் உங்கள் கண்களை மறைக்கிறது. கோபி (பேச்சு) 18:56, 15 ஏப்ரல் 2014 (UTC)

மேலும் The book has been the subject[1] of multiple, non-trivial[2] published works whose sources are independent of the book itself.[3] This includes published works in all forms, such as newspaper articles, other books, television documentaries and reviews. Some of these works should contain sufficient critical commentary to allow the article to grow past a simple plot summary. This excludes media re-prints of press releases, flap copy, or other publications where the author, its publisher, agent, or other self-interested parties advertise or speak about the book என்ற ஆங்கிலக் கொள்கையின் அடிப்படையில் நிச்சயமாக குறிப்பிடத்தக்க தமிழ் நூல்களை அடையாளங் காண முடியும். இந்தக் கொள்கை உள்ளிட்ட கொள்கைகளை விக்கிப்பீடியா:குறிப்பிடத்தக்கவை பக்கத்தில் இட்டிருந்தேன். இந்தக் கொள்கைகளை ஒட்டுமொத்தமாக எதிர்ப்பதனூடாக தமிழ் விக்கிப்பீடியாவினைத் தரமுர்த்தக்கூடிய அனைத்துச் செயற்பாடுகளுக்கும் நீங்கள் தடைபோடுகிறீர்கள். கோபி (பேச்சு) 19:03, 15 ஏப்ரல் 2014 (UTC)

குறிப்பிடத்தக்கமை வரையறை தொடர்பான இணக்க முடிவை எட்டுவதற்கான உரையாடல் நிகழும் சூழல் தற்போது தமிழ் விக்கிப்பீடியாவில் இல்லை என்பதால் தற்காலிகமாக இந்தக் குறிப்பிடத்தக்கமை வரையறையை எட்டுவதற்கான முயற்சியைக் கை விடுகிறேன். தகுந்த இடங்களில் https://en.wikipedia.org/wiki/Wikipedia:Notability_%28books%29 வரையறையை முன்வைத்து உரையாடுவோம். நன்றி. --இரவி (பேச்சு) 10:47, 15 சூன் 2014 (UTC)[பதிலளி]

ஆங்கில விக்கிப்பீடிய வழிகாட்டல்[தொகு]

//தமிழில நூல் போட்டா, 1000 பிரதிகள் விற்பது கடினம். பெரும்பாலான நூற்கள் கவனிக்கப்படுவதே இல்லை. இன்றும் தமிழில் நூல் வெளியிடுவது என்பது கணிசமாக தடைகளைத் தாண்டி நடைபெறும் ஒன்றே// இதே சிக்கல் எல்லா மொழி நூல்களுக்கும் பொருந்தும். ஆங்கில விக்கிப்பீடியா வழிகாட்டலை இங்கு படியிடுகிறேன்:

This page gives some rough guidelines intended to be used by Wikipedia editors to decide whether a book should or should not have an article on Wikipedia. While satisfying these notability guidelines generally indicates a book warrants an article, failing to satisfy them is not a criterion for speedy deletion.

These guidelines may be considered a specialized version of en:Wikipedia:Notability, applied to books, reflecting the core Wikipedia policies, including the following:

Claims of notability must adhere to Wikipedia's policy on verifiability; it is not enough to simply assert that a book meets a criterion without substantiating that claim with reliable sources.

"Notability" as used herein is not a reflection of a book's merit. A book may be brilliantly written, fascinating and topical, while still not being notable enough to ensure sufficient verifiable source material exists to create an encyclopedia article about that book.


மேற்கோள்கள்[தொகு]

  1. The "subject" of a work means non-trivial treatment and excludes mere mention of the book, its author or of its publication, price listings and other nonsubstantive detail treatment.
  2. "Non-trivial" excludes personal websites, blogs, bulletin boards, Usenet posts, wikis and other media that are not themselves reliable. An analysis of the manner of treatment is crucial as well; Slashdot.org for example is reliable, but postings to that site by members of the public on a subject do not share the site's imprimatur. Be careful to check that the author, publisher, agent, vendor. etc. of a particular book are in no way interested in any third party source.
  3. Independent does not mean independent of the publishing industry, but only refers to those actually involved with the particular book.
  4. Self-promotion and product placement are not the routes to having an encyclopedia article. The published works must be someone else writing about the book. (See en:Wikipedia:Autobiography for the verifiability and neutrality problems that affect material where the subject of the article itself is the source of the material). The barometer of notability is whether people independent of the subject itself (or of its author, publisher, vendor or agent) have actually considered the book notable enough that they have written and published non-trivial works that focus upon it.
  5. This criterion does not include textbooks or reference books written specifically for study in educational programs, but only independent works deemed sufficiently significant to be the subject of study themselves, such as major works in philosophy, literature, or science.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பகுப்பு_பேச்சு:நூல்கள்&oldid=1678762" இலிருந்து மீள்விக்கப்பட்டது