சொல்லிசை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ராப் இசை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

சொல்லிசை அல்லது ராப் இசை (Rap music) அல்லது ஹிப் ஹொப் இசை (Hip hop music) ஹிப் ஹொப் பண்பாட்டில் ஒரு வகுப்பு ஆகும். 1970களின் நியூ யார்க் நகரத்தில் ஆப்பிரிக்க அமெரிக்கர்களால் உருவாக்கப்பட்ட இசை இன்று அமெரிக்காவிலும் உலகம் முழுவதிலும் மிகப் புகழ்பெற்ற இசை வகைகளில் ஒன்றாகத் திகழ்கிறது. நியூ யார்க் நகரம் தவிர அட்லான்டா, லாஸ் ஏஞ்சலஸ், டொரான்டோ, லண்டன் நகரில் இன்று பல ராப் இசை கலைஞர்கள் இருக்கிறார்கள். ராப் இசை பலவிதமானவை; அவற்றில் சில: க்ரங்க் (Crunk), ஜி-ஃபங்க் (G-Funk), கிழக்குக் கடற்கரை ராப் (East Coast Rap), கேங்க்ஸ்ட ராப் (Gangsta Rap) ஆகும்.

வரலாறு[தொகு]

பொதுப்பட ராப் இசையின் வரலாறு மூன்று இனத்தில் பிரிக்கப்படலாம்.

ராப் இசையின் "தங்கமான ஆண்டு" (Golden Age of Hip Hop) 1970கள் முதல் 1990 வரை ஆகும். இந்த ஆண்டுகளின் நியூ யார்க் ராப் இசை தலைப்பட்டது. இக்காலப்பகுதியின் ராப் இசையின் பெயர் (Old School). சில புகழ்பெற்ற ராப் இசை கலைஞர்கள் கர்டிஸ் ப்ளோ (Kurtis Blow), ஆப்பிரிக்கா பம்பாட்டா (Afrika Bambaataa), கே ஆர் எஸ்-வன் (KRS-One), எரிக் பி & ராகிம் (Eric B & Rakim), மார்லி மார்ல் (Marley Marl)ஆகியோர்.

1988 முதல் 1996 வரை "கேங்க்ஸ்ட ராப்"பும் கிழக்கு-மேற்கு எதிரிடை ஹிப் ஹாப்பை மேற்பட்டது. 1987 இல் லாஸ் ஏஞ்சலஸ் இல் இருந்த NWA ராப் கூட்டணி "Straight Outta Compton" ஆல்பம் படைத்தார்கள். இந்த ஆல்பம் முதல் பிரதான "கேங்க்ஸ்ட ராப்" ஆல்பம் ஆகும். NWAஇல் இருந்த இசை கலைஞர்கள் ஐஸ் கியூப் (Ice Cube), டாக்டர் ட்ரே (Dr. Dre) மிக புகழ்பெற்ற தனி ஆல்பங்கள் படைத்தார்கள். 1991 இல் ஓக்லன்ட்-இல் இருந்த டூபாக் ஷகூர் (Tupac Shakur) அவரின் முதல் ஆல்பம், "2Pacalypse Now", படைத்தார். 1991 முதல் 1996 வரை 75 மில்லியன் ஆல்பம்கள்ளை விற்று, இன்று வரை உலகில் ராப் ஆல்பம் விற்ற இசை கலைஞர்களின் இவர் முதலாவார்.

1988 முதல் 1993 வரை மேற்கு கடற்கரையில் இருந்த ராப் இசை மிக புகழ்பெற்றதாக இருந்தது. ஆனால் 1994-இல் நியூ யார்க் நகரிலிருந்த நாஸ் (Nas), நொடோரியஸ் பி.ஐ.ஜி (Notorious BIG) என்ற ராப் கலைஞர்கள் இவர்களின் முதல் ஆல்பம்களை படைத்தார்கள்.

நொடோரியஸ் பி.ஐ.ஜியுக்கும் டூபாக் ஷகூருக்கும் 1994 முதல் 1996 வரை எதிரிடை இருந்தது. 1996 செப்டம்பர் மாதத்தில் டூபாக் சுட்டுக்கொல்லப்பட்டு காலமானார். 6 மாதங்கள் பிரகு நொடோரியஸ் பி.ஐ.ஜி சுட்டுக்கொல்லப்பட்டு காலமானார்.

டூபாக், நொடோரியஸ் பி.ஐ.ஜி மரணத்துக்கு பிரகு ஜெய்-சி (Jay-Z), எமினெம் (Eminem), ஒளட்கேஸ்ட் (Outkast), 50 சென்ட் (50 Cent) சில புகழ்பெற்ற ராப் இசை கலைஞர்கள் ஆவார்.

தமிழ் ராப் இசை[தொகு]

முதன்மைக் கட்டுரை: தமிழ்_ராப்_இசை_(சொல்லிசை)


இசை
சொல்லிசை (தமிழ் ராப்)
ராப் இசை
கலைஞர்கள்
டாக்டர் பர்ண்
லங்சடசில்
கிறிசான்
சஞ்சீவன்
சுசித்
வதனா
சுரேசு த வண்
கிளியோபாற்றா VII
குழுக்கள்
சக்ரசோனிக்
சின்ன பேரரசு
பூம்மிரங்சு
யோகி பி உடன் நட்சத்ரா
சைன்
லீகலைசு
த புரபொசி
தமிழ்ப் புலவர்
கைப்பர்கினைட்டிக்சு
கிப்கொப் தமிழா

தொகு
"http://ta.wikipedia.org/w/index.php?title=சொல்லிசை&oldid=1432490" இருந்து மீள்விக்கப்பட்டது