வட இலங்கை முசுலீம்களின் கட்டாய வெளியேற்றம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

இலங்கைப் பிரச்சினை

பின்னணி
தமிழீழம் * இலங்கைஇலங்கை வரலாற்றுக் காலக்கோடு * இலங்கை இனப்பிரச்சினைக் காலக்கோடு
இலங்கை அரசு
ஈழப் போரின் தொடக்கம் * கறுப்பு யூலைஇனக்கலவரங்கள் * மனித உரிமைகள்இலங்கை அரச பயங்கரவாதம்சிங்களப் பேரினவாதம்தாக்குதல்கள்
விடுதலைப் புலிகள்
புலிகள்தமிழீழம்* தமிழ்த் தேசியம் * புலிகளின் தாக்குதல்கள் * யாழ் முஸ்லீம்கள் கட்டாய வெளியேற்றம்
முக்கிய நபர்கள்
மகிந்த ராஜபக்ச
வே. பிரபாகரன்
சரத் பொன்சேகா
இந்தியத் தலையீடு
பூமாலை நடவடிக்கை
இந்திய இலங்கை ஒப்பந்தம்
இந்திய அமைதி காக்கும் படை
ராஜீவ் காந்திRAW
மேலும் பார்க்க
இலங்கை இராணுவம்
ஈழ இயக்கங்கள்
கொல்லப்பட்ட முக்கிய நபர்கள்
இந்த வார்ப்புருவை: பார்  பேச்சு  தொகு

வட இலங்கை முசுலீம்களின் கட்டாய வெளியேற்றம் என்பது வட மாகாணம், இலங்கையைத் தாயகமாகக் கொண்ட முசுலீம்களை தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உத்தரவுக்கமைய வெளியேற்றப்பட்டமையைக் குறிக்கும். 72 மணித்தியாலங்களுக்குள் யாழ்ப்பாண முசுலீம்கள் மட்டுமல்லாமல் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு (தண்ணீரூற்று) உட்பட இலங்கையின் வட மாகாணம் இருந்த முசுலீம்கள் பெரும்பாலானவர்கள் விடுதலைப் புலிகளால் 1990 இல் வெளியேற்றப்பட்டனர். இந்த வெளியேற்றமானது சிறுபான்மை மக்களின் உரிமைகளை முன்னிறுத்தி மேற்கொள்ளப்படும் ஈழப்போராட்டத்துக்கு ஒரு பாரிய பின்னடைவு எனக் கூறப்படுகிறது. இது தமிழீழ விடுதலைப் புலிகள் இழைத்த பாரிய ஈடுசெய்ய முடியாத தவறு என்பதை அவர்களே பின்னர் ஒத்துக்கொண்டார்கள்.

இவ்வெளியேற்றத்தில் அகதியாக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான (கிட்டத்தட்ட 58,500 [1]) முசுலீம்களில் ஒரு பகுதியினர் தமது தாயகப் பகுதிகளில் மீள்குடியேறினாலும் யாழ்ப்பாணத்தில் நிலவும் யுத்தச் சூழ்நிலையால் பலர் இன்னமும் புத்தளம், அனுராதபுரம் பகுதியில் பல முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர். வவுனியா சாலம்பைக்குளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம் ஊடாக மேற்கொள்ளப்பட்ட கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு நடவடிக்கைகளை அடுத்து அரச அதிபரிடம் இப்பகுதியானது பொதுமக்களிடம் கையளிக்கப்பட்ட பொழுதும் பெரும்பாலாவர்கள் வடக்குக் கிழக்கும் தொடரும் வன்முறைகளாலும் தமது பிள்ளைகளின் படிப்பைக் கருத்திற் கொண்டும் மீளக் குடியமரவில்லை.

[தொகு] வெளி இணைப்புகள்

சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்