சரத் பொன்சேகா
| சரத் பொன்சேகா | |
|---|---|
| பிறப்பு | திசம்பர் 18, 1950 |
| சார்பு | |
| பிரிவு | |
| ஆணை | இலங்கை இராணுவத்தின் முன்னாள் கட்டளைத் தளபதி |
| சமர்/போர்கள் | இலங்கை உள்நாட்டுப் போர் |
| விருதுகள் | RWP, RSP, தேச புத்திர |
ஜெனரல் கர்டியெவா சரத் சந்திரலால் பொன்சேகா (பி.18 திசம்பர்,1950) 2005 டிசம்பர் 6 முதல் இலங்கை இராணுவத்தின் கட்டளைத் தளபதியாக பதவிவகித்து வந்தவர். இவர் இலங்கை உள்நாட்டுப் போரின் தொடக்கம் முதலே இலங்கை இராணுவத்தில் சேவையாற்றி வந்திருக்கின்றார். இவர் அப்பாவி தமிழ் மக்கள் 20000 மேற்பட்டோரை வன்னி போர்முனை பகுதியில் படுகொலை செய்வதற்க்கு காரணமான முக்கிய சூத்திரதாரியாக சர்வதேச மனிதபிமான ஆர்வலர்களால் குற்றம் சாட்டபட்டுள்ளார்.நவம்பர் 16,2009 அன்று தமது பதவியிலிருந்து விலகி இலங்கையின் அடுத்த அதிபர் தேர்தலில் நடப்பு அதிபர் மகிந்த ராஜ்பக்சேவிற்கு எதிராக போட்டியிட முடிவெடுத்தார்.[1][2]
அதிபர் தேர்தலில் தோல்வியடைந்த பொன்சேகா இலங்கை அரசினால் இராணுவப் புரட்சிக்கு திட்டமிட்டார் எனக் குற்றம் சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்டார். இதன் பின்னர் தொடரப்பட்ட வழக்கு விசாரணையில் பொன்சேகா குற்றவாளியாக அடையாளம் காட்டப்பட்டார்[3].
தொடர்பான செய்திகள் உள்ளது.
ஆதாரங்கள் [தொகு]
- ↑ இலங்கை தளபதி திடீர் பதவிவிலகல் பிபிசி செய்தி, பெறப்பட்டது 16 நவம்பர் 2009.
- ↑ இலங்கை இராணுவ தலைவர் பதவி விலகினார் பிபிசி செய்தி, பெறப்பட்டது 12 நவம்பர் 2009.
- ↑ Fonseka convicted by Sri Lanka court martial (ஆங்கிலத்தில்)